16 பிப்ரவரி, 2010

நைட் விஷன், ரவைகள் அக்கராயன்குளத்திலிருந்து மீட்பு



வட பகுதியிலிருந்து இரவு பார்வை தொலைநோக்கி (நைட் விஷன் பைனாகுலர்) மற்றும் 1500 துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ள தாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அக்கராயன்குளம், ஆந்தன்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட பாரிய தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ. கே. மி 47 ரக மெகஸின், ரி-56 ரக மெகஸின், 3 மிதிவெடிகள், பல்வேறு வகையான பெருந்தொகை துப்பாக்கி ரவைகளையும் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை, கொக்கட்டிச்சோலை பிரதே சத்திலிருந்து கைக்குண்டுகளையும் இராணு வத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்


கொழும்பில் முதலாவது ஹலால் மாநாடு

ஹலால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க திட்டம்



இலங்கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் வரச் செய்வதற்கு இங்கு ஹலால் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமை ச்சரான பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது.

ஹலால் சுற்றலாத்துறை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு மற்றும் ஹலால் நிதி முதலீடு ஆகிய இரு பிரிவுகளில் அமர்வுகள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தன.

ஹலால் உணவென்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான உணவு என்ற கருத்து தவறு என்றும் ஒரு உணவுப் பண்டம் சரியான, முறையான சேர்மானங்களுடன் சுத்தமாகவும் உயர் தரத்துடனும் தயாரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப் படுத்தும் ஒரு முறையே ஹலால் சான்றி தழ் என்று ஜம்இய்யத்துல் உலமா பிர முகர்கள் இங்கு ஹலால் சான்றிதழ் பற்றி விளக்கம் அறிக்கையில் தெரிவித்தனர்.

சைவ உணவு பிரியர்கள் உருளைக்கிழங்கு வறுவலை சைவ உணவென நம்பி உண்பதாகவும் ஆனால் இதைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் சில சமயம் இதைத் தயாரிப்பதற்கு விலங்குக் கொழு ப்பைப் பயன்படுத்துவதுண்டு என்றும் சுட்டிக்காட்டிய இவர்கள், இவ்வாறான உணவுப் பண்டங்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

இலங்கையில் இதுவரை 145 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இச்சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப் பட்டது. நான்காயிரத் துக்கும் மேற்பட்ட பண்டங்கள் இச்சான்றி தழ்களைப் பெற்று விற்பனைக்கு விடப் பட்டுள்ளன. இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா பண்டங்களை ஆய்வுக்குட்படுத்தி இச்சான் றிதழை வழங்கி வருகிறது.




நிலக்கண்ணி, மிதிவெடிகளை அகற்றும் தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு



இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய அரசு சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4+ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் அவுஸ்திரேலியா தூதுவர் திருமதி கெகீ கே. க்ளுக்மன் ணிசூ விஹஙீகுகூலீ றிலீட் றிஙீஞிகீசீஹஙூ கையளித்தார்.

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட, அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




வேட்பு மனுக்களை ஏற்பதற்கான பணிகள் பூர்த்தி:
இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான விண்ணப்பத் திகதி 26வரை நீடிப்பு



பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை மறுதினம் (19) ஆரம்பமாக உள்ளதோடு, வேட்பு மனுக்களை கையேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நேற்று (16) உயர்மட்டக் கூட்டமொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வேட்பு மனுத்தாக்கலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் ஆராயப்பட்டதாக சுமணசிரி தெரிவித்தார். சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.

இதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க இன்று வரையே (17) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லாததால் 26 ஆம் திகதி வரை அதனை நீடிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வசதி அளிக்கப்பட உள்ளது. இடம்பெயர்ந்தோர் தாம் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் அத்தாட்சியுடன் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உள்ள பிரதேசங்களில் 2008 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் கூறியது.

இதேவேளை, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளன. ஐ.ம.சு. முன்னணி 17 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டி யல்களை பூர்த்தி செய்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளதோடு, இந்த வார இறுதிக்குள் அந் தப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ள தாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ் வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ரி.எம்.வி.பி., ஈ.பி.டி.பி. போன்ற கட்சி களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட எதிர்க் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக அறிய வருகிறது. ஐ.தே. முன்னணி யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள தோடு, சரத் பொன்சேகா தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஜே.வி.பி. முயன்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட தயாராகி வருவதோடு, மனோகணேசன் தலைமையிலான கட்சியும் ரவூப்ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸரூம் தேர்தலில் இணைந்து, தனித்து போட்டி யிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி.க்கள் சிலருக்கு இம்முறை தேர்த லில் போட்டியிட அனுமதி கிடைக்காது எனவும், இவர்கள் வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிட தயாராவதாகவும் அறிய வருகிறது.

இதேநேரம் ஐ.ம.சு. முன்னணி திங் கட்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதோடு, வேட்பு மனுத்தாக்கல் 26 ஆம் திகதி நண்பகலுடன நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...


சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாககீ கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். நாம் மேலும் தமிழ் உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனினும் உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் இதுவரை நாம் அறிவிக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் தமது தீர்மானம் குறித்த கருத்தினை வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதித் தேர்தல் முழுமையாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை :பொதுநலவாய நாடுகளின் குழு



மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில்,தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை." எனத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னரான அபிவிருத்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து அவர் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,இவ் அபிவிருத்திகள் ஒரு பதற்ற நிலையை அதிகரித்துள்ளன.சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்பட வேண்டியது இங்கு முக்கியம்.மோதல்களின் பின்னரான தேர்தல்களையடுத்து இலங்கை அரசியல் மற்றும் சமூக விடயங்களில் இணக்கப்பாட்டினை எட்டும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.




பொதுத் தேர்தலில் சனத் ஜயசூரிய மாத்தறையில் போட்டி



இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐ
க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன


இடதுசாரி விடுதலை முன்னணியில் சிவாஜிலிங்கம்,ஸ்ரீகந்தா போட்டி




விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி இம்முறை பொதுத் தேர்தலில் இடதுசாரி விடுதலை முன்னணி என்ற பெயரில் நாடு முழுவதும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

இம்முன்னணியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இடதுசாரி விடுதலை முன்னணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதோடு அதற்கான பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.இவர்கள் வடக்கு, கிழக்கில் போட்டியிடுவார்கள். அத்தோடு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கவுள்ளோம்.நாம் என்றும் சிறுபான்மை இன மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளோம்.

இந்தக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். மக்கள் உரிமைகளைப் பெறவேண்டும். எனவே நிச்சயம் எமக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்.




ஐ.ம.சு.மு.வின் அணித்தலைவர்கள் சுபநேரத்தில் நேற்று கையொப்பம்;பஷில் கம்பஹ அணித்தலைவராகிறார்?



வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவிருக்கின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட அணித்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமையிலிருந்த சுபநேரத்தில் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர்.

19 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் மற்றும் உபதலைவர்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னணிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று காலை 10.45 மணிக்கு கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர்கள் சகலரும் வேட்பு மனுக்களில் நேற்றைய தினமே கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அணித்தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வெளிநாடொன்றிற்கு விஜயம் செய்திருப்பதனால் கம்பஹா மாவட்ட வேட்பு மனு நேற்றைய தினம் கையொப்பமிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாட்களில் தனித்தனியாக சிரேஷ்ட அமைச்சர்களின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னணி அறிவித்துள்ளது



சரத் பொன்சேகா கைது குறித்து பௌத்த பீடங்களுக்கு விரைவில் விளக்கம் : அரசாங்கம்


இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள், விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் மல்வத்தை பீடத்தின் தேரர்கள் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் அரசாங்கம் விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. சில தினங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் எம்.பிக்களாக இருந்த அனைவருக்கும் இம்முறை வேட்பு மனு வழங்கப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் புதுமுகங்கள் களமிறக்கப்படுவர். அத்துடன் எமது கூட்டமைப்பின் சார்பில் விசேட கொள்கை பிரகடனம் வெளியிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :

"முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணம், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று மல்வத்து பீடத்தின் தேரர்கள் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் அரசாங்கம் விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது.

அரசியல் பழிவாங்கல் அல்ல

மேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமையானது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன். இதனை அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் பரப்ப முற்படுகின்றனர். ஆனால் தெளிவான காரணங்களுடனேயே இராணுவ சட்டத்தின் கீழ் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடமை பொறுப்புகளை மீறியுள்ளார்

சரத் பொன்சேகா இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார். அரசாங்க மாற்றம் ஒன்றுக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் இராணுவ ஒழுக்க விதிகளை மீறியுள்ளார். தனது கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை மீறி செயற்பட்டுள்ளார்.

பல தகவல்களை வெளியிடுவோம்

இராணுவ சதிப்புரட்சி ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் ஜெனரல் பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. திட்டங்களை தீட்டியுள்ளனர். அந்த வகையிலேயே அவர் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம். நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இராணுவ விதிகளை மீறி ஜெனரல் நடந்து கொண்டுள்ளார்.

குழம்பிய குட்டையில் எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் இன்று குழம்பிப்போயுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன குழப்பத்தில் உள்ளன. அவர்களால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

அரசியல் குப்பையில் மற்றும் பாதாளத்தில் எதிர்க்கட்சியினர் இன்று விழுந்துவிட்டனர். எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் உள்ளனர். கடந்த தேர்தலில் அவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர். அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்றத் தேர்தலில் விசேடமான வெற்றியை ஈட்டும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயார்ப்படுத்தல்களையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

அதன் முதற்கட்டமாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்களை கோரினோம். விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

முன்னாள் எம்.பிக்கள் அனைவருக்கும் வேட்பு மனு

அதாவது கடந்த பாராளுமன்றத்தில் சுநத்திர கட்சியின் சார்பில் எம்.பிக்களாக இருந்த அனைவருக்கும் இம்முறை வேட்பு மனு வழங்கப்படும். அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை விண்ணப்பங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

சுமார் 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. எனவே நாட்டின் 9 மாகாணங்களையும் மூன்றாகப் பிரித்து மூன்று வேட்பு மனு சபைகள் செயற்பட்டன. இவற்றில் அநீதி இழைக்கப்படுவதாக எவராவது கருதினால் மேன்முறையீடு செய்வதற்கு பிரதமர் தலைமையிலும் சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி கையொப்பம் இடுவார்கள்

தற்போதைய நிலைமையில் பெரும்பாலும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனர். புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் புது முகங்கள் போட்டியிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞர்கள் பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் புது முகங்களாக களமிறங்குவார்கள்.

தற்போதைய நிலையில் 17 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் இன்று (நேற்று ) வேட்பு மனுக்களில் கையொப்பம் இட்டுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுவிட்டனர். மேலும் ஏனைய மாவட்டங்களுக்கான அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி கையொப்பம் இடுவார்கள். மதவழிபாடு

மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்டங்கள் ரீதியாகவும் வேட்பு மனுக்களைஞ்கு தாக்கல் செய்வோம். அத்துடன் 27 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதியில் பௌத்த மத வேட்பாளர்கள் அனைவரும் மத வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஏனைய மதங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுவர்.

ஜனாதிபதி முன்னிலையில் உறுதி மொழி

அதேவேளை, 27 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி முன்னிலையில் விசேட உறுதி மொழியை வழங்கவுள்ளனர்.

அதாவது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் விதிகள் கொள்கைகள் சட்டங்களை மதித்து நடத்தல், தேர்தல் விதி முறைகளை மதித்தல் பொலிஸ் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படுதல் பேன்றன தொடர்பில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதி மொழி வழங்கவுள்ளனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை

சுதந்திர கட்சியின் மத்திய குழு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது கட்சியின் கொள்கைகள் தேர்தல் விதிகள் பொலிஸ் சட்டங்கள் ஆகிவற்றை மீறி நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு தேர்தலின் பின்னர் எந்த பதவியும் வழங்கப்படமடாட்டாது.

விசேட கொள்கைப்பிடகனம் இல்லை

இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விசேடமாக கொள்கை பிரகடனங்களை முன்வைக்கப் போவதில்லை. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, பொது வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும். இலங்கையை உலகில் பலமான நாடாக கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைஞ்கு தாருங்கள்

அதேவேளை, இந்த தேர்தலில் நாங்கள் பொது மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அரசியலமைப்பில் மாற்றங்கள் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பனவற்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதியாகும்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்றே கூறினர். ஆனால் நாங்கள் அதற்கு அருகில் வந்துவிட்டோம். எனவே பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

தேசியப்பட்டியலை தயாரிக்கின்றோம்

பாராளுமன்ற தேர்தலுக்கான எமது தேசியப்பட்டியல் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதனை தற்போது தயாரித்து வருகின்றோம். வேட்பு மனு தாக்கல் தினத்தன்று அதனை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிப்போம்."

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்






குற்றப்பதிரிகைக்கு வாக்குமூலம் தேவையில்லை பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களே போதும்



இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெனரலின் வாக்குமூலமும் அதில் பதியப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் அதற்கான வாக்குமூலத்தை வழங்க ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார் என்று செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது குறித்து கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா தலைமையிலான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போதே அவர் வாக்குமூலம் வழங்க மறுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

தான் தற்போது இராணுவ அதிகாரி அல்ல என்றும், சாதாரண பொதுமகனான தன்னிடம் இராணுவத்தினர் வாக்குமூலம் பெற முடியாது, அதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை என்றும் கூறியே அவர்களிடம் வாக்குமூலம் வழங்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டமை மற்றும் ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள இராணுவத்தின் உயரதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலமளிக்க மறுத்த போதிலும் அவருக்க எதிரான சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்குமூலம் வழங்குவதற்கு ஜெனரல் பொன்சேகா மறுதலித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இராணுவம் தீர்மானித்துள்ள அதேவேளை இராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

ஜெனரால் சரத் பொன்சேகாவின் கைதானது இராணுவ சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகும். தவிர இதுவொரு அரசியல் நடவடிக்கையல்ல. இந்நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இராணுவ சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை முழுமையடைந்ததன் பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு அழைப்பதா? இல்லையா?, இராணுவத்தின் எந்த சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முக்கிய அதிகாரியாக இராணுவ தளபதி காணப்படுவார்.

சாட்சிகளை நெறிப்படுத்துவதென்பது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சாட்சிகளைத் திரட்டி அந்த சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதாகும். இந்நிலையில் ஜெனரல் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா? இல்லையா? எனும் கேள்விகள் இங்கு அநாவசியமானவை.

காரணம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைக்கு அவருடைய வாக்குமூலம் முக்கியப்படுவதில்லை. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரகாரமே அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் அவர் இராணுவத்தினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரியாது.

எதிர்வரும் நாட்களில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவர் வழங்குவாராவா? அப்படி அவர் வழங்கவில்லையாயின் அதற்கு சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்ட நிபுணர்கள் அறிவிப்பார்கள். எது எவ்வாறெனினும் சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரும் சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இராணுவ சட்டத்தில் அதற்கு இடமுண்டு. இருப்பினும் அவ்வாறான சாட்சிகளிடம் அவர் இன்னமும் எவ்வித விசாரணையினையும் மேற்கொள்ளவில்லை.




பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுவிக்கவும்


ஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது ஜே.வி.பி.யோ எந்தவிதமான சதித் திட்டங்களையும் தீட்டவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். இவ்வாறான இட்டுக் கட்டப்பட்ட கதைகளை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகா உட்பட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க் கட்சிகளின் மீது சேறு பூசும் கலாசாரத்தை அரசாங்கம் விடுவதாக இல்லை. பொதுச் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. கட்சியினர் ஆகியோர் இந்நாட்டில் இரத்தக் களரி ஒன்றை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டங்களைத் தீட்டியதாக அரச தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித அடிப்படையும் கிடையாது. எனவே பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இத்தகைய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. அத்துடன் அரசாங்கம் கூறி வருகின்ற காரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. கட்சி மிகவும் தெளிவான முறையில் ஜனநாயக ரீதியாக செயற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவ்வாறு ஜனநாயக ரீதியில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட அக் கட்சி மீது அரசாங்கம் வெறுமனே குற்றம் சுமத்துகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற மறு தினமான 27ஆம் திகதி புதன்கிழமை ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தங்கியிருந்த சினமன் லேக்சைட் ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு எமது கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

எனவே அரசாங்கம் கூறுகின்ற பொய்யான கட்டுக் கதைகளைப் போல் அங்கு எந்தவிதமான சதித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.

அத்துடன் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெற்றால் அதன் பின்னர் அமையவிருக்கும் கூட்டு அரசாங்கத்தில் என்னை நீக்கிவிட்டு ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கும் ஜெனரல் பொன்சேகாவும் ஜே.வி.பி.யும் தீர்மானித்திருந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொய்க் கதையொன்றை அவிழ்த்து விட்டிருந்தார். இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

சதித் திட்டங்கள் என்று கூறுகின்ற அரசாங்கமே இவ்வாறான சதி முயற்சிகளை அறிமுகப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜெனரல் பொன்சேகா பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் அவருடன் சேர்த்து சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என்றார்


புளொட் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 





மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தொகுதியனருக்கு இன்று புளொட் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. முருங்கன் புளொட் அலுவலகத்தில் வைத்து புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களால் இந்த சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த இந்த சைக்கிள்கள் அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் மிகவும் வறியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் ஆகியோரும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.


விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு
 

விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிணை வழங்குவதில் நிலவுகின்ற தாமதம் காரணமாக சுமார் 15 சந்தேகநபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் கனத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தொகுதியினரைச் சேர்ந்தவர்கள் அல்லவென்றும், இவர்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய அநேகமானோர் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறையின் இருமாடி கட்டிடத்தின் எல் மண்டபத்தின் கூரைமீது ஏறியே இந்த சந்தேகநபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.
 

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்டபோதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அரசியலிலிருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை மேலும் தெரிவிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம், புளியடிச்சந்திப் பிரதேசத்தில் இன்றுபிற்பகல் 3மணியளவில் வெடிப்புச்சம்பவம்  

யாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம், புளியடிச்சந்திப் பிரதேசத்தில் இன்றுபிற்பகல் 3மணியளவில் வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை இந்துக் கல்லூரிக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வீதியின் ஓரத்தில் காணப்பட்ட குண்டு போன்ற பொருளை எடுத்து பாடசாலை முடிந்து வீடுசென்று கொண்டிருந்த மாணவர்கள் விளையாடியபோதே குண்டு வெடித்துள்ளது. சம்பவத்தில் அரியாலை ஏ.வீ.வீதியைச் சேர்ந்த 09வயதான ஏ.லக்ஸ்சன் மற்றும் 10வயதான ஆர்.ராம்சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் ஆறு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவரென்றும் கூறப்படுகிறது. மற்றொருவர் அரியாலையைச் சேர்ந்தவர் என்றும் அவர் குண்டுவெடிப்பில் மரணமான ஆர்.ராம்சிங்கின் சகோதரர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி
 

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதே கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐனாதிபதி தேர்தல் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்கு தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டி 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் ஊடகப்பேச்சாளர் அசாளத் மௌலானா தெரிவித்துள்ளார். தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்றுமாலை தமதுகட்சி இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவுக்கு முன்னர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினருடன் இது தொடர்பில் பேசப்பட்டு அரசாங்கத்தின் இணக்கத்துடன் தாம் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், திருமலை, மட்டக்களப்பில் தனித்து போட்டியிடுவதாகவும், அம்பாறையில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.


புத்தளம் பிரதேச செயலகப்பிரிவில் கிராம அதிகாரி காணவில்லை  

புத்தளம் பிரதேச செயலகப்பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம்.றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமைமுதல் காணாமல்போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவைக்கு சென்ற றாசிக், அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்றுவரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடியபோது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


யாழ். போதனா வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதற்கு ஜப்பான் உதவி

 
யாழ். போதனா வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் 25மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜப்பான், சர்வதேச முகவர் நிறுவனம் ஊடாக இந்நிதி வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கட்டடத்தொகுதி நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்படும். வைத்தியசாலையில் புதிதாக மூன்று மாடிக்கட்டடம் அமைக்கப்படும். அத்துடன் சத்திரசிகிச்சை விடுதி வளாகம், அவசர சிகிச்சைப்பிரிவு, பிரதான மருந்தகம் ஆகியனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன. மற்றும் பல வசதிகள் வைத்தியசாலையில் செய்யப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்



21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்து க்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்ட னையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பலிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத் தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்


17 மாவட்டங்களின் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் வேட்பு மனு கைச்சாத்து




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 17 மாவட்டங்களின் வேட்பு மனுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று மாவட்டக் குழுத் தலைவர்களினால் கையொப்பமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்ட வேட்பு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு நேற்றுக் காலை 10.30 மணி சுப வேளையில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களில் நேற்று கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ம் திகதிக்குள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேட்பு மனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் மாவட்டத் தலைவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் கைச்சாத்திட்டதுடன் 26ம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏனைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் விளக்க மளித்த அமைச்சர்;

எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடுவர் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது;

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் செயற்பாட்டுத் திட்டமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்குமுன் பாராளுமன்ற த்திலிருந்தவர்களுடன் புதியவர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் முதல் தடவையாக சகல மாவட்டங்களிலும் முன்னணி போட்டியிடும் தேர்தல் இதுவாகும்.

இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே இருந்தவர்களைத் தவிர ஆயிரம் விண்ணப்பங்கள் புதிதாக கிடைத்திருந்தன.

அதற்கிணங்க நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சகல மாவட்டங்களிலுமுள்ள அனுபவமுள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் புதிய வேட்பாளர்களாகத் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 26ம் திகதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுவதால் 26ம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் 27ம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் விசேட மத வைபவங்களைத் தொடர்ந்து 27ம் திகதி வேட்பாளர்கள், அனைவரும் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதான பெளத்த மத வழிபாடு அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விஹாரையில் இடம்பெறுவதுடன் பெளத்த மத வேட்பாளர்கள் அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர்.

அதேவேளை ஏனைய மதங்களைச் சார்ந்தோர் அநுராதபுரத்தின் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளில் கலந்துகொள்வர்.

இதனையடுத்து 27ம் திகதி அரசாங்கத்தின் கொள்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் தொடர்பான அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுப்பார்கள்.

அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் கட்சிக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகி ன்றனர்.

கட்சிக் கொள்கைகளைமீறி தேர்தல் ஆணையாளரினதும் பொலிஸாரினதும் வழிகாட்டல்களை மீறி நடப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படமாட்டாது.

மஹிந்த சிந்தனையை முன்கொண்டதாகவே பொதுத் தேர்தல் விஞ்ஞாபனமும் அமையும். உலகில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்ளப் பலமுள்ள 3ல் இரண்டு பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம்.

அதன் மூலம் முழுநாடும் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும்.

கடந்த தேர்தலில் நாம் அமோக வெற்றிபெற்றுள்ளதைப் போன்றே இம்முறையும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ரீதியில் வெற்றிபெறுவோம்.

இன்றுள்ள அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரசாங்கம் மாகாண சபைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் குழுத் தலைவர்களே தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.




கொழும்புத்துறை குண்டு வெடிப்பு: 2 மாணவர் மரணம்; 6 பேர் காயம்



யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடி ப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக் கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகாமையில் பந்துபோன்ற வொன்று காணப்பட்டதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் சிலர் அதனை எடுத்து பரிசீலித்துள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த பெரியவர் ஒருவர் அதனை வீசிவிடுமாறு கூறியதையடுத்து மாணவர்கள் தூரத்தில் எறிந்தபோதே அது வெடித்துச் சிதறியுள்ளது. அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்ககள் சம்பவ இடத்தி லேயே கொல்லப்பட்டதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.




பொன்சேகாவின் மருமகனுக்கு பிடிவிறாந்து:
தனுகவின் தாயின் வங்கிப் பெட்டகத்திலிருந்து ஏழு கோடியே 50 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு


சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலக்கரத்னவின் தாயாரின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ஏழு கோடியே 50 இலட்சம் (75 மில்லியன்) ரூபாவை பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். கொழும்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றினை நேற்று சி..டியினர் சோதனை யிட்டபோதே இந்தப் பணத்தை கண்டுபிடித் ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

5 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 106 ஸ்டேர்லிங் பவுண்கள் மற்றும் 15 மில்லியன் ரூபா ஆகியன இவரது கணக்கிலிருந்து கண்டுபிடிக்கப்ப ட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். நீதிமன்ற அனுமதியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விசேட ஊடக வியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,

சி..டியினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வங்கியின் நான்கு பாதுகாப்பு பெட்டகங்களை சோதனையிட சி..டியினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் தேடுதலுக்கான அனுமதியைப் பெற்றே இந்த நடவடிக்கையில் இறங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற அனுமதி பெற்றதையடுத்து சி..டியினர் நான்கு பெட்டகங்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன் போதே தனுக திலக்கரத்னவின் தாயாரான அசோக்கா திலகரத்தனவின் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெருந் தொகையான பணத்தை கண்டுபிடித்துள்ளனர் என்றார். இதேவேளை சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவை கைது செய்வதற்கான பிடி விறாந்து ஒன்றை கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் நேற்று பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட பணம், குறித்த வங்கியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்தப் பணத்தை நீதிமன்ற கணக்கிற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக குற்றப்புலனா ய்வு பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை, மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிப்பரிமாற்று கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு மேலதிக விசாரணைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பெருந்தொகையான பணம் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது? எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது?

இது தொடர்பான விசாரணைகளை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர்.தனுக திலகரத்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் மூலம் தனுக திலகரத்ன முன்பிணை கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எல்லோரும் மாவட்ட அமைப்பாளர்களே

தேர்தல் தொகுதி மட்டத்தில் இதுவரை செயற்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் என்ற பதவியை இனிமேல் மாவட்ட அமைப்பாளர் பதவி என திருத்தியமைக்குமாறு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (15) பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஒரு குழு என்ற ரீதியில் செயற்பட்டு தமது வாக்கு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக அதிகரிப்பதையடுத்து தனிப்பட்ட அபிப்பிராய வாக்குகளை பெறும் போட்டி நிலையை தவிர்த்துக்கொள்வது உட்பட புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது மற் றும் மக்கள் அபிமானத்துடன் கூடிய அரசியல்வாதிகள் குழுவொன்றை உரு வாக்குவது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.

இதுவரை செயற்படுத்தப்பட்ட தொகுதி அமைப்பாளர் பதவி ஊடாக சிலர் அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு போட்டி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்ததே. இவ்வாறான போட்டி நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அதிருப்தி நிலையை தோற்றுவித்துள்ளது. சமூக ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இது பெரும் தடையாக உள்ளது. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு மாவட்ட அமைப்பாளர் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒழுக்க விழுமியங்களை பேணும் அதேவேளை ஒருங்கிணைந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது அதிகார பிரதேசத்தை மீளமைப்பது இந்த செயற்பாட்டின் மற்றொரு நோக்கமாகும்.

ஒரு குழுவாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றி பெறுவதை இலகுவாக்கும் வகையில் புதிய திருத்தம் உதவும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது.

நடைமுறையில் இருந்த தேர்தல் முறைக்கு ஏற்ப அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு போட்டித் தன்மையுடன் செயற்படவேண்டியுள்ளதுடன் அதனால் ஏற்படும் பல்வேறு மோதல்கள் பிரசார போஸ்டர் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மேற்படி திருத்தம் பெருமளவு குறைக்கும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது.



டெங்கு நுளம்பு சோதனை திட்டம்:
20 நாட்களுக்குள் 16 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை சோதனையிட நடவடிக்கை

5657 டெங்கு நோயினால் பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு



இருபது நாட்களுக்குள் 16 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை டெங்கு நுளம்பு பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் அமைச்சின் கீழுள்ள டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக அடுத்த வாரம் முதல் இருபது நாட்களுக்கு முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

இதேவேளை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையும் 5657 பேர் நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள் ளதாகவும் இவர்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

தற்போது யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமடைந்திருப்பதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பெருக்கக் கூடிய இடங்கள் தொடர்பாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொள்ளவிருக்கும் பரிசோதனை குறித்து அப்பிரிவின் அதிகாரியொருவர் கூறுகையில், நாட்டில் 65 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் காரணத்தினால் இப்பிரிவுகளிலுள்ள வீடுகளையும், சுற்றாடலையும் சுகாதாரத் தொண்டர்களை ஈடுபடுத்தி சோதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு மருத்துவ அதிகாரி அலுவலகப் பிரிவுக்கு ஐம்பது தொண்டர்கள் படி 65 பிரிவுகளுக்குமென 3250 தொண்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 25 வீடுகளைப் சோதிக்கவேண்டும். இதற்குரிய அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

இச்சோதனையின்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சுற்றாடலைக் கொண்டிருக்கும் வீடுகள் இனம் காணப்படுமாயின் அவ்வீடுகளின் உரிமையாளர்களுக்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்படும். தவறும் பட்சத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் இங்கே தொடர்க...

15 பிப்ரவரி, 2010

யாழ்.கொழும்புத்துறையில் வெடிப்புச் சம்பவம்;இரு மாணவர்கள் பலி

முக்கிய செய்திகள்


யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் சற்று நேரத்திற்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுவதாக எமது பிராந்திய செய்டதியாளர் தெரிவித்தார்.

கொழும்புத்துறை இந்துக் கல்லூரியில் இந்தச் சமப்வம் இடம்பெற்றுள்ளது.அவ்வளாகத்தில் காணப்பட்ட பந்து போன்ற ஒன்றை எடுத்து பாடசாலை மாணவர்கள் விளையாடியபோது அது வெடித்துள்ளது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்



ளையடுத்து 27 முதல் தேர்தல் பிரசாரம் : ஸ்ரீ.சு.க. அறிவிப்பு



எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இம்மாதம் 27ஆம் திகதி அனுராதபுரத்தில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தமது பிரசார நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளனர்.

அன்றைய தினம் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி விகாரையில் மதவழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய மதவழிபாடுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் உறுதிப்பத்திரங்களை கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது



தேர்தல் சின்னம் குறித்து ம.வி.முன்னணி - ஜ.ம.முன்னணி பேச்சு




சின்னம் குறித்து ஐ.தே.கவும் மக்கள் விடுதலை முன்னணியும் மாற்றுக் கருத்தினை கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான முக்கியமான சந்திப்பொன்று ம.வி.முன்னணிக்கும் ஜ.ம.முன்னணிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஜே.வி.பியும் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.கவும் அறிவித்தன. ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பில் தாம் ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்களை ஜனநாயக மக்கள் முன்னணியினர் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது யானைச் சின்னத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என அக்கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்ளஸ் தேவானந்தா











பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர் இவ்வார இறுதிக்குள் தமது முடிவுகளை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும் எமக்குத் தெரிவித்தார்




ஐதேக பதுளை மாவட்ட அமைப்பாளராக சச்சிதானந்தன் : தேர்தலில் போட்டியிடவும் முடிவு



ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக எம்.சச்சிதானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளமை குறிப்பித்தக்கது.



புத்தளம் தலைமை கிராம அதிகாரி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு




புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம். றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவைக்கு சென்ற றாசிக்,அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்று வரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடிய போது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குறித்த தகவல் தெரிந்தோர் புத்தளம் பிரதேச செயலகத்தின் இலக்கமான 0322265358 அல்லது புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0322265422 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.



தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை அறிவிப்பு : துரைரட்ணசிங்கம்



ஏப்ரல் மாதம் இடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கட்சி சார்பில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், போட்டியிடுவது மற்றும் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளர்கள் தொடர்பில் தாம் ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பதாகவும், அது உறுதிபடுத்தப்பட்டதும் நாளை முடிவினை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் எமது இணையத்தளத்திற்கு இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை பிரதமர் தேர்தல் பொன்சேகா மனைவி போட்டி; எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கிறார்

இலங்கை பிரதமர் தேர்தல்    பொன்சேகா மனைவி போட்டி;    எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கிறார்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத்பொன்சேகா தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் வருகிற ஏப்ரல் மாதம் பராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன.

இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவின் மீது ராஜபக்சே அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடத்தில் எடுத்து கூறி வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு சரியான வேட்பாளர் பொன் சேகாவின் மனைவி அனோமா தான் என முடிவு செய்துள்ளனர்.

எனவே, பிரதமர் தேர்தலில் பொதுவேட்பாளராக இவரையே நிறுத்த உள்ளனர். பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்கு ஜனதா விமுக்தி வரமுனா (ஜெ.வி.பி.) கட்சி தலைவர் சோமவான்சா அமர்சிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவின் முடிவு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற் கிடையே பாராளுமன்ற தேர்தலில் தமது கட்சி தலைமையிலான கூட்டணி பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ரனில் விக்ரமசிங்கே விரும்புகிறார்.

இது குறித்து அவர் தனது ஐக்கிய தேசிய கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது இலங்கையில் நீடித்து வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை ஏற்படுத்தவும் முயற்சி நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்பு



எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்கள் நாளை 16ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் 22 ஆம் திகதியாகும்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக 2008ஆம் ஆண்டுக்கான அத்தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அரச அலுவலகங்களில் தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தும், அலுவலர்களை நியமிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரியில் ஆர்ப்பாட்டம்




இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதியொருவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் அங்கு உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பலத்த பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி பொரளையில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவினர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.



மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானம்




கிழக்கு மாகாண அமைச்சரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட உத்தேசித்துள்ள அவர் தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக கூறினார்.

கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிக்கான ராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி கையளிக்க உத்தேசித்துள்ளார்



ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் : திஸ்ஸ





சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருவதாக ஐக்கியத் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க அங்கு மேலும் பேசுகையில்,

ஐனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கேள்விக்குட்படுத்தியது அரசாங்கம். இன்று ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கவில்லை


சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராணுவ சட்டத்தின் 129ஆவது உறுப்புரையை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் முன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன.

இராணுவத்தினர் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புரிந்துள்ளனர் என ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்தே அவருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள முக்கியமான குற்றச்சாட்டாக கருதப்படுகிறது என்று நேற்று வெளியான வாரப் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்தவாறு இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் என்றும் அதற்கான சட்சியங்களை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அந்த செய்திகளில் வெளியாகியிருந்தன.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் கீழ் இரண்டு வழக்குகள் தொடரப்படவுள்ளன என்றும் இது தொடர்பில் சட்டத் துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர் என்றும் வேறு சில செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இராணுவ சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக இராணுவ நிதிமன்றத்தில் ஒரு வழக்கும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக சாதாரண நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்குமாக இரண்டு வழக்குகளே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் ஸ்டேட் ரைம்ஸ் எனும் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் போதல் தொடர்பான 6 சம்பவங்களுடன் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்புபட்டுள்ளார் எனும் தகவலையும் பாதுகாப்பு செயலாளர் இதன் போது வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர், ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

உரிய சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டதன் பின்னரே அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறிய இராணுவ பேச்சாளர், இராணுவ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படும் போது தான் விரும்பும் சட்டத்தரணிகளூடாக தன்னை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை முன்வைக்கவோ, மேன்முறையீடு செய்யவோ அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்லவோ முடியும். அதற்கான சட்ட அனுமதி ஜெனரல் பொன்சேகாவுக்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.




நவநீதம் பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

"இது உள்நாட்டு விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் தனிப்பட்டவர்களின் பல்வேறு நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அடுத்த விடயம் யாதெனில் யாரும் கோரிக்கைகளை விடுக்கலாம். பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கோரிக்கைகள் விடுக்கப்படலாம். ஆனால் எமது கைகளிலேயே விடயங்கள் உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தம் முடிந்தவுடன் இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். அவை அந்த சந்தர்ப்பங்களில் முடிவுக்கு வந்தன.

மேலும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற இலங்கை விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அமோக வெற்றியீட்டியதையும் நினைவூட்டுகின்றோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது தற்போது மீண்டும் போர் குற்றங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகள் என்று கோரிக்கை விடுக்கப்படும்போது அவற்றுக்கு பதிலளிக்க முடியாது என்பதனையே கூறவேண்டியுள்ளது. " எனத் தெரிவித்தார்




அன்னத்தில் போட்டியிட இணங்காவிடின் மாற்றுக் கூட்டணியில்
களமிறங்குவோம்:ஜே.வி.பி




ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையில் தனிமைப்படுத்தி விட்டு அரசியல் இலாபத்திற்காக செயற்பட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தார்மீக உரிமை கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் "அன்னம் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்' இல்லையென்றால் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்திய விரிவான மாற்றுக் கூட்டணியுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவோம் என்று ஜே. வி. பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாஸிஸவாத போக்கும் சர்வாதிகார அடக்கு முறைகளும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மேலோங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே. வி. பியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் கூறியதாவது,

"நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் பாரியளவிலான அடக்கு முறைகளையும் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் சந்திக்க நேரிடும். ஏனென்றால் அரசாங்கம் தனது பாஸிஸவாத போக்கை விஸ்தரித்து வருகின்றது.

இதன் வெளிபாடுகளாகவே ஜனாதிபதி தேர்தலின் பின் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை சட்டத்தின் தேவையெனக் கூறி அரசியல் தேவைக்காக சிறை வைத்திருத்தல், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அரசாங்கத்தின் குண்டர்கள் தாக்கும் போது பொலிஸார் மௌனமாக இருந்தமை, அதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப் புகை, தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை என்பவற்றைக் கொள்ளலாம். லங்கா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறை வைக்கப்பட்டமை, லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் காணாமல் போனமை உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்கு முறைகளும் மேலோங்கியுள்ளன.

41 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே இந்த நிலையென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை எவ்வாறு இருக்கும். எனவே அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கு வலுவான ஒரு கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளினால் அமைக்கப்பட வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்ந்தும் அன்னம் சின்னத்தினைக் கொண்ட கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதையே விரும்பினார். ஆனால் ஐ. தே. க. யானை சின்னத்தில் போட்டியிடுவதாக செய்திகள் பரவின. இது உண்மையென்றால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அன்னச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் அன்னச் சின்னத்தில் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. தற்போதைய தேவை சின்னம் என்பதை விட நாட்டுக்கு தேவையான ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியே என்பதை சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்





ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன்



என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருமலையிலுள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம், தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மேலும் பேசிய ஐ. சம்பந்தன் கூறியதாவது.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் தெரிவு

நாங்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம், மாவட்ட ரீதியாக மக்களால் முன்மொழியப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக எமது கட்சியின் உயர்பீடம் கொழும்பிலே வரும், செவ்வாய், புதன்கிழமை கூடி பிரதிநிதிகளை உறுதி செய்யவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக எமது கட்சியை விட்டு மக்களைப் பிரிக்க அரசு பல்வேறு சதிகளை செய்துவருகிறது. அதனையிட்டு நாம் கவலையடையவில்லை. நாம் எமது மக்களின் கோரிக்கையில் உறுதியாகவுள்ளோம்.

நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.

அந்தக் காலத்தில் 94 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்பட்டு விட்டன. ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியினரும் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கு இணங்க வேண்டும் என்பது முடிவாகியிருந்தது. அவை துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

ஆனாலும் நாம் மக்களின் கோரிக்கையை அரசியல் உரிமைகளைத் தாரை வார்த்து, ஒருக்காலும் செல்ல மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்திச் செல்லவில்லை. இந்தியாவில், பிரான்சில், சுவிசர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள்.

சுய நிர்ணய உரிமைகளே தேவை

அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுய நிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.

அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சாத்வீகமாக போராடவும் தயங்கமாட்டோம்.

சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள். தந்தை செல்வா ஒரு காலத்தில் தெரிவித்தார், தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் சிங்களத் தலைமைகள் இந்த நாட்டில் தோன்றவில்லை. ஆனால் அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

நான் இங்கு வர முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசிவிட்டுத்தான் வந்தேன். இத்தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து ஒற்றுமையாகவுள்ளோம். அண்மையில் கல்முனையில் என்னை முஸ்லிம் மக்கள் கௌரவித்தார்கள். இது தந்தை செல்வாவினால் வளர்த்து வரப்பட்ட இக்கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

இன்று ஜனாதிபதி சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளார். அதனால் ஜனாதிபதி ஆட்சி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று எமது தமிழ் பேசும் மக்களும் முழுமையான வாக்களிப்பைச் செய்து மக்களின் அந்த அதிகாரத்தைத் தர வேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளை கோரிக்கைகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடம் உரத்துக் கேட்க முடியும்.

நீங்கள் அளிக்கும் அதிகப்படியான வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நீங்கள் தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும்?

அரசின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது. அதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை கடந்த தேர்தலில் காட்டியுள்ளனர். இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். விவேகமாக ஆளும் கட்சியுடன் சேர்ந்துதான் அடிமைகளாகி என்றாலும் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என எவராவது சிந்தித்தால் அது தவறான வழியாகும். நாம் கடும் போக்கைச் சிந்திக்காமல் தொடர்ந்து செயற்பட்டு எமது தீர்வைப் பெறுவோம், அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்




பயன்படுத்த வேண்டும்



ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தோரணையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து மக்களின் செயற்பாடுகளை முடக்கி விட்டு அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அரசாங்கம் எண்ணுகின்றது. அது ஒருபோதும் நடக்காது. ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை உருவாக்க மக்கள் பொதுத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சிறைவாசம் அனுபவிக்கும் அதேவேளை கே. பி. அரச பாதுகாப்பு இல்லத்தில் சுகபோகத்துடன் இருக்கின்றார். எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி நாடு பூராவும் 20 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம். தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

"ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தமையை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை குழப்ப அரசாங்க தரப்பினர் தாக்குதல்களை நடத்திய போதிலும் கலைந்து செல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

அது மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடக்கு முறையினை மேற்கொள்வதன் மூலம் ஊடக சுதந்திரத்தையும் இந்த அரசாங்கம் பறித்துள்ளது. இதன் மூலம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஊடகங்களில் வெளிவரவிடாமல் அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது.

அது மாத்திரமல்லாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம் என அரசாங்கம் கூறி வருகின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதை விட இவர்களால் வெற்றி பெறக் கூட முடியாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு வாக்களித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் ஏற்பட்ட மோசடிகள் தொடர்பாக நாம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு அதற்கு மாற்று வழிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் நாம் கலந்தாலோசிக்கவுள்ளோம். அதன் மூலம் எதிர்வரும் தேர்தலை சுயாதீனமானதும் சுதந்திரமானதுமாக நடத்தி முடிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையே ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் விரும்புகின்றனர். எனவே நாம் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இருந்த போதும் எமது கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நாம் நடத்தி வருகின்றோம். அவ்வாறு மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமானால் அதனை எமது செயற்குழுவை கூட்டி ஆராய்ந்தே கூற முடியும்.

இன்று நாட்டில் ஜனநாயகத்திற்கெதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அதற்கெதிராக செயற்படுவோர்கள் தாக்கப்படுகின்றார்கள். அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட விடாமல் அரசாங்கம் அடக்கு முறைக்குட்படுத்துகின்றது.

அதேபோன்று சுகத் ஹேலியகொட என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காது உள்ளது. எனவே ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...