23 மார்ச், 2010

முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நித்யானந்தா







பெங்களூர்செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா முன் ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தார். தியான பீடத்தின் முன்னாள் ஊழியரும் சிஷ்யருமான நித்ய தர்மானந்தா லெனின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது தமிழக போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழக போலீசார் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றும்போது முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்கள் தமிழில் இருந்தன. அதை கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் கொடுத்த லெனினை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே குருசரன் என்பவரும் போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ளார். இதுநாள் வரை நித்யானந்தா தலைமறைவாகவே இருந்த நிலையில் அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தன் தரப்பு நியாயத்தை தெரிவித்து வந்துள்ளார். ஆனால் போலீசிடம் விளக்கம் அளிக்கவோ அல்லது அல்லது பொதுவான பத்திரிகையாளர் சந்திப்பையோ நித்யானந்தா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தா தான் போலீசாரால் கைது செய்யப்படுவதை தவிர்க்க தனது வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக