4 ஜனவரி, 2010

சந்திரசேகரனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்து அமைச்சரின் பூதவுடலுக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.
வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு தலவாக்கலையிலுள்ள அமைச்சரின் இல்லத்திலிருந்து பிற்பகல் 3 மணியளவில் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
தலவாக்கலை நகர சபை மைதானத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழக அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் ஆலோசகர்கள், கட்சித் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அஞ்சலிக் கூட்டத்தின் பின்னர் மாலை 6 மணியளவில் அமைச்சரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக