
சீனாவின் வடமேற்கு மாகாணமான கியுங்காய் பகுதியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 617 பேர் பலியாகியுள்ளனர். 10,000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீன நேரப்படி நேற்றுக் காலை 7.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து 3 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக