28 பிப்ரவரி, 2010

36 கட்சிகள், 301 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7620 பேர் களத்தில்
அரசியல் கட்சிகளின் 30 மனுக்கள், 69 சுயேச்சைகள் நிராகரிப்பு




தேர்தலின் மூலம் 196 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக 36 கட்சிகளிலிருந்தும் 301 சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் 7620 பேர் வேட்பாளர் களாகப் போட்டியிடுகி ன்றனர்.

2010 ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவுள்ள, பாராளுமன்ற தேர்தலு க்கான வேட்புமனு க்கள் தாக்கல் செய்த பின்னர் தேர்தல் திணைக்களம் நேற்று உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது.

22 மாவட்டங்களுக்கும் ஏற்றுக்கொ ள்ளப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து 366 வேட்பு மனுக்களும், சுயேச்சைக் குழுக்களிடமிருந்து 370 வேட்பு மனுக்களுமாக மொத்தம் 736 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பாராளுமன்ற தேர்தலுக்கான ஒழுங்கு விதிகளின்படி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தினால் அரசியல் கட்சிகளின் 30 வேட்புமனுக்களும், சுயேச்சைக் குழுக்களின் 69 வேட்பு மனுக்களும் அந்தந்த தெரிவத் தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டன. இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 36 அரசியல் கட்சிகளின் 336 வேட்புமனுக்களும், சுயேச்சைக் குழுக்களின் 301 வேட்பு மனுக்க ளுமாக 637 வேட்பு மனுக்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

196 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 7620 பேர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்றும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜனசெத பெரமுன,

ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய 4 கட்சிகள் மட்டுமே 22 மாவட்டங்களிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 38 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக் குழுக்களுமான 836 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியி டுகின்றனர். கொழும்பு மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதேபோன்று ஆகக் குறைவான வேட்பாளர்களாக 144 பேர் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் 4 அரசியல் கட்சிகளும், 18 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன.

225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். எஞ்சிய 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக