6 மார்ச், 2010

விலை உயர்வுக்கு போர் செலவே காரணம்: இலங்கை பிரதமர் தகவல்

கொழும்பு : "இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு, சமீபத்தில் நடந்த போர் செலவுகளே காரணம்' என, பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த சண்டையில், கடந்த ஆண்டு மே மாதம் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதன் மூலம், இலங்கையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது. "இந்த தீவிர சண்டைக்காக பல நாடுகளில் ஆயுதங்கள் வாங்கப்பட்டதால் அரசின் செலவு கூடி விட்டது. இதை ஈடு செய்வற்காக தான் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் கூடுதலாக உள்ளது' என, பிரதமர் விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சண்டை முடிந்ததும், விலைவாசி குறைந்து விடும் என எதிர்பார்க்கக்கூடாது. இன்னும் நாங்கள் வாங்கிய ஆயுதங்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பல பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து வருகிறோம். ஏப்ரல் மாதம் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு, பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக