26 ஏப்ரல், 2011

பகவானின் ஸ்தூல சரீரம் நாளை சமாதியில் வைப்பு இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஸ்தூல சரீரம் நாளை சமாதியில் வைக்கப்படவுள்ளது. பகவானை தரிசிப்பதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியைச் சென்றடைந்தவண்ண முள்ளனர். அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் பகவானின் ஸ்தூல சரீரத்தைத் தரிசித்து வருவதுடன், இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம், வெகுதூரத்திற்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தின் குல்வந்த் மண்டபத்தில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் பகவானின் ஸ்தூல சரீரம் நாளை அந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் வைக்கப்படவுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நான்கு நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், பக்தர்கள் பலர் தரிசனம் செய்வதற்கு முண்டியடித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனைவியுடன் சென்று கண்ணீர் மல்க பகவானைத் தரிசித் திருந்தார்.

இதனைவிடப் பல முக்கிய பிரமுகர்கள் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை தரிசித்திருப்பதுடன். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் புட்டபர்த்திக்குச் செல்வதால் புட்டபர்த்தியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புட்டபர்த்திக்கு வரும் பக்தர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் ஆந்திர மாநில அரச அதிகாரிகளும், சத்ய சாயி அறக்கட் டளை நிர்வாகிகளும் ஏற்படுத்திக் கொடுத் துள்ளனர்.

இது மாத்திரமன்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பகவானின் பக்தர்கள் பலர் புட்டபர்த்தியை நோக்கிப் புறப் பட்டுள்ளனர். பகவான் சத்ய சாயி பாபா மகா சமாதியடைந்த செய்தியைக் கேட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா வின் கோதாவரி மாவட்டம், பிரகாசம் மாவட்டம், புட்டபர்த்தி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய பகுதிகளில் நான்கு சாயி பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

த.தே. கூட்டமைப்பை அரசாங்கம் 3ஆவது தடவையாகவும் ஏமாற்றிவிட்டது: சுரேஷ்

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூன்றாவது தடவையாகவும் சூட்சுமமாக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்த அரசாங்கம், இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியை அப்பட்டமாக மீறியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்வதையும் தவிர்த்துக் கொண்டமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றேக்ஷிர் மற்றும் உறவினர்களையும் மிகுந்த ஏமாற்றத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அறிந்த கொள்வதற்கென நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்வதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது பின்னர் ரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பில் கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் இதுவரையில் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. இது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் அளித்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்ததுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களது விபரங்களை வெளியிடுமாறும் வலியுறுத்தி வந்திருந்தது. இதனையடுத்து அவர்களது விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் எமது தரப்பிலிருந்து உறுப்பினர்களை வவுனியா தடுப்பு முகாம்களுக்கு (25) நேற்று திங்கட்கிழமை அழைத்துச் செல்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எனினும் அங்கு எம்மை அழைத்துச் செல்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாத காரணத்தினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத் தரப்பினருடன் பலதரப்பட்ட வகையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை. அதன் பின்னர் இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தெரிந்து கொள்வதற்கென தகவல்களை அனுப்பப்பட்டன. அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

எந்த வகையிலும் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. இவ்வாறு பதிலளிக்காது சூட்சுமமாக இந்த விஜயத்தை அரசு தரப்பு ரத்துச் செய்திருக்கின்றது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றக்ஷிவது தடவையாகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உகந்ததாக அமையவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகால சட்டவிதிகளை எதிர்காலத்தில் முற்றாக நீக்கும் சாத்தியம்

அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டில் அவசரகால சட்டவிதிகளை முழுமையாக அகற்றும் தீர்மானத்துக்கு செல்லும் சாத்தியங்கள் உள்ளன. இதேவேளை எதிர்காலத்தில் அவசரகால சட்டவிதிகளில் அதிகமானவற்றை தளர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். பல்வேறு காரணிகளை ஆராய்ந்துவிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

அவசரகால சட்டவிதிகளை எதிர்காலத்தில் தளர்த்துவது குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில் :

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின் கணிசமான ஒழுங்குகளை நீக்கியது. ஒரு சில காரணங்களுக்காக அவசரகால சட்டத்தின் சில விதிகளை மட்டும் அரசாங்கம் பேணிவருகின்றது.

இந்நிலையில் விரைவில் அவசரால சட்டத்தின் எஞ்சியுள்ள விதிகளில் அதிகமானவற்றை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. அதாவது விரைவில் சில ஒழுங்கு விதிகள் அகற்றப்படலாம்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பல்வேறு விடயங்களை ஆராய்ந்துவிட்டு அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை முழுமையாக அகற்றவும் சாத்தியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றோம். இந்நிலையில் மக்களுக்கு எந்தளவு வசதிகளை வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்வோம் என்றார்.

இதேவேளை அவசரகால விதிகள் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரட்ண கூறியுள்ளதாவது

அவசரகால விதிகளை அரசாங்கம் விரைவில் தளர்த்தவுள்ளது. நீதித்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர் இது குறித்து ஆராயப்படும்.

அதாவது பொது மக்களின் சாதாரண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விதிகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதிகளை நாம் ஏற்கனவே தளர்த்தியுள்ளோம். மேலும் பல விதிகளை விரைவில் நீக்கிவிடுவோம். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான விதிகள் மட்டும் நீடித்திருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு

ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் 16 பேர் பலியாகியுள்ள தாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி ஆனந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இம்மாதத்திலேயே மின்னல் தாக்கத்தினால் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையில் ஒன்பது பேர் மின்னல் தாக்கத்தினால் பலியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடி மற்றும் மின்னலுடன் கூடிய கடும் மழைவேளைகளில் பொதுமக்கள் கூடுமானவரை வெளியில் இருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அத்தோடு அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொலைபேசி பாவனையினை மேற்கொள்ளாமல் இருப்பதுவும் சிறந்ததாகும்.

அத்தோடு இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டிலும் அவதானமாக இருக்க வேண்டும். கூடுமான வரை மின்சாதனப் பொருட்களை மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பது பாதுகாப்பானது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

25 ஏப்ரல், 2011

கனிமொழி மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஊழல் ஒதுக்கீடு வழக்கில் கடந்த சி.பி.ஐ தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ளது.

2 ஜி வழக்கில் கடந்த 2 ஆம் திகதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யப்பட்டது.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத் குமார் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் நலன் கருதி சிவனொலிபாத மலையடிவாரத்தில் பூஜை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் நலனுக்காக பூஜை ஒன்று இடம்பெற்றது.

மனைவி அனோமா பொன்சேகா உட்பட குழுவினர் சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள நல்லதண்ணி என்ற இடத்தில் இப்பூஜையை நடத்தினர்.

கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டதோடு, அவர் விடுதலையாகி பொது சேவையில் ஈடுபட வேண்டுமென அங்கு பௌத்த பிராத்தனைகள் மற்றும் பௌத்த வழிபாடுகள் என்பனவும் இடம் பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெற்றோலிய வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு

பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கவுள்ளதாக சுங்க ஆணையாளர் அஜந்த டயஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 600 சி.சிக்கு மேற்பட்ட கொள்ளவுடைய வாகனங்களுக்கான வரி 24 சதவீதமாகவும் 2000-3000 சி.சி. கொள்ளவுடைய வாகனங்களுக்கான வரி 74 சதவீதமாகவும் 3000 சி.சியை விட அதிக கொள்ளளவுடைய வாகனங்களுக்கான வரி 100 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக பணத்தை கடத்தமுயன்ற சீன பிரஜை கைது

அமெரிக்க டொலர் மற்றும் சீன யுவான் நாணயங்களை கடத்த முயன்ற சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுகங்கத் திணைக்கள அதிகாரிகளினல் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபரிடமிருந்து 57இலட்சம் மதிப்புடைய அமெரிக்க டொலர் மற்றும் சீன யுவான் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் 27வயதுடையவர் என்றும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இலங்கைக்கு வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சத்திய சாயி பாபா மறைவக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம்

உலக மக்களுக்கு அருளும் உன்னதமான சேவைகளும் செய்த சத்திய சாயி பாபாவுக்கு மோட்சம் கிட்டட்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சத்ய சாயி பாபா சமாதி அடைந்தமையையடுத்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைசிறந்த பண்புகளைக் கொண்ட சாயிபாபாவை அவர்களின் பக்தர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் எனவும் சத்திய சாயிபாபா அவர்களுக்கு மோட்சம்கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தொழிலாளர் தினம்


தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே! கழகத்தோழர்களே!தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2011 மே முதலாம் திகதி சுவிஸ்தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும்உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொள்ளும்தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு . இலங்கைதாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்கசர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்துஎமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்குஇட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியகட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்குஅறிவோம். அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும்தம்மாலி யன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என ..வி.கழகம்
தோழமையுடன் கேட்டுக் கொள்ளும்; அதேவேளையில். மக்களின் விடுதலைக்குதோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ்மேதின ஊர்வலத்திற்குதோழமையுடன் அழைக்கின்றோம்.

இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்குஅருகில் உள்ள ளுih Pழளவ (டுயபநசளவசயளளந)ல் இருந்து காலை 10.00 மணிக்குஆரம்பமாகி டீüசமடiPடயவண (டீநடடநஎரநல) யில் முடிவடையும்!!!

அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே.!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D:PL:F)
சுவிஸ்கிளை

தொடர்புகட்கு: 078 3038783, 078 3336175, 079 6249004
மேலும் இங்கே தொடர்க...