3 மே, 2010

பிரபாகரன் தாயார் தமிழகம் வர தடையில்லை; மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம்





புலித்தலைவர் பிரபாகரன் தாயார் தமிழகம் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் தெரிவித்தார். திருவேங்கடம் வேலுப்பிள்ளை மனைவி பார்வதி அம்மாள் மலேசியாவில் இருந்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்வதற்காக கோலாலம்பூரில் இருந்து கடந்த 16 ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம்வந்தார். ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்க விடாமல் அப்படியே மலேசியாவுக்கு குடியேற்ற துறை அதிகாரிளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ம.தி.மு.க., மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து வைகோ உண்ணாவிரதப்போராட்டம் இருந்தார்.

இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி இந்த விஷயம் எனக்கு தெரியாது. மத்திய அரசு அதிகாரிகள் எடுத்துள்ளனர். மேலும் பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.

பார்வதி அம்மாள் மின்னஞ்சல் மூலம் கடிதம் : இருப்பினும் அவர் கேட்டு கொண்டாலோ, கடிதம் எழுதினாலோ மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அனுமதி கிடைத்தால் ஆவண செய்வோம் என்றார். இது தொடர்பாக சென்னை கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்த கருத்து‌ தெரிவிக்கப்பட்டது. பார்வதி அம்மாள் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பலாம் என்றும் அரசும் பரிசீலிக்கலாம் என்றும் கூறியது. இதனையடுத்து பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 30 ம் தேதி தமிழக முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தனது பெரு விரல் கைரேகை பதித்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில் நான் சிகிச்சை எடுத்துக்கொள்ள திருச்சி விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஒரளவுக்கு பச்சைக்கொடி : இது தொடர்பாக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் சட்டசபையில் விதி 110 ன் கீழ் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது: பார்வதி அம்மாள் எழுதிய கடிதம் தொடர்பாக பரிசீலித்து . ஆராய்ந்து , மத்திய உள்துறை அமைச்சக செயல் அதிகாரிகளுக்கு பார்வதி அம்மாள் தமிழகம் வரும் விஷயத்தில் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள முடியும். தமிழக அரசு ஒரளவுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது.
மேலும் இங்கே தொடர்க...

நியூயார்க் சதுக்கத்தில் கார் குண்டு வைத்ததாக தலிபான்கள் பொறுப்பு ஏற்பு

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மையத்தில் டைம்ஸ் சதுக்கம் உள்ளது. சுற்றுலா தலமான அங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து புகை வந்தது.

இதை பார்த்த நடைபாதை வியாபாரி உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது காரில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயல் இழக்க செய்தனர்.

இக்குண்டு வெடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கும் தெக்ரிக்- இ-தலிபான் அமைப்பின் தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். யூ டியூப் என்ற இண்டர் நெட்டில் வீடியோ மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில் ழுநியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது நாங்கள்தான். ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈராக்கில் அல்கொய்தா இயக்கத்தின் உயர் தலைவர்கள் அபு ஒமர் அல்-பக்தாதி மற்றும் அபு அயூட் அல்-மஸ்ரி ஆகியோர் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமா னங்கள் மூலம் தாக்குதல் நடத்தி தலிபான்களை அழித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆபியா சித்திக் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கெல்லாம் பழிவாங்கதான் கார் குண்டு வைத்தோம். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் தெக்ரிக்-இ-தலிபான் அலுவலக ஒருங்கிணைப்பாளர் குவாரி உசேன் மசூத் என்பவரின் பின்னணி குரல் ஒலிக்கிறது. அதில் ஆங்கிலத்தில் சப்-டைட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. இச்சம்பவத்தை தலிபான்கள் ஏற்பதற்கு தகுந்த எந்த ஆதாரமும் இல்லை என நியூயார்க் நகர போலீஸ் தலைமை அதிகாரி ரேமண்ட் கெல்லி தெரிவித்துள்ளார்.

மேலும் கார் குண்டு வைத்த தீவிரவாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் ஹகிமுல்லா மசூத்தின் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கடந்த மாதம் 4-ந்தேதி தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

திறைச்சேரியில் பணம் இல்லை : திண்டாடுகிறது அரசு

திறைச்சேரியில் பணம் இல்லாமல் அரசாங்கம் திண்டாடுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்குஸ போதியளவு பணம் இல்லை என்பதை பலரும் தமக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க, இதுவே காரணம். இந்த விடயங்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சீன பாஸ்பேட் உரத்தால் வந்தது ஆபத்து:இலங்கையில் பலருக்கு சிறுநீரக பாதிப்பு






இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேட் உரத்தில், 'காட்மியம்' என்ற வேதிபொருள் கலந்திருப்பதால் இலங்கையில் ஏராளமான இளைஞர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேட் உரங்கள், இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உரங்களால் வளர்ந்த அரிசி, தானிய வகைகளை உட்கொள்பவர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பேராசிரியர் சரத் பண்டாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:பாஸ்பேட் உரத்தில், 'காட்மியம்' என்ற வேதிப்பொருள் உள்ளது. பாஸ்பேட் உரத்தில் விளைந்த உணவுகளை உட்கொண்ட சீனர்கள் பலர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல இலங்கையில் சீன இறக்குமதி பாஸ்பேட் உரங்கள் பயன்படுத்தப்பட்ட அனுராதபுரம், பொலனருவா இடங்களில் உள்ள இளைஞர்கள், சிறுநீரக கோளாறால் அவதிப்படுகின்றனர்.அதிகப்படியான காட்மியம் ரத்தத்தில் கலந்து கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்கு சென்று கழிவு பொருட்களை வடிகட்டும் சிறுநீரகத் திறனை பாதிக்கச் செய்கிறது.இவ்வாறு சரத் பண்டாரா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளை வென்ற நாள்: இலங்கையில் அணிவகுப்பு






'விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தினர் பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும்'என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கை ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்ஷே கூறியதாவது:கடந்தாண்டு நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தின் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். இருந்தாலும். இந்தாண்டு மட்டும் வரும் 20ம் தேதி இந்த அணிவகுப்பு நடக்கும்.இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தமிழ் மக்கள், தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அவர்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு கோத்தபயா ராஜபக்ஷே கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

2 மே, 2010

வடக்கில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக்க விசேட செயலணி


7ம் திகதி முதல் நடைமுறை; 16இல் யாழ். நகரில் செயலமர்வு; வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தகவலவட மாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.தன்னால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணி, எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (மாகாண பொது நிர்வாக) இராசநாயகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் மாகாண கைத்தொழில் பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர், கூட்டுறவு பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணி தமது திட்ட அறிக்கையை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கவுள்ளதென்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயலணி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மாவட்ட ரீதியில் கூட்டுறவு கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது என்றார்.

இந்த செயலணி தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திலுள்ள கைத்தொழில், கிராமிய மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கென விசேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 16ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இந்தச் செயலமர்வின் போது மூன்று துறைகளைச் சார்ந்தவர்களுக்குத் தெளிவு படுத்தப்படவுள்ளதுடன் அவர்களது குறைநிறைகளும் கேட்டறியப்படும். மேற்படி மூன்று துறைகளையும் துரிதமாக மேம்படுத்துவதற்கான சில ஆலோசனை களையும் இந்த செயலணி வழங்கவுள்ளது.

இந்த செயலணி, வழங்கும் ஆலோசனை க்கு அமையவும், வேண்டுகோளுக்கமையவும் வட மாகாண சபையின் ஊடாக மேற்படி மூன்று துறைகளின் மேம்பாட்டுக்காக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டானில் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் சில தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் துறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயலணியின் மூலம் செயற் பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக வும் ஆளுநர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்

ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வசதிகளை மேம் படுத்துதல், பயிற்சி நிறுவனங்களை அமைத்தல், வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்தல், ஓய்வூதிய திட்ட மொன்றை நடைமுறைப் படுத்துதல் ஆகிய தேவைகள் பூரணப்படுத்தப்படும் அதேவேளை, ஊடக சுதந்திரத்தைப் போல் நாட்டின் ஒழுக்கவிழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று ஊடக த்துறைக்கான பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா இன்றைய உலக ஊடக சுதந்திர தின செய்தி யில் குறிப்பிட்டுள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :-

1991 மே மாதம் 3ஆம் திகதி நமீபியாவில் ஆபிரிக்க அச்சு ஊடக மாநாட்டில் ‘விண்டோக்’ பிரகடனம் நிறைவேற்றப் பட்டது. அப்பிரகடனத்தின் மூலம் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமை சுதந்திர ஊடகமொன்றின் தேவை உணரப்பட்டதுடன், சர்வதேச மட்டத்தில் சுதந்திர, சுயாதீன மற்றும் பல்தர ஊடகமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவையான அக்கறை உணரப்பட்டது.

யுனெஸ்கோ அமைப்பின் 26ஆவது உச்சி மாநாட்டில் விண்டோக் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன், அப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டதையடுத்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தின் 19ஆவது சரத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் பேச்சு சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போதும் அந்த உரிமையை உறுதிப்படுத்த முயற்சித்தே வந்துள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடித்து நாட்டின் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக இப்போதே நாம் உலக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கிறோம். எனவே புதிய ஊடக கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் ஊடகத் துறையுடன் தொடர்புபட்ட அனைவரும் இந்த தினத்தை உபயோகப்படுத்த உதவ வேண்டும் என்றும் பிரதி ஊடக அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் திருத்தம்

சபையில் நாளை சமர்ப்பிக்க அரசு தீர்மானம்; அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விளக்கம்தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்து நாளை 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆளுங் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில ஷரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இதன் மீதான விவாதம் இடம்பெற்று வாக்களிப்புக்கு விடப்படு மென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன. பாராளுமன்றம் நாளை 4ம் திகதி கூடுவதை முன்னிட்டு ஆளும் கட்சி பாராளுமன்றக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரட்ன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில் வாய் மூல விடைக்களுக்கான வினாக்கள் வேளையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதிலளிக்க வேண்டுமென்ற பணிப்புரையை ஜனாதிபதி இங்கு விடுத்துள்ளார்.

இதன்கென அமைச்சர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நாட்களில் 9.30 மணிக்கு சபைக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நேற்றைய இந்த ஆளுங் கட்சிப் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சுக்களின் வாகனங்களை ஒப்படைத்தல் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்பிருந்த அமைச்சுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்குப் பாரமளிக்க வேண்டிய வாகனங்களை இதுவரை ஒப்படைக்காமலுள்ளன. இவற்றை விரைவாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வாகனங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் புதிய அமைச்சுக்க ளுக்குத் தேவைப்படும் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித் துள்ளார். இதற்கிணங்க வாகனங்களை ஒப்படைப்பதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றைய இக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்திற்கான புதிய சபைத் தலைவர் மற்றும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் சார்பற்ற சகல இனங்களும் அங்கம் வகிக்கும் புத்திஜீவிகள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்-

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைக்க தீர்வுயோசனை குறித்து சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சம்பந்தமற்ற சகல இனங்களும் அங்கம் வகிக்கும் புத்திஜீவிகள் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் இத்தீர்மானம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பூட்டான் திம்பு நகரில் வைத்து, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய - இலங்கை தலைவர்களிடையில் அங்கு அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை விரிவுப்படுத்துவது, செனட் சபையை அமைப்பது, செனட் சபையின் பணிகள், வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் மாத்திரமல்லாது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் புளொட் தலைவரின் கருத்து-






காலத்தின் தேவை கருதி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது இன்று அவசியம் என உணரப்பட்டுள்ள நிலையில் இன்று (02-05-2010) வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் ஏ.எச்.சித்தீக் காரியப்பரின் கருத்துக்களத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களும் இவ்விடயம் தொடர்பில் புளொட்டின் நிலைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழல் உருவானால் அது வரவேற்கத்தக்கது. அவ்வாறானதொரு ஐக்கியம் ஏற்பட்டால் அதனை நாங்கள் வரவேற்போம். எங்களது பங்களிப்பினையும் வழங்கத் தயாராகவுள்ளோம். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் நாங்கள் எவருடனும் பேசத் தயாராகவிருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியிலும் இதற்கு ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதனை வரவேற்கிறோம். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக 13வது திருத்தச் சட்டமூலம் இருக்கமுடியாது. அதற்கு மேலாகத்தான் இருக்கவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படல் வேண்டும். அது ஒரு சமஷ்டி அமைப்பைக் கொண்ட தீர்வாக இருக்கவேண்டும். தமிழ் மக்கள் தாங்களே தங்கள் விடயங்களைக் கையாளக்கூடிய அதிகாரப் பகிர்வாக அது இருக்கவேண்டும். மேலும் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்ற விடயத்தில் ஆர்வம் காட்டாவிட்டால் அது ஒரு சாத்தியமான முடிவாக இருக்குமென நான் நம்பவில்லை. தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச் சேர்ந்து பேசுவது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...