26 மார்ச், 2010

ஏகப் பிரதிநிதியென்பது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகமென்றும், தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும் அணுகுமுறையிலிருந்து மாறி



தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன்

ஏகப் பிரதிநிதியென்பது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகமென்றும், தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும் அணுகுமுறையிலிருந்து மாறி, இணக்கப்பாட்டு அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் பிஒஃபர்பீ தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகரும், தந்தை செல்வாவின் புதல்வருமான சட்டத்தரணி எஸ்.ஸி.சந்திரஹாசன் தெரிவி த்தார். உண்மையின் யதார்த் தத்தின் அடிப்படையில் செயற்பட்டால் தமிழ் மக்கள் சாதிக்க முடியு மென்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டார்.

பிதமிழ் மக்களின் எதிர்காலமும் காலத்துக்கு ஏற்ற அணுகுமுறையும்பீ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பிரமடா ஹோட்ட லில்பீ நடந்த கலந்துரையாடலில் சந்திரஹாசன் கருத்துரை வழங்கினார்.

தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாம் இணக்கப்பாட்டு அணுகுமுறையில் செயற்பட்டதால் பல முக்கிய விடயங்களைச் சாதித்திருக்கிறோம். குறிப்பாக, இந்தியாவில் அகதிகளாக உள்ள சுமார் 29 ஆயிரம் பேருக்கு இலங்கைப் பிரஜாவு ரிமையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது.

அதேபோன்று, அகதி முகாம்களில் வாழும் மாணவர்களுக்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டதுபூ என்று சுட்டிக்காட்டிய சந்திரஹாசன், புநான் 26 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை வந்துள்ளேன். தெல்லிப்பழையில் உள்ள என் வாழ்விடத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏனைய கிராமங்களில் மக்களின் வாழ்க்கை நிலையையும் அவதானித்தேன்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் மீண்டெழுந்ததைப் போல், நாமும் மீள முடியாதாபீ என்று சிந்தித்தேன். அப்போதுதான் புமக்களை முன்னேற்ற ஏதாவது செய்ய முடியாதா?பூ என்று ஷான் சண்முகநாதன் கேட்டார். இப்போது அவருடன் இணைந்து அதனை நிறைவேற்ற முன்வந்துள்ளேன்பூ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஷான் சண்முகநாதன் வரவேற்புரை நிகழ்த்துகையில், புதமிழர்கள் புதிய அணுகுமுறையைக் கைக் கொண்டு புதிய பாதை வகுத்துச் செயற்பட வேண்டும். எமது தேவைகளையும் சிந்தனைகளையும் நாம் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகளை இணங்காண வேண்டும். ஒரே மனநிலையில் ஒன்றுபட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளும் போது இணக்கமுடன் செயற்பட வேண்டும்பூ என்று குறிப்பிட்டார்.

பராசிரியர் சோ. சந்திரசேகரன், இலண்டனிலிருந்து வந்திருந்த சொலிசிட்டர் ஆரிய ஸ்ரீஹரன், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் ஆகியோரும் கருத்துரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த பெருந்திரளான புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தமிழ் மக்களின் கரிசனைகள், எதிர்காலவியல் நோக்கு தொடர்பில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்வாறான கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டு ள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர் ஷான் சண்முகநாதன் தனது நன்றி உரையில் குறிப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜோன்ஸ்டன், இந்திக பாராளுமன்றம் வர முடியும்





கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக மீண்டும் கூட்டப்படும் போது, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க முடியும் என்பது அரசின் நிலைப்பாடு. வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்ற த்தை மீண்டும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்கு மட்டுமே கூட்ட முடியும் எனினும் கலைக்கப்பட்டுள்ள பாராளும ன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் 225 பேரைக் கொண்ட உறுப்பினர்களில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

இதேவேளை, அரசியல மைப்பின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட மாட்டாது என அமைச்சரவைக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அறிவித்துள்ளது என்றும் அவர் தெரி வித்தார்.

அவ்வாறெனின் எதிர்வரும் 6ம் திகதி அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காக சபை கூடும் போது மேற்படி அமைச்சர்கள் வரமுடியுமா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது முடியும் என அவர் பதி லளித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

செயல்திறன் மிக்கவர்களுக்கே ஐ. ம. சு. மு. அரசில் உரிய இடம்




விருப்பு வாக்குகளுக்காக எவரும் முண்டியடிக்க தேவையில்லை - ஜனாதிபதி
விருப்பு வாக்குக்காக எவரும் முண்டியடிக்கத் தேவை இல்லை. அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு வந்தாலும் குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணி அரசாங்க த்தில் செயல் திறன் மிக்கவ ர்களுக்கே உரிய இடம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெலிமடையில் தெரிவித்தார்.

விருப்பு வாக்கு பட்டி யலில் குறை வான வாக்குக ளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவர் செயல் திறன்மிக்கவராயின் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கப் பின்நிற்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐ. ம. சு. மு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் வெலிமடை, கெப்பிட்டிபொல மகாவித்தியாலய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகை யில் :- பதுளை மாவட்ட ஐ. ம. சு. மு. அபேட்சகர்கள் மத்தியில் விருப்பு வாக்குக்கான முண்டியடிப்பு இல்லை என நான் அறிகின்றேன். இதனையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

விருப்பு வாக்குக்காக எவரும் முண்டியடிக்கத் தேவையில்லை. ஒருவருக்கு நான்கு வாக்குகள் உள்ளன. முதல் வாக்கை வெற்றிலைச் சின்னத்திற்கு முன்பாக புள்ளியிட்டு அளியுங்கள். இதர மூன்று விருப்பு வாக்குகளையும் பாவித்து உங்களது பாராளுமன்ற பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள்.

விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் முண்டியடித்து, முரண்பட்டுக்கொள்ளாதீர்கள். விருப்பு வாக்குப் பட்டியலில் அதிகப்படியான விருப்பு வாக்கைப் பெற்று முதலாமிடத்தில் வந்தாலும், குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் ஐ. ம. சு. மு. அரசாங்கத்தில் செயல்திறன் மிக்கவர்க ளுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும். இதனை ஐ. ம. சு. மு. அபேட்சகர்கள் சகலருக்கும் சொல்லி வைக்க விரும்பு கின்றேன். நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படவிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கதைத்து, கதைத்து காலம் கடத்தும் பாராளுமன்ற அதிகாரம் எமக்குத் தேவை யற்றது. மாறாக வேலை செய்யக்கூடிய வலுவான பாராளுமன்றமே அமைக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதிலும் வலுப்பெறுவதிலும் தான் எமது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் தங்கியுள்ளது. அப்போதுதான் இப்போதைய விடவும் நாளைய மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதனை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

இதேவேளை, பண்டாரவளைப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிவரும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். இதற்கென எட்டு (8) பில்லியன் ரூபா செலவிலான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

நான் ஜனாதிபதி பதவியை ஏற்ற நான்கு வருட காலப் பகுதியில் பய ங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்தினேன். அத்தோடு துரித அபிவிருத்திக்கான ஒளியையும் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். 2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக முதலில் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தினேன். தென்பகுதி மக்களை ஓரணியில் திரட்டியிராவிட்டால் வட பகுதியை ஐக்கியப்படுத்தி இருக்க முடியாது.

நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது எம்மை நல்ல மனிதராகப் பார்த்த சிலர் பின்னர் எம்மை சகோதரர்கள் கம்பனி என விமர்சிக்க தொடங்கினார்கள். என்னைப் பொறுத்தவரை குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் குடும்பமே அழிந்துவிடும். இது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளை நானறிவேன். அதற்கான பதில் மஹிந்த சிந்தனையின் முன்னோக்கு கொள்கை பிரகடனத்தின் 63ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இச்சமயம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கட்சிபேதமின்றி சகலரும் பங்கேற்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம்




ஏப். 22ம் திகதி கூடும் புதிய பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும் முன்னுரிமை
தேர்தலின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினுள் எதிர்க் கட்சியினரை வேறுபடுத்தி வைக்காமல் நாட்டின் நன்மைக்காக, அபிவிருத்திக்காக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கும் அவர்களது பங்களிப்பை நேரடியாக பெற்றுக் கொள்ளவும், அவர்கள் தாமாகவே முன்வந்து பங்களிப்பை செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும்.

குறிப்பாக இவ்வாறான நடவடிக்கைக்கு அரசியலமைப்பில் தடைகள் உள்ளதா என்பது பற்றி ஆராயவும், அவற்றை களையவும் முன்னுரிமை வழங்கப்படும்.

நடைபெறவுள்ள தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டுக்கு அதிக வாக்குகளை பெறுவது மட்டுமல்லாமல் பலம்மிக்க பாராளுமன்றத்தையும் உருவாக்குவது உறுதியாகியுள்ளது.

நாட்டின் நலனுக்காகவும் பொது நோக்கத்திற்காகவும் அனைத்து தரப்பினரையும் நேரடியாக பங்களிப்பு செய்ய வைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். இந்த நடைமுறை டொனமூர் ஆட்சி முறையின் கீழ் இருந்தது. அத்துடன் நாட்டின் நலனுக்காக தன்னோடு இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

எவரையும் ஒதுக்கி வைப்பது அவரது நோக்கமல்ல. அதற்கான தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கென அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் அடித்தளமொன்றை அமைத்துள்ளது.

தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக கட்சிகளுக்கிடையே முறுகல்கள், மோதல்கள் ஏற்படுவதற்கு பதிலாக கட்சிக்குள்ளேயே பிளவுகளும், மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

அதேவேளை ஊழல் இடம்பெறுவதற்கும் இந்த விகிதாசார தேர்தல் முறையே அடிப்படையாக அமைந்துள்ளது. மேலும் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைக்கவும், பலமற்றோர் பாதிக்கப்படுவதற்கும் இந்த தேர்தல் முறை வழிவகுக்குகின்றது.

சில தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமலும், சில தொகுதிகளுக்கு இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதையும் விகிதாசார தேர்தல் முறையில் காணலாம். இவை நீக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் உள்ளனர். இதனை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை யுடன் கூடிய பலம் மிக்க அரசு தேவைப்படுகிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

25 மார்ச், 2010

ஆபரேஷன் மூலம் மார்பில் வெடிகுண்டை வைத்து விமானத்தை தகர்க்க சதி; அல்கொய்தா திட்டம் அம்பலம்





ஆபரேஷன் மூலம் மார்பில் வெடி குண்டை புதைத்து வைத்து விமானங்களை தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் இப்போது ஏராளமான மனித குண்டுகளை பயன்படுத்த ஏராளமான பெண்களையும் தேர்வு செய்துள்ளனர்.

அவர்களை பல்வேறு வகையான தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதில் உடலில் வெடி குண்டை புதைத்து வைத்து தகர்க்கும் திட்டமும் ஒன்று.

பெண் தீவிரவாதிகள் மார்பில் பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் மூலம் குண்டுகளை புதைத்து வைத்து விமானங்களில் தாக்குதல் நடத்த செய்வது அவர்களது முக்கிய திட்டமாகும்.

அல்கொய்தா இயக்கத்தில் பல டாக்டர்களும் இருக்கின்றனர். பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் கிராமங்களில் உள்ள அல்கொய்தா முகாமில் இருக்கும் இந்த டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் மார்பில் குண்டுகளை புதைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

மார்பு அல்லது பின்பு சதை பகுதியில் 5 அவுன்சு உள்ள வெடி மருந்தை பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து புதைத்து வைத்து விடலாம். இதை ஸ்கேனர் கருவிகளால் கண்டு பிடிக்க முடியாது.

விமானத்தில் செல்லும் போது இந்த குண்டை வெடிக்க செய்தால் விமானத்தில் ஓட்டை விழும் அளவுக்கு தாக்கும் சக்தி இருக்கும். ஓட்டை விழுந்தால் மேற்கொண்டு விமானம் பறக்க முடியாமல் கீழே விழுந்துவிடும் இந்த முறையில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

எனவே இதுபோன்ற தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பது குறித்து வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் கலாநிதி பாலித கொஹன சந்திப்பு-

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலாநிதி பாலித கொஹனவுக்கும் ஐ.நா.சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனின் சிரேஸ்ட ஆலோசகர் விஜய் நம்பியாருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்தே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா சபையின் பொதுச்செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். குறித்த நிபுணர்குழுவை அமைப்பது தொடர்பிலான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பான்கீ மூன் கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியன் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை அரசுடன் இந்த நிபுணர்குழு தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பான்கீ மூன், இந்த நிபுணர் குழுவிற்கு உறுப்பினர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்ஸ் தூதுவர் யாழ் குடாநாட்டிற்கு விஜயம், நிபுணர் குழு அமைப்பது தொடர்பில் ஐ.நாவின் அழைப்பை ஜப்பான் நிராகரித்தது-


பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிக்கோ இன்று யாழ். குடாநாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அவர் இன்றுபிற்பகல் 3.30அளவில் யாழ். குடாநாட்டைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் யாழ். மாவட்ட அரசஅதிபர் கே.கணேஷ் மற்றும் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் விடுவிக்கப்பட்ட அழைப்பினை ஜப்பான் நிராகரித்துள்ளது. ஜப்பான் நாட்டு உயரதிகாரி யசூசி அகாசிக்கு விடுக்கப்பட்ட அழைப்பையே அவர் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் 94அகதிகளுடன் மற்றுமொரு படகு மீட்பு-



அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் 94அகதிகளுடன் மற்றுமொரு படகு அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் இலங்கையர்களும் இருக்கலாமென்று தகவல்கள் தெரிவிக்கின்றதுடன், இப்படகு தற்போது கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ்தீவில் அதிக நெருக்கடி நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கெவின்ரூட் தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்தப்படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அதிகளவில் அவுஸ்திரேலியா நோக்கி வந்த சேர்ந்த படகு அகதிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே இவ்வருடத்தின் அவுஸ்திரேலியாவின் சவாலாக இருக்குமென்று வெளிவிவகார அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு வெற்றிகரமாக இல்லையென எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.


இலங்கையின் யுத்தகால நிலைமையே தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி வருவதற்கான காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகளை விடுவிக்குமாறு மலேசிய மனித உரிமைகள் குழு கோரிக்கை-


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் 45பேரை விடுவிக்க வேண்டுமென மலேசிய மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தல் கடிதங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசிய மனித உரிமைகள் குழுவின் தலைவர் கே.ஆறுமுகம் இதுபற்றி கருத்துரைக்கையில், குறித்த 45இலங்கை அகதிகளும் மலேசியாவின் லங்காப் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐ.நா சபையின் அகதிகள் ஆணையத்தின் அங்கீகாரத்துடனான அகதிகள் விசாக்களை கொண்டிருந்தபோதும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது அவர்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அகதிகள் ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான அகதிகள் விசா இருக்கின்றமையே இதற்கான காரணமாகும். அவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்)






பூம்புகார் பகுதிக்கு விஜயம்- வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்று வவுனியா பூம்புகார் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது பூம்புகார் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்விலும் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், இந்த பூம்புகார் பகுதியைப் பொறுத்தமட்டில் 70களின் இறுதிப்பகுதியில் காந்தீயம் அமைப்பினால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதி மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான தொடர்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நீண்டகாலமாக அறுந்திருந்தபோதிலும் இனி நமக்கிடையிலான நல்லுறவைத் தொடர்ந்து பேணவேண்டும். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்படி பூஜை வழிபாடுகளிலும் பொதுக் கூட்டத்திலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க வேண்டுமென்றும், முன்னர் புரிந்த உதவிகள் மறக்க முடியாதவை என்றும் பொதுமக்கள் இதன்போது தெரிவித்ததுடன், தமது அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும் புளொட் வேட்பாளர்களிடம் எடுத்துக் கூறினர். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றம் க.சிவநேசன் (பவன்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...