2 மே, 2010

அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு



அமைச்சுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த மூன்று மாத காலத்திற்குத் தேவையான நிதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலை யில் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பையே கடந்த நவம்பர் மாதம் நடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அக் கணக்கு வாக்குகெடுப்பின் செலவினங்களுக் கான கால எல்லை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வரவுசெலவுத் திட்டமொன்று நிறைவேற்றப் படும் வரை அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து ஒதுக்குவதற்கு அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசெம்பர் வரையான ஆறு மாத காலத்திற்காக குறுகிய கால வரவு செல வுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் வழமைபோல் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்காக முழுமையாகச் செயற்படுவோம்-பிரித்தானிய தொழிற்கட்சி அறிக்கையில் தெரிவிப்பு


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம் என பிரித்தானிய தொழிற் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு தொழிற்கட்சியின் வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அரசால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடாத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் அமைதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது.

தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு தனது கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை நிறைவு செய்வதற்கு கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏன் தொழிற்கட்சி?

தொழிற்கட்சியின் முக்கிய பெறுமானங் களான அனைத்துலக தேசியம், சுதந்திரம் மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படை அம்சங் கள் தமிழ் மக்களின் அடிப்படை அம்சங்களாக அமைகின்றன. அதேவேளை, இப்பெறுமானங்களே இலங் கையில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் பெறுவதற்கு முக்கிய அடிப்படை அம்சங்களாக அமைகின்றன.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நாம் மேற்கொண்ட சில நடவடிக் கைகள் வெற்றி கண்டுள்ளன. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் தின் கடன் நிறுத்தப்படுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகை தற்காலிகமாக இடை நிறுத்தப் படுவதற்கும் தொழிற்கட்சியின் அழுத்தங்க ளும், புதிய கொள்கைகளும் காரணமாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு தொழிற்கட்சி தெரிவித்த எதிர்ப்பின் காரண மாக, அம்மாநாட்டை அங்கு நடத்துவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான, சுதந்திரமான விசாரணைகள் நடாத் தப்பட வேண்டும் என்பதை தொழிற்கட் சியின் தேர்தல் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் நீதியையும், சுதந்திரத்தையும் பெறுவதற்கான நீண்ட பயணத்தில் தொழிற் கட்சி உங்களுடன் தொடர்ந்து தோளுக்குத் தோள் நின்று உழைத்து வரும் என்பதை உறுதி செய்கின்றோம்.

இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவ தற்கு நாங்கள் முழுமையாக செயலாற்று வோம். அத்துடன், பிரித்தானியா தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த அரசு உட்பட பிரித்தானியாவில் இருக்கின்ற எல்லா அமைப்புகளுடனும் இணைந்து, போரின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியேற்றுவது, போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனநாயக ரீதியில் இவ்வமைப்புகளால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லா வகையான நடவடிக்கைகளையும் முன் னெடுப்பதற்கு நாம் ஆதரவு வழங்கிச் செய லாற்றுவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

இந்நிலையில், பிரித்தானியாவில் மட்டு மல்ல இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்களிலும் தொழிற்கட்சி அனைத் துலக அளவில் ஆக்கபூர்வமான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமானால், அக்கட்சி ஆட்சிபீடத்தில் மீண்டும் அமரும் வகையில் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் கடமையாகும் என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!!




சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈபிஆர்எல்எப் -பத்மநாபா அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நேற்று சனிக்கிழமை காலை மேதின ஊர்வலம் நடைபெற்றது. காலை 10மணிக்கு சுவிஸ் கெல்வெத்தியா பிளாத்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பமான புளொட் இயக்கத்தின் மேதின ஊர்வலம் பெல்வி என்னும் இடத்தில் நிறைவடைந்தது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெண்கள் குழந்தைகள் கழகதோழர்கள் கழக ஆதரவாளர்களும் கலந்து கொன்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.. மேற்படி மேதின ஊர்வலத்தில் புளொட் ஜேர்மன் கிளைத் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவ் ஊர்வலத்தில் மற்றும் ஒர் பகுதியில் கலந்து கொன்ட சுவிஸ் புலிகளின் மேதின ஊர்வலத்தில் இதுவரை காலமும் இல்லாத வகையில் முதன்முறையாக மிக சொற்ப அளவிலேயே மக்கள் கலந்து கொன்டு இருந்தனர். இதுவரை காலம் சுவிஸ் புலிகளின் மேதின ஊர்வலத்தில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் (புலிகளின் இணையங்களில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொன்டுள்ளனர் என தெரிவிப்பார்கள்) கலந்து கொன்ட போதும் இம்முறை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு 50ற்கும் 100க்கும் இடைபட்ட பொதுமக்களே கலந்து கொன்டுள்ளதுடன் அதிலும் பிரபாகரனின் இரு புகைப்படங்களும் சிறுவர்களின் கையில் பத்துக்கும் குறைவான புலிக்கொடிகளே காணப்பட்டது இது குறித்து அங்கிருந்த அரசியல் விமர்சகர் தெரிவிக்கையில்.. வெளிநாட்டில் இருந்த புலி ஆதரவு மந்தைகளை நம்பி பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது எனத் தெரிவித்தார்


மேலும் இங்கே தொடர்க...

1 மே, 2010

வடக்கில் மீளக்குடியமர்வோருக்கு புலம்பெயர்ந்தோர் உதவ முன்வர வேண்டும் பிரதியமைச்சர் முரளிதரன்






வடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கவும் வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர்ந்துள்ள மக்கள் முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

2003 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலகட்டத்தில் இறுதியாக பிரபாக ரனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியை விட்டுவந்த பின்னர் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகருக்கு பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சென்றிருந்தார்.

குறிப்பாக மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற் காகவே அவர் இந்த விஜயத்தை மேற் கொண்டார். மீளக்குடியமர்த்தப்பட்ட 10 குடும்பங்களுள் ஏழு குடும்பத்தில் குடும்பத்தலைவன் இல்லாத அவல நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கணவனை இழந்து பிள்ளைகளுடன் நிற்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் விதத்தில் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயம் செய்பவர்களாயின் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் பிள் ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிகள் பெற்றுக்கொடுக் கப்படல் வேண்டும்.

முதலில் இவர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதே எனது அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை விட்டு தான் இறுதியாக வரும் போது கண்ட வளமுள்ள நவீன கட்டடங்கள் நிறைந்த நகராக மீண்டும் மாற்றப்பட வேண்டும். இப்போது சோபை இழந்து போன கட்டடங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்துள்ள மக்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து அந்த மக்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றம் செவ்வாயன்று கூடுகிறது




பாராளுமன்றம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 க்கு மீண்டும் கூடுகிறது. அரசாங்க தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் முதலாவது அமைச்ச ரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இடி, மின்னல் தாக்கம்; 12 பேர் உயிரிழப்பு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவதான நிலையம் அறிவுறுத்தல்





இடி, மின்னல் தாக்கம் காரணமாக ஒரு மாத காலத்தில் பன்னிரெண்டு (12) பேர் உயிரிழந்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டிஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதியில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இம் மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நேற்று முன்தினம் நொச்சியாகமவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களி லிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ் வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மக்கள் மேம்பாடு; மீள் குடியேற்றம்; பாதுகாப்பு செயலர் நேரில் ஆராய்வு துரித செயற்பாடுகளுக்கு அறிவுறுத்தல்





யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ யாழ். குடா நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

29ம், 30ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அவர், யாழ். குடாநாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் ஆனையிறவு பகுதிக்கும் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் மதிப்பீடு செய்தார்.

பலாலி விமானத் தளத்தை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு விசேட மரியாதை

அணி வகுப்பு நடத்தப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் யாழ். குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள், யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள், மீள் குடியேற்றம், கண்ணிவெடி அகற்றும் பணிகள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் முன்னேற்றம், இராணுவம் மற்றும் சிவில் மக்களுக்கு இடையிலான உறவு களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கமளித்தார்.

சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட அவர், மக்கள் நலன் கருதிய பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

வட மாகாண கடற்படைத் தலைமை யகத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை வட மாகாண கடற்படைத் தளபதிரியர் அட்மிரல் எஸ். எம். பி. வீரசேகர வரவேற்றதுடன் கடற்பரப்பில் முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

புலிகளின் செயற்பாடுகளால் எந்தவித செயற்பாடும் இல்லாமல் இருந்த காங் கேசன்துறை துறைமுகத்தின் இறங்குதுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.

இந்த இறங்குதுறை மீண்டும் ஆரம்பிக் கப்பட்டதன் மூலம் இதுவரை திருகோண மலையில் செய்து வந்த கப்பல் திருத்தப் பணிகளை காங்கேசன்துறையிலேயே மேற்கொள்ள முடியும் என்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

யாழ். கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவர்களின் சுக நலன்களையும் விசாரித்தார்.

இதே வேளை, நயினாதீவு நாகதீப விகாரைக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் மத வழிபாடுகளிலும் ஈடு பட்டார்.

வன்னி மனிதாபிமான நடவடிக் கையின் போது 2009 ஜனவரி மாதம் 10ம் திகதி ஆனையிறவு படையினரால் கைப் பற்றப்பட்டு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சுதந்திர நடமாட்டத்திற்கு வழிவகுத்ததை நினைவு கூரும் முகமாக ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய நினைவு தூபியை பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்தார். இலங்கையை அனைவரும் தாங்கி நிற்பது போன்றும் வட பகுதியில் மலர் மலர்ந்தது போன்றும் சித்தரிக்கும் வகையில் நினைவு தூபி அமைக் கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு ஆனையிறவு பிரதேசம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...