24 ஜூலை, 2010

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம்: ருத்திரகுமாரன்

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம் என்று நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார்.


இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. இது முடிந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இலங்கையின் தமிழ் இன அழிப்பு எண்ணம் குறையவில்லை. மாறாக தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பின்னர் ஏராளமான தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளோம். இலங்கையில் தமிழீழத்தை அமைத்தல், இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்யவேண்டும், அவர்களை செஞ்சிலுவைச் சங்கத்தினர் சென்று பார்வையிட அனுமதிக்கவேண்டும், அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பன்னாட்டுத் தலைவர்களிடம் வைக்கவுள்ளோம்.

இலங்கை அரசின் இன ஒழிப்புக்கு எதிராக நீதி கோரும் வகையில் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக