17 மார்ச், 2010

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஜனாதிபதி தயார்:பந்துல



தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை முழுமையாக மாற்றியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக வர்த்தகம் விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாகவது,"அதற்காகவேண்டி அமைச்ச திணேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் தேர்தலின் போது தொகுதி வாரியாக மக்களுக்கு நெருக்கமானவர்களை தெரிவு செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

தற்போதுள்ள விருப்பு வாக்கு முறையால் கொலை செய்யும் அளவுக்கு வன்முறைகள் இடம்பெறும் நிலை ஏற்படுகிறது. உரிய அனுபவமுள்ள அறிவாற்றல் உள்ள தலைவர்களையே நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்காக தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றியமைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகப் பெரும்பான்மை அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்" என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்










ஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்
பாதுகாகப்பு படையினரின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முதலாவது இரானுவ நீதிமன்றம் கடற்படை தலமயகத்தில் நேற்றயதினம் கூடியது. மேஜர் ஜெனரல் எச்.ஏ. வீரதுங்க தலைமையில் கூடிய இந்த நீதி மன்றில் ஜெனரல் சரத்பொன்சேகா தனது சட்டத்தரனிகளுடன் மன்றத்துக்கு சமுகமளித்து இருந்தார்.

இதன் போது இரானுவ சடடத்துக்கு கீழ் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 03 குற்றசாட்டுக்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. இரானுவ நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் வழங்கும் தீர்ப்பு நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடும் என சட்டதரனிகள் இங்கு சுட்டிகாட்டியதாக னெரல் சரத்பொன்சேகா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரனிகளின் குழுவின் உறுப்பினரான சுனில் வட்டவள தெரிவித்துள்ளார்.

இரானுவ நீதிமன்றம் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்த போது அதற்கு அவரது சட்டதரனிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கால நடவடிக்கைகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது அவசியம் என்பதனால் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பொன்சேகாவுக்கு எதிராக இரானுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என அவரது சட்டதரனிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக சட்டரீயிலா ஆவணங்களை முன்வைப்பதற்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விரை கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை கண்டித்து இன்று பல இடங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்ட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் .16.03. நேற்றையதினம்




ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் நேற்றையதினம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முதலாவது கொள்கை பிரகடணம் மததலைவர்களுக்கு விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டது. உங்களுக்கு நிவாரணம் நாட்டுக்கு அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் கட்சியி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பு புதிய நகர மண்டபவத்தில்






ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பு புதிய நகர மண்டபவத்தில் நேற்று வெளியிட்டது. மனிதாபிமான போரட்டம் என்ற தொனிபொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

அனோமா பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தன் முதல் பிரதி சமய தலைரவர்களிடம் கையளிக்கப்பட்டது. .

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தமது முதல் நோக்கம் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை பிரகடனத்தின் ஊடாக தெரிவித்துள்ளது. நாயமான தேர்தல் ஒன்றை நடத்தல் மற்றும் பாராளுமன்றத்தை உறுதிப்படுத்தல் என்பன இதில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு







ராமேஸ்வரம்:இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.சோனியா வருகையையொட்டி, இரண்டு நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த, மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்,வழக்கம்போல் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.


இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற இவர்களை, இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.இதனால், போதிய மீன்வரத்து இல்லாமல் கரை திரும்பினர். இதனிடையே, இரட்டைமடி வலையில் பிடித்து வரப்பட்ட பேசாளை மீன்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை, ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை யினர் பிடித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு




இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சக் கட்ட சண்டையில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும், சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்த சிங்களராணுவம் பிரபாகரன் தோற்றத்தில் இருந்த ஒரு உடலையும் காட்டியது.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனால் பிரபாகரன் விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மான். இவர் தப்பிச்சென்று விட்ட தாக தகவல்கள் வெளியானது. சிங்கள ராணுவ அதிகாரிகளும், பொட்டு அம்மான் உடல் கிடைக்காததால் அவர் உயிர் தப்பி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.

பொட்டு அம்மான் இலங்கையில் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று மற்றொருதகவல் வெளியானது. ஆனால் பிரபாகரன் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட விடுதலைப்புலிகள் பொட்டு அம்மான் பற்றி எதுவும் தகவல் வெளியிடவில்லை.

இந்த நிலையில் கடந்தடிசம்பர் மாதம் முதல் பொட்டு அம்மானையும் அவரது உதவியாளர்கள் 2 பேரையும் சர்வதேச போலீசார் தேடத் தொடங்கினார் ள். இது தொடர்பாக சர்வதேச போலீசார் இணையத் தளங்களிலும் அறிவிப்பு வெளியிட்டனர். இது இலங்கை சிங்கள அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது.

பிரபாகரனின் மரணச்சான்றிதழை தயாரித்து கொடுத்து விட்ட சிங்கள அரசுக்கு பொட்டு அம்மான் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்று சான்றிதழ் கொடுப்பது என்று சிங்கள அதிகாரிகள் திணறினார்கள். இதற்கிடையே ராஜீவ்கொலையில் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை இந்தியா கேட்டு வலியுறுத்தியது.

சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்ததால் தற்போது இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியுத்தம் நடந்த போது பொட்டு அம்மான் தன் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் மனைவியும் அது போல தற்கொலை தாக்குதல் மூலம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பொட்டு அம்மான், உடலை மீட்க முடியவில்லை என்றும் இலங்கை அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரண மாகத் தான் பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழைக் கொடுக்க இயலவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா உளவு அமைப்பான ரா சந்தேகம் தெரிவித்துள்ளது. கேட்டுக் கொண்டதால் சர்வதேச போலீசார் பொட்டு அம்மானை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிகவாய்ப்புகள் உள்ளதாக உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். சிங்கள அரசுக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தடம்புரண்ட ரயிலைத் திருத்துவதற்குச் சென்ற ரயில் அந்த ரயிலோடு மோதியதில் 13 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.





கடுகண்ணாவையில் சம்பவம்; கொழும்பு - பதுளை சேவை இடை நிறுத்தம்

இச்சம்பவம் நேற்று கண்டி கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் கடுகண்ணாவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அத்தியட்சகர் விஜய அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, கண்டி கடுகண்ணாவ- பிலிமத்தலாவ ரயில் நிலையங்களுக்கிடை யில் நேற்று முன்தினம் ரயிலொன்று தடம்புரண்டதால் அதனைச் சீரமைக்கும் பணிகள் முடிவடையும் வரை கண்டி, பதுளைக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி ரயில் கடுகண்ணாவ பகுதியில் தடம் புரண்டது. கொழும்பிலிருந்து விசேட பணிகளுக்காக பிப்ரேக் டவுன்பீ ரயிலொன்று பணியாளர்களுடன் அனுப்பப்பட்டது. அந்த ரயிலே மோதியுள்ளது.

கொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் கடுகண்ணாவை வரையே செல்லுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை - யாழ். - கிளிநொச்சி தனியார் பஸ் சேவையை ஆரம்பிக்க அனுமதி




தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் முல்லைத்தீவு - யாழ்ப்பாணத்திற்கென ஆறு தனியார் பஸ் சேவைகளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 10 தனியார் பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவு பெற்றதன் பின்னர் பஸ் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். அத்துடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கென தனித்தனியான சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிமனையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பேரூந்துக் கழக உறுப்பினர்களது கலந்துரையாடல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ நீதிமன்றில் பொன்சேகா ஆஜர்





2வது மன்றில் இன்று மற்றொரு விசாரணை

முதலாவது நீதிமன்றின் நேற்றைய அமர்வு ஏப்ரல் 6க்கு ஒத்திவைப்பு

(ஸாதிக் ஷிஹான், ரஞ்சித் பத்மசிறி)

ஜெனரல் சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகள் சகிதம் இராணுவ நீதிமன்றத்தின் முன் நேற்று ஆஜ ரானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான இரண்டாவது நீதிமன்றின் முதல் அமர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நடைபெறவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ தலைமையகம் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்:-

மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்க தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட இராணுவ நீதிமன்றம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் கடற்படைத் தலைமையகத்தில் கூடி யது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசாங்கத்தின் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளும் இதன் போது ஆஜராகியிருந்தனர்.

இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு அமைய நேற்றைய தினம் கூடிய இந்த நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய நீதிமன்ற அமர்விலும் சரத் பொன்சேகா ஆஜராவார் என எதிர்பார்க்க ப்படுகிறது. இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய இரண்டாவது நீதிமன்றில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

பொன்சேகா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும் அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ. எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி. ஆர். ஏ. பி. ஜயதிலக்க ஆகியோரும், நீதிபதி, அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் செயற்படவுள்ளனர்.

இராணுவ நீதிமன்றின் நேற்றைய அமர்வில்

இராணுவ நீதிமன்றம் கூடியதும், அதன் தலைவர் மேஜர் ஜெனரல் வீரதுங்க குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாசித்தார்.

இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூற மறுத்த சந்தேக நபரான சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தனக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லாத நிலையில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகளுடன் இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் அணிந்திருந்த கொலர் உடனான சட்டை மற்றும் நீண்ட காற்சட்டையை அவர் அணிந்திருந்தார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகும் முன்னர் சரத் பொன்சேகாவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன சந்தேக நபர் சார்பாக இரண்டு அடிப்படை எதிர்வாதங்களை எழுப்ப சந்தர்ப்பம் கேட்டுக்கொண்டார்.

இராணுவ நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பமாகும் முன்னர் அதன் நீதிபதிகள் குழுமம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மூன்று நீதிபதிகள் மீதும் வெவ்வேறாக அடிப்படை எதிர்வாதத்தை எழுப்புவதாகவும் கூறினார்.

நீதிபதிகள் மூவரும் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரச குலரத்ன அவர்களுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாகவும் இது ஒவ்வொரு நீதிபதி தொடர்பாகவும் வெவ்வேறாக முன்னெடுக்கப்படும் அடிப்படை எதிர்வாதம் என்றும் தெரிவித்தார்.

இராணுவ சட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், நீதிபதிகள் தொடர்பான சந்தேக நபர் மேற்கூறியவாறு முன்வைத்த வாதங்களை வெவ்வேறாக நிராகரித்தது.

சந்தேக நபர் தற்போது இராணுவ சேவையில் இல்லாத நிலையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்த கனிஷ்ட தரத்திலுள்ள நீதிபதிகள் குழுமத்திற்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அதற்கு தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து விசாரணைகள் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

பூகம்ப ஆபத்து வலயங்களையும் தாண்டி தாக்குகிறது நிலநடுக்கம்

“நெஞ்சுயர்த்தி வாழ்ந்தவொரு குடிவாழ்க்கை இடி விழுந்து எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய் நாளையிது மீண்டும் அழகொளிர நிமிர்ந்திடுமா?”

என்று இயற்கை அனர்த்தத்தால் சிதையுண்ட நகரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டிருந்தான் கவிஞனொருவன்.

மனிதனுக்கு அமைதி என்றொரு முகமிருந்தால், சீற்றம் என்றொரு முகமும் இருக்குமென்றே கூறுவர். அகம்-புறம், நன்மை-தீமை, உண்டு-இல்லை என எந்தவொரு விடயத்தையும் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கோணங்களில் நோக்கமுடியும். அக்கோணங்களுக்குள் அடக்கவும் முடியும்.

1,0 என்ற ஒன்றுக் கொன்று முரணான இரு இலக் கங்களினடிப்படையிலேயே கணனித் தொழில்நுட்பம் இன்று வரை புதிய பல பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. இயற்கையும் அத்தகையதே.

இளந்தென்றலாய் வீசும் இயற்கைதான் கொடிய புயலையும் வீசச்செய்கிறது. அமைதியாய்ச் சென்று கடலோடு கலக்கும் ஆறுகள் தான் சிலசமயங்களில் காட்டாறுகளாய் மாறி உயிர்களைக் காவுகொள்கின்றன. நுரையாய் நிலத்தைத் தழுவும் கடலலைதான் ஆழிப்பேரலை அனர்த்தமாய்த் தன் கோரமுகத்தைக் காட்டி நின்றது.

நாம் கொத்தி, பாரத்தை ஏற்றி எத்தனை துன்பம் செய்தாலும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளும் பூமாதேவிதான், சில சமயங்களில் புவி நடுக்கமாய், எரிமலை வெடிப்பாய்ச் சீற்றம் கொள்கிறாள்.

புவிக்கோளத்தின் வெளிப்பகுதியே நாம் காணும் நிலப்பரப்புக்களும் நீர்ப்பரப்புக்களுமாகும். புவிக்கோளம், தன்னுள்ளே பல படைகளைக் கொண்டது. வெளிப்பகுதி புவியோடு எனப்படும். அதற்கு அடுத்த படைகள் முறையே மேல் மென் மூடி, கீழ் மென்மூடி, அகணி ஆகியனவாகும்.

புவியோட்டையும் மேல்மென் மூடியையும் சேர்த்து கற்கோளம் என்பர். இந்த கற்கோளமே தனித்தனியாக அசையக்கூடிய புவித்தட்டுக்களைக் கொண்டது. இப்புவித்தட்டுக்களே கண்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அரீனா முனையிலிருந்து இம்பீரியல் பள்ளத்தாக்குவரை ஏறத்தாழ 1000 கி.மீ நீளமுடைய வெடிப்பொன்று புவி மீது காணப்படுகிறது.

இது புவியின் நிலத்தட்டு எல்லைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வெடிப்பின் ஒருபக்கத்தில் வட அமெரிக்க நிலத்தட்டும் மற்றைய பக்கத்தில் பசுபிக் நிலத்தட்டும் காணப்படுகின்றன. இவ்வெல்லையை சான் அன்றியாஸ் குறையென அழைப்பர். இந்த இரு நிலத்தட்டுக்களும் ஒரு வருடத்துக்கு 2.5 செ.மீ. அளவில் வழுக்கியும் உராய்ந்தும் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலத்தட்டுக்கள் புவியின் கற்கோளப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் அவை தாமாகவே அசையும் வல்லமை மிக்கவை. அவற்றின் அசைவே நிலநடுக்கங்களுக்கான அடிப்படையாகும்.

தட்டுக்களின் அசைவு குறைமேற்பரப்புக்களையும் தோற்றுவிக்கும். இந்தக் குறைதட்டுக்கள் தமது எல்லைப் பகுதிகளில் ஒழுங்கற்றதாகக் காணப் படுவதுடன் ஒன்றுடனொன்று வழுக்கியும் உராய்ந்தும் செல்லும் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன.

இத்தட்டுக்களுக் கிடையிலான சார்பியக்கம், அவற்றிற் கிடையிலான தகைப்பை அதிகரிக்கும். இது பெரியளவிலான விகார சக்தியை குறைமேற்பரப்புக்களில் உருவாக்கும்.

தட்டுக்களுக்கிடையே ஏற்படும் உராய்வினாலான வெப்பம் பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்தும். இவ்வெடிப்பு பூமியதிர்ச்சிக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பூமி அதிர்வுகள் இந்த குறை மேற் பரப்புக்களாலேயே தோற்றுவிக்கப்படும். பல பூமியதிர்வுகள், தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலேயே நிகழும். அவற்றினால் உருவாக்கப்படும் விகாரம் குதீறேமேற் பரப்புக்களில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கும்.

இவ்வொழுங்கற்ற தன்மையே அழிவுகளுக்குக் காரணமாகும். எரிமலைப் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி அடிக்கடி நிகழும். இவ்வாறு நிகழ்வதற்கு புவித்தட்டுக்களின் குறைமேற்பரப்பும் எரிமலையின் மக்மாக் குழம்பின் அசைவும் காரணமாகின்றன. எரிமலை வெடிக்கப்போவத ற்கான ஆரம்ப சமிக்ஞையாக அப்பகுதிகளில் ஏற்படும் பூமியதிர்ச்சியைக் கருதலாம்.

பூமிக்கு அடியிலிருக்கும் இந்த நிலத்தட்டுக்களின் மோதுகையாலோ அல்லது அசைவினாலோ உருவாக்கப்பட்ட அதிர்வலைகள் புவிமேற்பரப்பில் பரவும் போது நிலநடுக்கமாக உணரப்படுகின்றன. நிலமேரப்பில் மட்டும் தான் அவை உணரப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.

சமுத்திர மேற்பரப்புகளிலும் கூட அவை உணரப்படலாம். அவ்வாறு சமுத்திர மேற்பரப்பில் உணரப்பட்ட கடலடி நில நடுக்கத்தின் விளைவே 2004 இல் நாம் கண்ட ஆழிப்பேரலை அனர்த்தமாகும்.

உலக வரைபடத்திலே நெருப்பு வலயங்கள் எனும் நிலநடுக்கப் பிரதேசங்களாகச் சில பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

தென்னமெரிக்க முனையின் மேற்குக் கரையோரத்தில் தொடங்கி, சிலி, பெரு ஆகிய நாடுகளை உள்ளடக்கிப் பின் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியைக் கடந்து கொஸ்தாரிக்கா, நிகராகுவா, மெக்சிக்கோ, கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலஸ்காவைத் தொட்டு ஜப்பான், சீனா, வட இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தாண்டி மத்திய ஆசியாவிலே ஈரானையும் உள்ளடக்கி பின் மத்திய தரைக்கடல் நாடுகளுடன் முடிவடைகிறது. ஆனால் இவ்வலயத்தில் இல்லாத நாடுகளிலும் கூடப் புவிநடுக்கம் ஏற்படலாமென்பது நிதர்சனமான உண்மையாகும்.

நிலநடுக்கம், புவியின் குறிப்பிட்ட பகுதியில் தான் நடக்க வேண்டுமென்ற எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை. அவை எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிறியளவிலான நில அதிர்வுகள் அடிக்கடி நடப்பவையல்ல. ஏறத்தாழ 100 வருடங்களுக்கொரு முறையே பெரியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக, ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

நில அதிர்வுகள் / நடுக்கங்களின் தன்மையை அளவிடுவதற்கு ‘ரிச்டர்’ எனும் அளவிடை பயன்படுகிறது. அளப்பதற்கு புவிநடுக்கமானி அல்லது நிலநடுக்கப் பதிகருவி எனப்படும் கருவி பயன்படுகிறது. இக்கருவியை சார்ள்ஸ் ரிச்டர் என்பவர் கண்டுபிடித்தமையினால் நில நடுக்க அளவிடை ‘ரிச்டர்’ எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மேக்கலி எனும் அளவுத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இது மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதேயன்றி ரிச்டர் அளவிடையைப் போன்று விஞ்ஞானபூர்வமானதல்ல. தற்போது திருப்பப் பருமனை அடிப்படையாகக் கொண்ட அளவிடையாக (ஙச்ஙிடீடூசி ஙஹகிடூடுசிசீக்ஷடீ நஷஹங்டீ) புதிய அளவிடையொன்று பயன்படுத்தப்படுகிறது.

நடுத்தரப் பருமனுடைய பூகம்பங்களைப் பொறுத்தவரையில் ரிச்டர் அளவிடையும் இந்தப் புதிய அளவிடையும் ஒரேவிதமானவை. ஆனால் பெரிய பருமனுடைய பூகம்பங்களில் அவ்விரு அளவிடைகளும் வேறுபடும்.

எனினும் ரிச்டர் அளவிடையே புழக்கத்தில் உள்ளது. நிலநடுக்கத்தின் ரிச்டர் அளவு 7 அல்லது அதற்கு மேற்பட்டதாயின் ஆபத்தான விளைவுகளை, பரந்தளவிலான பிரதேசங்களில் ஏற்படுத்துமெனவும் ரிச்டர் அளவு 3 அல்லது அதற்குக் குறைவாயின் நிலநடுக்கத்தை உணரமுடியாது எனவும் 3 க்கும் 7 க்கும் இடைப்பட்டளவிலான பருமனுடைய நிலநடுக்கங்கள் சிறியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

ரிச்டர் அளவுகள் மடக்கைப் பெறுமதியிலானவை. 7 ரிச்டர் அளவானது. 6 ரிச்டர் அளவை விட 31.6 மடங்கு (10 3/2 மடங்கு) பெரியது. அதேசமயம் 5 ரிச்டர் அளவைப்போல் கிட்டத்தட்ட 1000 மடங்கு (998.56 மடங்கு) பெரியது. 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குக் காரணமாகிய நிலநடுக்கம் அண்மையில் சிலியில் நடந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1000 மடங்கு பெரியது எனலாம்.

நிலநடுக்கத்தால் உருவாக்கப்படும் நில அதிர்வலைகள் (நடீடுஙூஙிடுஷ சூஹசுடீஙூ) நெட்டாங்கு அலைகளாகவோ, அவற்றிற்கு எதிர்மாறான குறுக்கலைகளாகவோ இருக்கலாம். இவ்வலைகளின் வேகம் 3கூசீ/ஙூ இலிருந்து 13கூசீ/ஙூ வரை மாறுபடும். அத்துடன் இவ்வேகமானது அவ்வலைகள் பயணிக்கும் ஊடகத்தின் அடர்த்தியிலும் மீள்தன்மையிலும் தங்கியிருக்கும்.

நடீடுஙூஙிச்ஙிடீசிடீஙு எனப்படும் நிலநடுக்கமானியால் நிலநடுக்கத்தின் பருமனையும், அது அம்மானியிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடியும். நிலநடுக்கமானியிலிருந்து பெறப்படும் தரவுகளினடிப்படையிலேயே வரைபுகள் வரையப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படு கின்றன.

அத்தகையதொரு ஆய்வே, புவியின் மையப்பகுதியின் அமைவை மிகச்சரியாக அறிந்து கொள்ளவும் உதவியது. பெனோகுட்டன்பேர்க் என்பவரே புவியின் மையப்பகுதியின் அமைவிடத்தை 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவிலேயே நிலநடுக்கம் தொடர்பான எண்ணக்கரு, கிரேக்க தத்துவஞானிகளால் விதைக்கப்பட்டு விட்டது. நிலநடுக்கங்களானவை காலங்காலமாக நிகழும் செயற்பாடுகள் என வரலாறு கூறுகிறது. இத்தாலியின் பழம் பெரும் நகராகிய பொம்பேய் நிலநடுக்கத்திற்குப் பெயர் போனது. நிலநடுக்கங்களால் சிதைந்த அந்நகரின் இடிபாடுகளை இன்றும் காணமுடியும்.

நிலநடுக்கங்களால் உருவாகும் ஆழிப்பேரலைகளுடன், கடற்கோள் அனர்த்தங்களும் புவித்தட்டுக்களின் நகர்வுமே இன்றும் நாம் காணும் கண்டங்களாகும். மறைந்துபோன குமரிக்கண்டமும் கடல் கொள்ளை கொண்ட பூம்புகார் நகரும் கூட நிலநடுக்கங்களுக்குச் சான்று பகரும் வரலாற்று ஆதாரங்களாகும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து யுரேசியா எனும் பெயருடைய கண்டமாக இருந்தனவெனவும் ஒரு பெரும் பூகம்பத்தால் ஆசியா, ஐரோப்பா என தனித்தனிக் கண்டங்களாகப் பிரிந்தனவெனவும் கூறப்படுகிறது. ஆயினும் தெளிவான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.

1755 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கடலடி நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. அதனால் உருண்கிய ஆழிப்பேரலைகளால் போர்த்துக்கல்லின் தலைநகராகிய லிஸ்பன் பெரியளவில் பாதிக்கப்பட்டது. லிஸ்பன் துறைமுகம் பழம் பெருமை வாய்ந்தது. அத்துடன் செல்வந்தப் பகுதியாகவும் விளங்கியது. லிஸ்பனில் மாத்திரம் 30,000 பேர் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு காவுகொடுக்கப்பட்டனர். அன்று வீழ்ந்த லிஸ்பன் நகரால் இன்றும் கூட, பழைய நிலைமைக்கு மீளமுடியவில்லை.

1989 இல் சென்பிரான்சிஸ்கோ நகரை உலுக்கிய பூகம்பத்தை எவரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் வரையறுக்கப்பட்டவையல்ல. அவற்றின் முக்கிய விளைவான நில மேற்பரப்பின் அதிர்வு காரணமாக கட்டடங்கள் போன்ற உறுதியான கட்ட மைப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்படு கின்றன. சிறியளவிலான நிலநடுக்கங்கள் கூடப் பாரிய சேதங்களைத் தோற்றுவிக் கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

நில அதிர்வுகளுடன் கூடிய எரிமலை வெடிப்பு மண்சரிவைத் தோற்றுவிக்கும். நில அதிர்வுகளால் நிலத்துக்குக் கீழாகச் செல்லும் எரிவாயு மற்றும் மின்னிணை ப்புக்கள் சேதமுற்று, தீ பரவலாம். அவ் வாறு தீ பரவும் போது அதைக் கட்டுப்படுத்துவது சற்றுக் கடினமானது.

1906 இல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தைவிட மேற்குறிப்பிட்டவாறு பரவிய தீயினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.

மண் திரவமயப்படலானது பூகம்பத்தால் ஏற்படும் பாராதூரமான விளைவாகக் கருதப்படுகிறது. நில அதிர்வினால் மண் போன்ற நீர் நிரம்பிய துணிக்கைப் பதார்த்த்ஙகள் தமது வலிமையை இழந்து திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும். இவ்வாறு மண் துணிக்கைகள் மாறுவதால் கட்டடங்கள், பாலங்கள் போன்ற உறுதியான நிர்மாணங்கள், திரவமயமாக்கப்பட்ட படிவுகளிலே மிதந்து தாமே இடிந்து தரைமட்டமாகிவிடுகின்றன.

அத்துடன் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்படும் அணைக்கட்டுக்கள் சிதைவடைவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமானதாகக் காணப்படும்.

இவை யாவற்றிற்குமப்பால் பூமியதிர்ச்சியா னது மனித உயிருக்கும் வாழ்வுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அளவிடப்பட முடியாதன.

ஒரே தரத்திலேயே பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுக்கும் இயற்கை அனர்த்தமாகப் பூமியதிர்ச்சி கருதப்படுகிறது. இவை தவிரப் பல நோய்கள் பரவுவதற்கும், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, சொத்துக்களின் இழப்பு, உட்கட்டமைப்பு வசதிகளின் அழிவு போன்ற பல பிரச்சினைகளால் மனிதனின் வாழ்வியல் பாதிக்கப்படுவதற்கு ஏதுவாகிறது.

அண்மையில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஹெயிட்டி பூகம்பத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனதை வெகுசனத்தொடர்பு ஊடகங்களால் காணக்கூடியதாக இருந்தது.

சில பகுதிகளில் ஏற்படும் நிலநடுக் கங்களுக்கு வல்லரசுகளின் நாசகார ஆயுதப் பரிசோதனைகள் காரணமாக அமைவதாக ஊகங்களும் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் அவ்வூகங்கள் எவையுமே உத்தியோகபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

வருடாந்தம் நிகழும் பூகம்பங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் நடக்கும் பூகம்பங்களையும், அவற்றினால் ஏற்படும் சேதங்களையும் உடனுக்குடன் அறியத்தரும் வகையில் கூகிள் மப்ஸ் எனும் இணையத்தளம் இன்னொரு இணையத்தளத்துடன் இணைந்து செயற்படுகிறது. அவ்விணை யத்தளமானது வரைபடங்கள், நடுக்கத்தின் பருமனுடன், தேவையான அடிப்படைத் தகவல்களை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறது.எனும் முகவரியூடாக அவ்விணையத்தளத்தைப் பார்வையிட முடியும்.

ஹெய்ட்டியின் பூகம்பம் மக்கள் மனதிலே ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளேயே சிலி அருகே பசுபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 8.8 ரிச்டர் அளவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர். கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

நடக்கும் பூமியதிர்ச்சிகளையும், அவற்றினால் ஏற்படும் அழிவுகளையும் ஆழ நோக்குகையில், தன்னை விஞ்சியவர் எவருமில்லை என்று வாழும் மனிதனுக்கு, மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இயற்கையின் செயற்பாடுகள் தான் இவையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

விஞ்ஞானத்தாலும் அதன் பயனால் உருவாக்கப்பட்ட அறி கருவிகளாலும் நிலநடுக்கங்களின் வருகையை எதிர்பார்த்து அறிவிக்க முடியுமே தவிர அவற்றைத் தடுக்க முடியாது. நிலநடுக்கம் இன்னும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, புதிராகவே காணப்படுகிறது.

எம்மால் செய்யக்கூடியது, ஏற்படும் சேதங்களைக் குறைத்தலும் இனியும் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்தலுமேயாகும். பூகம்ப வலயத்தினுள் இருக்கும் ஜப்பான் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

ஜப்பானியர்களின் எளிமையான வாழ்க்கை முறையும், பூகம்பங்களையும் ஆழிப் பேரலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான கட்டட அமைப்புக்களும் ஏனைய நிர்மாணப்பணிகளும் தான் எத்தனை பேரழிவு நிகழ்ந்தாலும் ஜப்பான் மீள எழுவதற்குக் காரணமாகின்றன.

ஒவ்வொரு நாடும் தனது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை இயற்கையைப் பாதிக்காத வகையிலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் காணப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்திற்கான வலுவான கட்டமைப்புக்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.

இயற்கையின் சீற்றம் எதிர்வு கூறப்பட முடியாதது. ஆறாவது அறிவாய்ப் பகுத்தறிவைப் பெற்று பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் பொறுப்புணர்வுடன் நடந்தால் இயற்கையும் சீற்றம் கொள்ளாது அமைதி காக்குமென்பது நிதர்சனம்!

சாரதா மனோகரன்
மேலும் இங்கே தொடர்க...