7 ஏப்ரல், 2010

ஐந்து வருட காலத்தில் திட்டமிட்ட பொருளாதார இலக்கு


மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்


எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொருளாதார இலக்குகளை அடைவதற்கான பொறுப்புகளை புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.

இதன் மூலமே ஜனாதிபதி எதிர்பார்க்கும் தனிநபர் வருமானத்தை 4000 டொலராக அதிகரிப்பது என்ற பொருளாதார இலக்குகளை அடைய முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் 2009ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை நேற்று (5) வெளியிடப்பட்டது.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :- 2009 ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகம் கொடுத்தது. ரூபாயின் பெறுமதி 200 டொலராக உயரும் என சிலர் குறிப்பிட்டனர். ஆனால் சகல சவால்களுக்கும் முகம் கொடுத்து மத்திய தர பொருளாதார வளர்ச்சி பெறப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு முகம் கொடுப்பதில் மட்டுமன்றி பொருளாதாரத்தை முன்னெடுப்பதிலும் ஜனாதிபதி சரியான வழிகளைப் பின்பற்றியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களும் தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரதான உட்கட்டமைப்பு வசதிக்கு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகிறது. ஆனால் மகாவலி திட்டத்துக்கு 1.5 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக