27 மார்ச், 2010

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்


பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் 'கல்ப் டெய்லி நியூஸ்' ,

"தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.

பாஹ்ரேனில் இருக்கும் அவரது சகோதரி தெரிவிக்கையில்,

"இஸ்லாம் மதம் குறித்தும், மதங்களை ஒப்பிட்டும் இரு புத்தகங்களை சாரா மலனி பெரேரா எழுதியுள்ளார். இவற்றுள் ஒன்று 'இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு'. இந்தப் புத்தகத்தில், ஏன் அவர் மதம் மாறினார் என்பது குறித்து எழுதியுள்ளார்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இரணைமடு விமான ஓடுபாதையை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க நடவடிக்கை





புலிகளால் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதையினை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவைகளைக் கொண்ட தொகுதியாக நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம் வடமாகாணத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டமாக அமையுமென்று நம்பப்படுகிறது. புலிகள் அப்பகுதியில் இருந்தகாலத்தில் இரணைமடுகுளத்தை அண்டிய அடர்ந்த வனப்பகுதியில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. உத்தேச விமான நிலையத் தொகுதியில் விமான சேவைகள் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையங்கள் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் உத்தேச முதலீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதியில் மீன்பிடியினைக் கருத்திற் கொண்டு நவீன தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்ட நிலையமொன்றை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பிலுள்ள ஏனைய ஓடைகளிலும் படகுச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை


கொழும்பிலுள்ள மேலும் சில ஓடைகளில் படகுச் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கடற்படையினர் கவனம் செலுத்தியுள்ளனர். இதன் பிரகாரம் புனித செபஸ்ரியன் ஓடை, தியவன்னா குடா, தெகிவளை ஓடை, பேலியகொட ஓடை மற்றும் ஹீனெல ஆகியவற்றின் ஊடாக படகுச் சேவைகளை ஆரம்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே இந்தப் படகு சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெள்ளவத்தையின் கிருலப்பனை ஓடையில் கடற்படையினரின் படகுசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை இந்த படகுச்சேவை இடம்பெற்று வருவதாகவும் கெப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். ஏனைய ஓடைகளிலும் படகு சேவைகளை ஆரம்பிப்பதற்காக ஓடைகளை சுத்திகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படகு சேவைகளை சீராக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் ஓடைகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறு அதன் இரு புறங்களிலும் வாழும் மக்களிடம் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்டத்தில் 209சாதாரண வாக்களிப்பு நிலையங்களையும் 32இடம்பெயர்ந்தோருக்கான வாக்களிப்பு நிலையங்களையும் அமைக்க ஏற்பாடு




எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 209 சாதாரண வாக்களிப்பு நிலையங்களும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென 32வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்காக 16வாக்களிப்பு நிலையங்களும் சரணடைந்து புனர்வாழ்வு நிலையங்களில் வாழும் வாக்காளர்களுக்கென 12வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.


வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 50வாக்கெடுப்பு மாவட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முல்லைத்தீவு தொகுதியில் தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட பகுதியில் 18வாக்களிப்பு நிலையங்களையும், மீளக்குடியமர்த்தப்படாத பிரதேசங்களுக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 32வாக்களிப்பு நிலையங்களையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் தேர்தல் தொகுதியில் 02இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் வதியும் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்களை புத்தளத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதியில் 85,322 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களும், வவுனியா தேர்தல் தொகுதியில் 1,12,924 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 68,729 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுமாக மொத்தம் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 2,66,975 வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மெனிக்பான் முகாமில் தங்கியிருந்த மேலுமொரு தொகுதி மக்கள் மீள்குடியமர்வு, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர்கள் படகுடன் கைது






வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த ஒருதொகுதி இடம்பெயர்ந்த மக்கள் இன்றையதினம் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1150பேர் இன்றையதினம் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மேலுமொரு தொகுதி இடம்பெயர்ந்த மக்கள் நாளையதினம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 23 இலங்கைத் தமிழர்களை தமிழகப் பொலிசார் நேற்று கைதுசெய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முகாம்களில் வசித்து வந்துநிலையில் இவர்கள் இலங்கைசெல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகுகளின் மூலம் தப்பிச்செல்ல முயன்றதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த 23பேரும் கைதுசெய்யப்பட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடல் எல்லைப் பகுதிவரை செல்வதற்காக இவர்களிடமிருந்து 5000ரூபா இந்தியப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியில் 75% நிறைவு


நவம்பரில் முதல் கப்பல் பயணிக்கும்
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்மாணப் பணிகளில் 75 வீதமானவை நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் தோண்டப்பட்ட துறைமுகப் பகுதியில் கடல் நீர் நிறைக்கப்படவுள்ளதோடு நவம்பர் மாதத்தில் முதலாவது கப்பல் இங்கிருந்து பயணிக்கவுள்ளது. நீர் முழுமையாக நிறப்பப்பட முன்னர் நீரில் இறங்கி விளையாட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக பணிகளை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக 40 வருடங்கள் பிடிக்கும் என்று குற்றஞ்சாட்டிவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அன்றைய தினம் நீரில் விளையாட வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அவர் கூறுவது போலன்றி நவம்பர் மாதத்திற்கு முன் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படும்.

துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பாரிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக 35 கம்பனிகள் முன்வந்துள்ளன. கனரக வாகன உற்பத்தி கம்பனி ஆட்டோ கம்பனி, இரு சீமெந்து உற்பத்திக் கம்பனிகள், உரக் கம்பனி, கப்பல் திருத்தும் கம்பனி உட்பட பல கம்பனிகள் என்பன இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளன. மற்றொரு எரிவாயுக் கம்பனியும் துறைமுக பகுதியினுள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் எரிவாயு விலைகள் எதிர்காலத்தில் குறையும். பல ஹோட்டல்களும் இங்கு புதிதாக கட்டப்பட உள்ளன.

துறைமுகம் காரணமாக அம்பாந்தோட்டை இளைஞர் யுவதிகள் 60 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

இரண்டாம் கட்டப் பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம்

மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் பிஎம். வி. டல்காபீ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முக வர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்த மான மேற்படி பிஎம். வி. டல்காபீ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர் களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடு க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம்




வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி
முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடு ம்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதற்கு பலமான பாராளுமன்றம் அவசியம்




பொறுப்புமிக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுங்கள் மி ஜனாதிபதி
வெறும் பேச்சுக்களோடு காலம் கடத்துபவர்களை விடுத்து நாட்டுக்குச் சேவைசெய்யக் கூடிய பொறுப்புமிக்க பிரதிநிதிகளை மக்கள் இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்வது முக்கிய மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

விருப்பு வாக்குப் பட்டியலில் முதலா வதாக உள்ளவரன்றி இறுதியாக வருபவர் கூட அமைச்சராகலாம். அதனை நாமே தீர்மானிப்போமெனத் தெரிவித்த ஜானதி பதி; அதனால் விருப்பு வாக்கு விடயங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் 2005ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளில் 95 வீதமானவற்றைத் தம்மால் நிறைவேற்ற முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பலமான பாராளுமன்றம் அவசியமெனவும் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிபிலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுமேதா ஜீ ஜயசேன, ஜகத் புஷ்ப குமார, ஊவா மாகாண முதலமைச்சர் சகூந்திர ராஜபக்ஷ உட்பட மாகாண அமைச்சர்கள், வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-

2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்வைத்து நான் தேர்தலில் நின்றபோது நீங்கள் என்னை வெற்றிபெறச் செய்தீர்கள். அதனை நாம் நிறைவேற்றியுள்ளோம். நாட்டை ஒன்றிணைத்து 95 வீத வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றினோம்.

அதேபோன்று மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பலமான பாராளுமன்றம் தேவை. அதற்காகவே இப்பாராளுமன்றத் தேர்தலை நடத்துகின்றோம். இதன் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட பலமான பாராளுமன்றத்தை அமைப்பது அவசியமாகின்றது.

நாட்டைக் கட்டியெழுப்பவும் நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமயமாக்கவும் பலமான பாராளுமன்றம் அவசியம். மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதனை நிவர்த்தித்து மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. எதிர்க்கட்சியினர் வெறுமனே விமர்சனங்களை முன்னெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பானதே. எனினும் அது நியாயமானதாக இருக்க வேண்டும்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு என ஒரு நிரந்தரமான கட்சி இல்லை. கட்சிக்குள்ளேயே உட்பூசல் போட்டி பொறாமைகள். மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடும் விஜேகோன் என்பவர் இதனால் நேற்று எம்முடன் வந்து இணைந்துகொண்டார்.

பிபிலை மக்கள் பல்லாண்டு காலமாக எம்முடன் உள்ளவர்கள். அவர்களுக்கு நான் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சகல பிரதிநிதிகளும் எனது பிரதிநிதிகளே. அவர்களுக்கு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். அது எனக்கே வழங்கும் ஆதரவு என்பதை மறந்துவிடக் கூடாது.

நேற்று பிபிலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மேற்படி பிரசாரக் கூட்டத்திற்கு முன்பதாக பிபிலை நகரில் 116 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட் டுள்ள போதனா வைத்தியசாலையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மொனராகலை மாவட்டத்தில் இம்முறைத் தேர்தலில் இராமசாமி அழகன் என்ற தமிழர் ஒருவரும் போட்டியிடுகின்றமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்




முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பிபல்லூடக பிரிவுபீ - ஆணையர் நேற்று அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங் களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோக த்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்த னர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோக த்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென் றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப் பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப் பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங் களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையா ளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண் காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...