9 அக்டோபர், 2010

இளந்திரையன் மனைவி சாட்சியம்









இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் துறை பேச்சாளரான இளந்திரையன் அல்லது மார்ஷல் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களும் சாட்சியமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராசையா சிவரூபனின் மனைவி வனிதா சிவரூபன், 2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை." என தெரிவித்தார்.



இளந்திரையன் மனைவி

கணவன் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களின் பின்பு முகாமில் தங்கியிருந்தபோது, அங்கு சி.ஐ.டி. என தம்மை அறிமுகப்படுத்தி வந்த இருவர் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி தங்களை அழைத்துச் செல்ல வந்த போதிலும் தாம் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார் வனிதா சிவரூபன்.

தனது கணவன் எங்கோ ஓரிடத்தில் உயிருடன் இருப்பதாக தனது நம்பிக்கையை வெளியிட்டு தனது பிள்ளைகளுக்காக கணவனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியமளிக்கையில், தமது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வட்டுவான் என்னுமிடத்தில் ஏனைய பொது மக்களுடன் வந்த போது இராணுவத்தினர் விசாரணைக்கு எனக் கூறி பொது மக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை தன்னால் அறிய முடியாமல் இருப்பதாகக் கூறினார்.



ஆணைக்குழு விசாரணையின் போது சாட்சியமளிக்க சமூகமளித்திருந்த பொது மக்களில் அநேகமானோர் காணாமல் போன தமது கணவர் அல்லது பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்று தருவது தொடர்பாகவே வாய் மூலமும் எழுத்து மூலமும் தமது சாட்சியங்களை ஆணைக்குழு முன் வைத்தனர்.

கடந்த மாதம் இந்த ஆணைக்குழு வன்னியில் அமர்வு மேற்கொண்ட போது, ஆணைக்குழுவின் முன் வந்து சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தனது கணவர் மே 18 ஆம் தேதி இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.

போரின் இறுதி கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் படையினரிடம் சரணடைந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விபரங்களை வெளியிட இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடக்க சாத்தியமிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ரஷியா புதிய ஏவுகணை சோதனை

.



ரஷியாபுலாவாஎன்ற புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. இது கண்டம் விட்டு கண்டம் 150 கிலோ டன் அணுகுண்டுகளை தாங்கியபடி 8 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இந்த ஏவுகணை சோதனை காம்சாத்கா தீப கற்பத்தில் வைத்து நடத்தப்பட்டது.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய ராணுவம் இந்த ஆண்டு ஏற்கனவே 3 ஏவுகணைகள் சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் 2 நீர்மூழ்கி கப்பலை தாக்கக் கூடியதாகும். தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட புலாவா ஏவுகணை மேலும் பல பரிசோதனைகளுக்கு பிறகு ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

தனக்காக மன்னிப்புக் கோர வேண்டாமென பொன்சேகா தெரிவிப்பு

ஜனநாயகத் தேசிய முன்னணித் தலைவர் சரத் பொன்சேகா தனது மனைவி, மக்களிடம் தனக்காக எவரிடமும் மன்னிப்பு கோர வேண்டாம் எனக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவை நேற்று பார்வையிடச் சென்ற போது, தம்மிடம் இவ்வாறு சரத் பொன்சேகா கூறியதாக ஊடகங்களிடம் அனோமா தெரிவித்தார்.

எந்தத் தவறையும் தான் செய்யவில்லை என்றும், எவரும் தனக்காக மன்னிப்பு கோரத் தேவையில்லை என்றும் சரத் பொன்சேகா தம்மிடம் கூறியுள்ளதாக அனோமா மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

ஆண்போல வேடமிட்டு செக்ஸ் மயக்கிய பெண்ணுக்கு 6 மாத சிறை


லண்டன்:ஆண் போல வேடமிட்டு, இளம் பெண்களை மயக்கி அவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட அமெரிக்க பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் பேட்ரீசியா டை(31). இவர் ஆண் போல தன் முடியை மாற்றிக்கொண்டு இளம் வாலிபனை போல திரிந்து டீன்ஏஜ் பெண்களை கவர்ந்து வந்தார். டீன்ஏஜ் பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்து கொண்டார். ஆண் என்று நம்பி காதல் வலையில் விழுந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஒரு இளம் பெண் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பேட்சீரியாவிடம் விசாரணை நடந்தது. உண்மையை ஒப்புக்கொண்டார் இந்த பெண். ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ள ஓகையோ கோர்ட், இனி எந்த டீன்ஏஜ் பெண்களிடமும் பேட்ரீசியா தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, என தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்


இந்தோனேசியாவில்,வடக்கே உள்ள மொலுக்காஸ் தீவில், நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.இந்தோனேசியாவில் உள்ள மொலுக்காஸ் தீவில், நேற்று பகல் 12.43 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னேட் என்ற நகரத்திற்கு அருகே வடகிழக்கு திசையில், பூமிக்கு அடியில் 110 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

சூரியனின் ஒளி பூமியை குளிர்விக்கிறது: ஆய்வில் தகவல்


லண்டன்: காலநிலை மாற்ற்த்தின் பின்னணியில் புவிவெப்பமடைந்து வந்தாலும் அதிகரித்து வரும் சூரியனின் வெப்ப ஒளிக்கற்றைகள், செயல்பாடுகளால் உண்மையில் பூமி குளிர்ச்சி அடைய செய்வதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.வளர்ந்து வரும் நாடுகளில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவினால் நாளுக்கு நாள் புவி வெப்பம் அடைந்து வருகிறது. சூரியனுக்கும்,பருநிலை மாற்றத்திற்கு உள்ள தெ?டர்பு குறித்துகடந்த 2004-முதல் 2007 ஆண்டு வரை ஆராய்ச்சி மேற்கொண்டதில்,புவி வெப்பமடைதலுக்கு அதி கரித்து வரும் மனிதனின் செயல்பாடுகள் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் சூரியனின் வெப்ப வெப்ப ஒளிக்கற்றைகளின் சுழற்சியினால் பனி மலைகள் உருகி வருகின்றன. நதிகள் வறண்டு போயும் உள்ளதாக இயற்கை மாற்றம் குறித்த ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்தஜோன்னா ஹெயாக் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டு ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் சூரிய வெப்ப ஒளிக்கற்றகைள் உண்மையில் பூமி குளிர்ச்சியாகிறது என இதனை கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆராய்ச்சி முடிவினை தெளிவாக உறுதிப்படுத்த முடி யாது. எனினும் மேலும் தீவிர ஆராய்ச்சி மேற்கெ?ண்டு வருவதாகவும் இதற்கு நீண்ட நாட்கள் தேவைப் படும் என வும் டெலிகிராப் பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மரண‌ம்






அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயல‌ர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெ‌ற்ற பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் பே‌சி‌‌வி‌ட்டு நடிக‌ர் எஸ்.எஸ்.சந்திரன், நே‌ற்‌றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சந்திரனை அனுமதித்துள்ளனர்.

அங்கு எஸ்.எஸ்.சந்திரனை பரிசோதத்த மருத்துவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.சந்திரன் உடல் செ‌ன்னை கொண்டுவர ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் அவரது ‌வீ‌ட்டி‌ல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக வை‌க்க‌ப்படு‌கிறது.

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌‌பினராக இரு‌ந்த எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் 100‌‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ங்‌க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை அதிகரிப்பு: பொலிஸார்




கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் இவ்வருடம் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22 எனக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களுள் 17 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர்.

தற்கொலை செய்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் இளம் வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மிகச் சிறிய பிரச்சினைகளுக்காகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

நேட்டோவுக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற 27 வாகனங்கள் மீது தாக்குதல்

நேட்டோ படைகளுக்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற மேலும் 27 எண்ணெய்த் தாங்கி வாகனங்கள் பாகிஸ்தானில் வைத்து ஆயுததாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆயுததாரிகள், இவ்வாகனங்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தியதால் அவை தீப்பற்றி எரியத் தொடங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்திலிருந்து நேட்டோ படைகளின் விநியோக வாகனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட 5 ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இச்சம்பவத்திற்கு பிறகு தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகளைத்தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் நவம்பர் 18இல் திறப்பு

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திறக்கப்பட உள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபை பணிப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தைக் கடலுடன் இணைப்பதற்காக கொழும்பு - கதிர்காம பழைய வீதியின் சுற்றுப்புற பகுதிகள் தோண்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...