8 நவம்பர், 2010

மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் :

அமைச்சர் றிசாத் தெரிவிப்பு மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேசத்தை மையப்படுத்தி துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராமங்கள் உள்ளன. 20 கிராம அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன. தற்போது சிலாவத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீனவத் தொழிலுக்கு மிகவும் பெயர் போன பிரதேசங்களாகும்.

தற்போது 350 மீன் பிடி படகுகள் இங்கு கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 13 மீனவ சங்கங்கள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 110 இயந்திரப்படகுகளும்,350 மீன்பிடி வலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மீள்குடியேறும் மீனவ குடும்பங்களுக்கு 9 மாதங்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

04.11.2010 ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்

நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னால் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள்
ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம்;
ஈழமக்கள் புரட்...சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா
ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்
மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்
தொடர்புகளுக்கு 00 44 208 9305313 00 44 208 9305313 078107063682
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து ஜப்பான் சென்ற கடவுள்


டோக்கியோ : ஜப்பானின் அசாகுசா கோவில் இருக்கும் பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இக்கோவில் இருக்கும் பகுதிகளில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களுக்கும் கோவில்கள் இருப்பதால், இப்பகுதி எப்போதும் "ஜே ஜே' என்று தான் இருக்கும். இங்குள்ள கோவில்களில், "சோடன்' எனும் பெயரில் கும்பிடப்படும் கடவுள் யார் தெரியுமா? நம்ம ஊர் விநாயகர் தான். ஜப்பான் மொழியில் "சோடன்' என்றால், "பரிசுத்தம்' என பொருள்.

விநாயகர் மட்டுமல்ல, சரஸ்வதி, சிவன், பிரம்மா மற்றும் குபேரன் போன்ற இந்துமத கடவுள்களுக்கும் வெவ்வேறு பெயர் சொல்லி, கோவில் எழுப்பி வழிபடுகின்றனர். இதில் நிறைய ஜப்பானியர்கள், "இந்து மதக் கடவுள்கள்' என தெரிந்தே வழிபடுகின்றனர். இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு முன்னாள் தூதர் யசுகனி இனோகி கூட, "பெரும்பாலான ஜப்பானியர்களின் வழிபாட்டு தெய்வங்கள் அனைத்தும் இந்திய கடவுள்கள் தான்' என கூறியுள்ளார்.

கி.பி., 6ம் நூற்றாண்டின் இடைப் பகுதிகளில், சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவில் உள்ள, இந்து மதக் கடவுள்களின் உருவச் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியா வந்த சீன யாத்ரீகர்களும் இதற்கு முக்கிய காரணம்.

இங்கிருந்து சீனா கொண்டு செல்லப்பட்ட உருவச் சிலைகள் மற்றும் பொம்மைகள், சீனப் பெயருடன் புத்தமதக் கடவுள்கள் என கூறப்பட்டு, ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்டன. புத்த மதம் தழுவிய ஜப்பானியர்களும், இந்து மதக் கடவுள்கள் என தெரியாமல் கோவில் எழுப்பியும், வீட்டில் வைத்தும் வழிபட ஆரம்பித்தனர். இன்று வரை அந்த வழிபாடு தொடர்ந்து நடக்கிறது
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறையில் பொலிஸ் மீது கைதிகள் தாக்குதல் ஐம்பது பேர் காயம்; சோதனையிடச் சென்றபோது சம்பவம்



வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக் காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற விசேட பொலிஸ் குழு மீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக் காவலர்களும் காயமடைந்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவ தாவது, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பாவனை இடம் பெறுவதாகவும், கைதிகள் சிலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கப் பெற்ற தகவல் களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் குழுவினர் திடீர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப் புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட குழுவினர் தேடுதல் நடத்திக்கொண்டு இருக்கும் போது குறித்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சிலர் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதனை அடுத்து ஏனைய கைதிகளும் கற்கள், போத்தல்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும், சிறைக் காவலர்களும், முப்படையினரும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்துள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு விரைந்த விசேட படைப் பிரிவினர் காயமடைந்தவர்களை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களின் தலை மற்றும் உடம்பிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் (சி. ஐ. டி.) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழு தமது விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலிஸார் மற்றும் சிறைக் காவலர் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், போத்தல்கள் மற்றும் பொருட்கள் சிறைக் கூடங்களுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாகவும் சி. ஐ. டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து சிறைச் சாலைக்குள் மீண்டும் ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் 18ம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சுற்றிவளைத்து நடத்திய இது போன்ற திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 53 கையடக்கத் தொலைபேசிகள், பற்றரிகள், சார்ஜர்கள் மற்றும் 44 கஞ்சா சுருட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் வரலாற்றின் திருப்புமுனைக்கு பங்களித்தவரே டீ. ஏ. ராஜபக்ஷ


இலங்கையின் அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்து வதில் அளப்பரிய பங் களிப்பினை வழங்கியவர் அமரர் டீ. ஏ ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்கல்லை நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டீ. ஏ. ராஜபக்ஷ நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதியமைச்சர்கள் நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த சமரவீர, சாலிந்த திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எஸ்.டபிள்ஷ. ஆர். டீ. பண்டாரநாயக்கவுடன் இணைந்து உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரே டீ. ஏ. ராஜபக்ஷ.

இவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை மிகவும் முன்னுதாரணமானது. இன்றுள்ள மாணவ சமுதாயம் இம்முன் மாதிரியைப் பின்பற்றுவது சிறப்பானது.

டீ. ஏ. ராஜபக்ஷவின் வாழ்க்கையை அடியொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைய சந்ததியினரின் சிறந்த எதிர்காலத்திற்கான செயற் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஒழுக்கமுள்ள எதிர்கால சந்ததியினை உருவாக்கவும் சிறந்த அறிவு பலம்மிக்க குடும்பங்களைக் கட்டியெழுப்பவும் உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய திட்டங்களுக்கு அடித்தளமிட்டவராக அமரர் டீ. ஏ. ராஜபக்ஷவைக் குறிப்பிடமுடியும், பாராளுமன்ற சபாநாயகராக, அமைச்சராக, குழுக்களின் பிரதித் தலைவராக சிறந்த அரசியல்வாதியாகத் நிகழ்ந்தவர் அவர்.

அவர்தொட்டு விட்டுச்சென்ற பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோதபய ராஜபக்ஷ போன்றோர் தொடர்ந்து முன் னெடுத்து வருகின்றனர் என நாமல் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய உதவியுடன் 5000 வீடுகள்


மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மிக விரைவில் இந்திய அரசின் அனுசரணை யுடன் 5000 வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா நேற்று தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (7.11.2010) நடைபெற்ற பெருந் தோட்டத்துறை போக்குவரத் திற்காக 20 பஸ் வண்டிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு இந்திய தூதுவர் கையளிக்கும் வைபவத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மான் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் இந்திய தூதுவர் தொடர்ந்து உரையாற்று கையில், 30 ஆண்டுகால யுத்தத்தினால் வட கிழக்கு மக்கள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். இவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல இலங்கை ஜனாதிபதி பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக 50000 வீடுகளை இந்திய அரசு அமைத்துக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதில் 5000 வீடுகளை பெருந்தோட்ட மக்களுக்கு அமைத்து கொடுக்கப்படவுள்ளது. அத்தோடு மிக விரையில் டிக்கோயா நகரில் 150 படுக்கை களை கொண்ட சகல வசதி களுடன் வைத்தியசாலை ஒன்றும் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளதோடு இதற்கான அடிக்கல்லை மூன்று வார

காலத்துக்குள் நாட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி இந்திய அரசின் அனுசரணையில் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில், இந்தியா தனியார் நிறுவகத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றும் வெகு விரையில் அமைக்கப்படவுள்ளது.

அதேவேளை மலையக மாணவர்கள் பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து நகர பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்றி பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த வருடமும் இவ் வருடமும் பஸ் வண்டிகளை கையளித்துள்ளோம். இங்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து பயிற்றுனர்களும் அழைத்து வரப்பட்டவுள்ளனர். இந்த பயிற்சிகளை இங்குள்ளவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இவ் வைபவத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இராஜதுரை ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 20 பில். அமெ. டொலராக அதிகரிப்பதே இலக்கு

இலங்கையின் ஏற்று மதி வருமானத்தை இருபது பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே எமது இலக்கு என்று இல ங்கை ஏற்றுமதி அபிவி ருத்தி சபையின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் கே மரைக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடை பெற்று வரும் பாதணிகள் மற்றும் தோற்பொருள் கண் காட்சியின் இறுதிநாள் நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற் றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர்களான றிஷாத் பதியு தீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்களினால் சம்பிர தாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளி நாட்டு தோற்பொருள் உற்பத்தியாளர் கள் தமது உற்பத்திப் பொருட் களை காட்சிக்கு வைத்திருந்தனர்.

இந்தக் கண்காட்சியைக் காண பெருந்திரளான மக்கள் வந்திருந்ததுடன் உற்பத்திப் பொருட்களின் ‘பெஷன் சோவும்’ இடம்பெற்றது.

அத்துடன் இத்தாலி, ஜேர் மனி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கொள்வன வாளர்களும் இந்தக் கண் காட்சியில் கலந்துகொண் டிருந்தனர்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபை யின் நிறைவேற்றுப் பணிப் பாளர் கலாநிதி யூசுப் கே. மரைக் கார் அங்கு உரையாற்றுகையில், இலங்கை யிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோற் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி இப்பொருட்கள் மீது வெளிநாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துமாறு கைத்தொழில், வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய இப்பொருட்களின் தரம், தன்மை போன்ற வற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பாதணி, தோல் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி காணப்படுகின்றது. எனவே, எமது உற்பத்திப் பொருட்களின் தரம், கவர்ச்சி என்பவற்றில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

தற்போது இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2020ம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்கு. அதற்கு ஏற்ப எமது நடவடிக்கை களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை



வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாட சாலைகளே இந்த திட்டத்தின் கீழ் தர முயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, முமாரசுவாமி மண்ட பத்தில் நடைபெறவுள்ள இக்கலந்து ரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங் கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி. விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயர் அதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை


ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற் பரப்பு இரண் டொரு தினங்களுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்று தெரிவித்தார்.

வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்று விட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற் பரப்பில் தொடராக இடிமின்ன லுடன் மழை பெய்யும் அதேநேரம் இக் கடற் பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

காற்று வட மேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியால த்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அடுத்த வாரம்

வட மாகாணத்தில் இடமாற்றம் பெறு கின்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியல்கள் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளன.

www.np.gov.lk என்ற வட மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் ஊடாக இந்த பெயர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்குள்ளே இந்த இட மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

சுமார் ஐநூறு ஆசிரியர்கள் இடமாற் றங்களுக்காக தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததாக தெரிவித்த அவர், சுமார் மூன்று மாத காலத்திற்குள் நடத்தப் பட்ட கலந்துரையாடல் மற்றும் ஆராய்வுக்குப் பின்னர் இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...