8 ஏப்ரல், 2010

அக்கறைப்பற்றில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்

அக்கறைப்பற்று ஆளையடிவேம்பு பகுதியில் சற்றுமுன்னர் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தலின் பின்னரான வன்முறைகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாளர்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, நாவலப்பிட்டியவில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் அதனால் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகளை இரத்துச் செய்யுமாறும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 15 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சுமுகமான நிலையில் மன்னாரில் வாக்களிப்பு

_

வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பகல் 1.00 வரை 27 வீதமானோரே வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

இம்மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 2,66,975 பேர் தகுதி பெற்றுள்ளனர். 209 தேர்தல் தொகுதிகளில் 68 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன.

அதேவேளை, மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம்

காலி தங்கல்ல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்தார்.

எனினும் துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பூசல் காரணமாகவே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இச்சம்பவங்களின் போது எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 67 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளத்தில் அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர் மீது தாக்குதல்

புத்தளம் 4ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள றஹ்மத் நகர் வாக்களிப்பு நியைத்தில், வாக்களித்து விட்டு திரும்பிய அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளரான அப்துல் கபூர் முஹம்மத் நசீம் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று வாகனங்களில் வந்த ஐக்கியத் தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நூர்தீன் மசூர் தலைமையிலான குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புத்தளம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, பாலாவி, எருக்கலம்பிட்டி வாக்குச்சாவடிக்கு முகவராகச் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் ஆசாத் என்பவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த முச்சக்கர
மேலும் இங்கே தொடர்க...

வவு. வாக்காளர்கள் உரிய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை : சிஎம்ஈவி தெரிவிப்பு

வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.

ஒட்டுசுட்டான், நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சுமார் 100 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வவுனியா தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர். தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்பொன்சேகா உடல்நிலை தொடர்பில் பரிசோதனை




இராணுவ தடுப்பகாவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை தொடர்பில் பரிசோதனை ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று வைத்தியர் ஒருவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப் பரிசோதனையின் பிறகு பொன்சேகா தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறித்த வைத்தியர் தெரிவித்தாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 பேர் விடுதலை




யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 இளைஞர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 106 பேரில் 41 பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு


மாத்தறை மாவட்ட ஐக் கிய மக்கள் சுதந்திர முன் னணி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய நேற்று காலை (7) தபால் மூலம் வாக்களித் ததாக மாத்தறை உதவித் தேர்தல் ஆணையாளர் சுனேத் லோசன தெரி வித்தார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு செல்வதற்காகவே இவருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் சட்ட த்தின் 20 (சீ) பிரிவின் பிர காரம் அவருக்கு முன்கூட்டி வாக்களிக்க தேர்தல் ஆணை யாளரின் விசேட அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது, காலை 11.30 மணியளவில் மாத்தறை உதவித் தேர்தல் காரியாலயத்தில் சனத் வாக்களித்தார்.

அவர் நேற்று இந்தியா பயண மாக ஏற்படாகியிருந்தது, ஐ.பி.எல். போட்டிகளில அவர் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளை யாடி வருகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலியா மாவட்டத்தில் இராணுவம் சேவைக்கு அழைப்பு; குழப்பம் விளைவித்தால் வாக்களிப்பு ரத்து - அரச அதிபர்


நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படு த்தும் வகையில் பொலிஸாருடன் இராணுவத்தினரையும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டபிள்யூ. பீ. ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்கென சுமார் இரண்டாயிரம் பொலிஸாரும் 150 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏதாவதொரு வாக்குச்சாவடியிலோ அல்லது ஓர் இடத்திலோ தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுக் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் என்று தெரிவித்த அரச அதிபர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படு மென்றும் கூறினார்.

தேர்தலை அமைதியாக நடத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் பொலிஸாரையும் படையினரையும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களை நேரகாலத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறும் குழப்பகரமான நிலை தோன்றுவதற்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவத்தாட்சி அதிகாரி குமாரசிறி கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்ட பாதுகாப்பு கடமையில் பொலிஸ்மட்டும் அரச அதிபர்


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புக்கென பொலிஸார் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களென்றும் இராணுவத்தினர் அழைக்கப்படமாட் டார்களென்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கே. கணேஷ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தேவையின் நிமித்தம் இராணுவத்தினர் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வாக்குச்சாவ டியில் இருந்து 500 மீற்றர் தொலைவிலேயே நிறுத்தப்படுவார்களென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...