வவுனியா நலன்புரி நிலையத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஒருகட்டமாக வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள வவுனியா வடக்குப் பகுதியைச் சேர்ந்த 540பேர் இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 1150பேர் நேற்றையதினம் அவர்களது சொந்த இடமான கிளிநொச்சி கரைச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா நலன்புரி நிலையங்களில் 76,000பேர் மாத்திரமே இன்னமும் எஞ்சியுள்ளதாகவும் அவர்களும் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
27 மார்ச், 2010
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்-

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அங்கு உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் அவர்கள் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், ஆசிகுளம் கிராமத்தைப் பொறுத்தமட்டில் இது ஓர் எல்லைப்புறக் கிராமமாகும்.
இந்த எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதற்காக எமது கட்சி எந்தளவுக்கு பாடுபட்டதென்பதும், எவ்வளவு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்தது என்பதும் இங்கு வாழும் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயமாகும். நாம் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் இப்பகுதிகளில் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளுக்குப் பிறகு இப்பிரதேசங்களில் எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் அபிவிருத்திக்கான எந்தவொரு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்களும் தமிழ் தேசியவாதிகள் தான். அதில் யார் கூட யார் குறைய என்று சொல்வதற்கு எதுவுமில்லை. ஆயினும் தமிழ்த் தேசியத்தின் பெயரினால் மக்களின் அவலத்தில் அரசியல் நடத்த முடியாது. இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்களின் தொழில் வாய்ப்பு, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல்வேறு அத்தியாவசிய தேவைகளும் பூர்த்திசெய்து கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே இந்நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமாகும். எனவே பொதுத் தேர்தலின்போது நீங்கள் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களுக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதி மக்கள் சிலர் இங்கு உரையாற்றுகையில், புளொட் அமைப்பு இப்பகுதியில் இல்லாதிருந்தால் இப்பகுதிகளில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்திருக்க முடியாது. இனிமேலும் இப்பகுதிகளில் பாதுகாப்பாக வாழவும் முடியாது.
எனவே அனைத்து மக்களும் புளொட் அமைப்பினரை வரவேற்று பூரண ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்குவதே சிறந்ததாகும். கடந்த காலங்களில் புளொட் அமைப்பினர் இப்பகுதி மக்களின் அமைதியான வாழ்விற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளுடனான சேவைகளை புரிந்துள்ளனர். இதன்போது பல்வேறு இழப்புக்களையும் அவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களின் சேவைகள் தற்போதும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே அவர்களின் சேவைகள் தொடர வேண்டும். இதற்கு அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.
இந்திய எல்லைக்கு பாகிஸ்தான் கூடுதல் படைகளை

இந்திய எல்லைக்கு பாகிஸ்தான் கூடுதல் படைகளை அனுப்பி உள்ளதாக லண்டனில் உள்ள அந்நாட்டு தூதர் வாஜித் ஷாம்சுல் ஹசன் தெரிவித்தார்.
லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதன் காரணமாகவே இந்திய எல்லைக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவுடன் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் முழுத் திறமையையும் பாகிஸ்தானால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் பலவீனமாக இருக்கக் கூடாது என்பதையும் பாகிஸ்தான் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
ஆனால்,இந்தியாவின் நெருக்குதல் காரணமாக எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் முழு பலத்தோடு எங்களால் செயல்பட முடியவில்லை. இந்திய எல்லையில் அமைதி நிலவ வேண்டும்.
அப்போது தான் தலிபான்களுக்கு எதிராக சிறப்பாக போரிட முடியும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பதற்றத்தைக் குறைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் நாங்கள் அழைப்பு விடுத்தாலும் எந்தவொரு நாடும் இது குறித்து இந்தியாவிடம் பேச மறுக்கிறது என்றார் அவர்.
இந்திய எல்லைக்கு கூடுதல் படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற நோக்கத்தில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து ஆயுதப் பயிற்சி அளித்து வருகிறது பாகிஸ்தான்.
அதேநேரத்தில் சர்வதேச
நாடுகளிடம் தான் நல்ல பிள்ளை போல் வேஷம் போடுகிறது.
தான் அமைதிக்குத் தயாராக இருப்பது போலவும் இந்தியாதான் அமைதிப் பேச்சுக்கு முன்வருவதில்லை என்றும் பிரசாரம் செய்து வருகிறது பாகிஸ்தான்.

இந்திய மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

:
மாணவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மாணவர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பிரிட்டனில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
உயர் கல்வி என்ற பெயரில் அவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப கல்வி போதிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
பிரிட்டன் பல்கலைக்கழங்களின் முகவர்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். வெளிநாட்டில் உயர் கல்வி என்ற ஆசையில் முகவர்கள் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் பிரிட்டனில் படிக்கச் செல்கின்றனர்.
சாதாரணமாக பிரிட்டன் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தைபோன்று மூன்று மடங்கு கட்டணம் இந்திய மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. அதாவது முதுகலைப் பட்டத்துக்காக ஓராண்டுக்கு பிரிட்டன் மாணவரிடமிருந்து ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்போது, அதுவே இந்திய மாணவரிடமிருந்து ரூ.6 லட்சமாக வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு பணத்துக்காகவே பிரிட்டனில் உள்ள சில பல்கலைக்கழங்கள் செயல்பட்டுவருவதுடன் அவற்றின் கல்வி போதிப்புத் தரமும் மிகவும் மோசமாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் இந்திய மாணவர்கள் பலர் ஏமாற்றம் அடைகின்றனர் என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமை அதிகாரி மார்ட்டின் டேவிட்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை அழைத்து வருவதில் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. இதன் மூலம் அப்பல்கலைக்கழங்கள் பணம் கொழிப்பதால், கல்வியை போதிப்பதில் கோட்டைவிடுகின்றன.
இதனால் அதுபோன்ற பல்கலைக்கழங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் அப்பல்கலைக்கழங்கள் அதிக அளவில் மாணவர்களை தேர்வு செய்வது தடுக்கப்படும் என்று டேவிட்சன் தெரிவித்தார்.

இலங்கையில் வறுமையால் மகன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பெண்!

இலங்கையில் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் 4 குழந்தைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் ஒரு பெண்.
பெண்ணின் துயரமான வாழ்க்கை நிலைமையையும், அவரது கோரிக்கையையும் பரிசீலித்த நீதிபதி, 4 குழந்தைகளையும் ஏற்று அரசு குழந்தை காப்பக மையத்திடம் ஒப்படைத்தார்.
அந்த பெண்ணின் மற்றொரு மகன் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தான்.
வறுமையால் 3-வயதுடைய அந்த சிறுவனை அவரது தாய் தான் ஆற்றில் தூக்கி வீசினார் என்றும், இதனால் கோமா நிலையை அடைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்றும் புகார் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய அந்த பெண், தனது நிலைமையை எடுத்துக்கூறி தனது 4 குழந்தைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதை பரிசீலித்த நீதிமன்றமும் 4 குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு அரசு குழந்தை காப்பக மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த 4 குழந்தைகளையும் அரசே ஏற்றுக்கொண்டது.
இலங்கையின் மேற்கு பகுதியான ஹோமகாமாவில் அந்த பெண் தனது கணவர், 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் அவரை குழந்தைகளுடன் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனால் வாழ்க்கை நடத்த வருமானம் ஏதும் இன்றி அந்த பெண் தனது குழந்தைகளுடன் திண்டாடியுள்ளார். வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் நெருக்குதல் அளித்துள்ளார்.
அந்த பெண்ணின் தாய், தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டனர். அவருக்கு இருந்த ஒரே ஆதரவு அவரது சகோதரிதான். ஒரு சில மாதங்கள் உதவி வந்த அவரது சகோதரியும் மேலும் உதவ முடியாத நிலைக்கு ஆளானார்.
இதனால் அந்த பெண் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் விரக்தி அடைந்துதான் ஒரு மகனை ஆற்றில் வீசியதாகவும், பிற குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்து யோசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது நிலைமையை அறிந்த சிலர் நீதிமன்றத்தை அணுக யோசனை தெரிவித்ததாகவும், இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரியவந்துள்ளது.

'மதமாற்றம் தவறல்ல'-சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள்
பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.
சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.
"சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு' என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிக்குத் தாவிய யோகராஜன்மீது இ.தொ.கா. ஆதரவாளர்கள் தாக்குதல்
ஐக்கியத்
தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் நேற்றுமாலை ஹட்டன் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில், இ.தொ.கா. ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆர்.யோகராஜன் சிறு காயங்களுக்குள்ளானதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்துவந்த ஆர்.யோகராஜன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சித் தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விவசாயியின் வயிற்றில் 500 கிராம் எடையில் கல்! : மகியங்கனையில் சம்பவம்

விவசாயி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து சுமார் 500கிராம் எடையுள்ள கல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று மகியங்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
எச்.எம்.ஆரியசேன (வயது 43) என்பவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுநீரகத்தில் கல் இருப்பதனை உறுதி செய்தனர்.
இவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வேளை, வைத்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் 26 சென்றி மீற்றர் சுற்றளவுடைய கல் இருந்தமை தெரிய வந்துள்ளது.
மகியங்கனை வைத்தியசாலையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம்பெற்றது இதுவே முதல் தடைவ என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். வணிகர் சங்கக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் ஆரம்பமாகிறது.
யாழ்ப்பாண வணிகர் கழகம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், யாழ். மத்திய கல்லூரியிலும் ஆரம்பமாகிறது.
இக்கண்காட்சியில் யாழ்ப்பாண உள்ளூர் உற்பத்திப் பொருட்களுடன் தென்னிலங்கை வர்த்தகர்களின் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
வர்த்தகக் கண்காட்சியை யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆரம்பித்து வைக்கின்றார்.
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஐந்து வருடகால இடைவெளியின் பின்னர் நேற்று வெள்ளிக்கழமை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரியா தலைமையில் தமிழ் பண்பாடுகளுடன் மிகவும் எழுச்சிகரமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
பல்கலைக்கழக வேந்தா பேராசிரியர் ம.சிவசூரியா, உப வேந்தா பேராசிரியர் நா.சண்முகலிங்கன் ஆகியோர் குடை ஆலவட்டத்துடன் முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து பட்டம் பெறும் மாணவாகள் அணிவகுத்துப் பட்டமளிப்பு விழா நடைபெறும் கைலாசபதி மண்டபத்திற்கு மங்கள் வாத்தியத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
2005, 2006, 2007ஆம்ஆண்டுகளில் பயிற்சிநெறிகளை நிறைவு செய்த 3972 பேர் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
நேற்று ஆரம்பமான இந்நிகழ்வு இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். தினமும் ஐந்து அமர்வுகள் என்ற அடிப்படையில் இந்த பட்டமளிப்பு விழா இடம்பெறுகின்றது. இதில் கலாநிதி முதுகலைமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா எனப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
432 பேர் முதுகலைமாணிப் பட்டத்தையும், 361 பேர் முதுகலைமாணி டிப்ளோமாவையும், 2427 பேர் இளமாணிப் பட்டததையும், 625 பேர் வெளிவாரிப் பட்டத்தையும் 127 பேர் டிப்ளோமாப் பட்டத்தையும் பெறுகின்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)