21 ஜூலை, 2010

மீனவர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு:ரணில்

undefined
தமிழக மீனவர் பிரச்சினைக்கு இந்திய, இலங்கை அரசுகளின் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு, டில்லி செல்லும் வழியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, சென்னை சென்ற ரணில், விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியில் உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்திய, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இரு நாட்டு அரசுகளும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

இலங்கை அரசு, தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசிடம் விளக்கம் கேட்க உள்ளோம்.

இலங்கையின் தற்போதைய நிலவரம் திருப்திகரமாக இல்லை. பிரதமருக்கான அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். பொலிஸ், நீதி நிர்வாகம், தொழில் போன்ற பல துறைகளில் பெரும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக