21 ஆகஸ்ட், 2010

தலதா மாளிகை ரந்தோலி பெரஹரா இன்று ஆரம்பம்

ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முக்கிய அம்சமான ரந்தோலி பெரஹரா ஊர்வலம் இன்று ஆரம்பமாகிறது.

வழமையான மக்கள் கூட்டத்தைவிட ரந்தோலி பெரஹராவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை ரந்தோலிப் பெரஹராவைக் காண இன்று கண்டிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸார் பதவி இடைநிறுத்தம்

அதே வேளை, கண்டிப் பெரஹராவின் போது, பொதுமக்கள் மீது கடுமையாக நடந்து கொண்ட இரு பொலிஸாரின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 6000 பொலிஸார் கண்டிப் பெரஹராவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக வெளியிலிருந்து அநேக பொலிஸார் கண்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றாது, பொதுமக்கள் மீது கடுமையாக நடந்து கொண்டதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரித்த மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, களனி பொலிஸ் நிலையத்தில் சேவை புரியும் இருவரைப் பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக