இடம்பெயர்ந்த மக்களை ஜனவரிக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டம்வடக்கு மக்கள் குறித்து பசில் இன்று முக்கிய அறிவிப்பு
இன்னமும் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் மட்டுமே மீளக்குடியமர்த் தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வவுனியாவில் தற்போது 1, 27, 495 பேர் மட்டுமே மீளக் குடியமர காத்திருப்பதாகக் கூறினார். கடந்த வாரம் 132, 748 பேர் அங்கு இரு ந்ததாகவும் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இன்று ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய வட பகுதிக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துப் பேசுவதுடன், வடக்கு மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பொ ன்றைச் செய்வாரென்று அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார். வடபகுதி மக்கள் இது வரை பெற்றிராத விடய ங்கள் தொடர்பாக இந்த அறிவிப்பு வெளி யாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ‘வவுனியாவிலிருந்து மேலும் 5000 பேர் மீளக்குடியமர ஆயத்தமாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2034 பேரும், மன்னாரில் 970 பேரும், திருகோணமலையில் 2762 பேரும் மீளக்குடியமரவும் காத்துள்ளனர். வைத்தியசாலைகளில் 3067 பேர் உள்ளனர். அரசாங்கத்தின் ஐந்தாம் கட்ட மீள்குடியேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் பாராட்டியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் அறிவிப்புடன் சர்வதேசத்திற்கும் மேலும் தெளிவாக நாம் எமது நிலையை எடுத்துரைக்க முடியும். மீள்குடியேற்றம் தாமதமாகுவதாகக் கூறியவர்கள் இன்று பாராட்டுவது நாட்டுக்குக் கெளரவமாகும். நாளை அல்லது மறுதினம் மீள்குடியேற்றம் 50% ஐயும் தாண்டிவிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில், இடர்முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர். |
|
21 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக