19 ஜனவரி, 2010

No Image
தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் திட்டமிட்டபடி நேற்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் அனைவரும் நீர் ஆகாரம் எதுவும் இன்றி இரண்டாவது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து பாங்கொக் யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் பதிவு செய்து தற்போது 3 வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகளினால் ஏற்கனவே ஒழுங்கு படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட ஆறு கோரிக்கைகளுக்குஇ

ஜ.நா வின் பொது செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்களிடம் இருந்தோஇ யூ.என்.எச்.சீ.ஆர் தலைமை அலுவலகம் சுவிஸ் ஜெனீவாவில் இருந்தோஇ தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் பிராந்திய அலுவலகத்தில் இருந்தோஇ எந்தவிதமான மனித உரிமை மனித நேய அமைப்புக்களோ இது வரையில் இவர்களை சென்று பார்வையிடாத காரணத்தினால் இவர்களுடைய கடுமையான உண்ணாவிரதப் போரட்டம் நீர் ஆகாரம் எதுவுமற்ற நிலையில் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

இவர்களுடன் பாகிஸ்தான்இ நேபாளம் யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகளும் இவ் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


No Image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியசுவாமி சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும்இ மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். கினிகத்தேனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவதுஇ

"தற்போது நமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய தலைவர்களில் சிலர் நேரடியான தலையீட்டை மேற்கொள்கின்றனர். சுப்பிரமணியசுவாமி நேரடியாக தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழர்களுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார். சுப்பிரமணியசுவாமி போன்றவர்களின் பேச்சை கேட்டு நடக்குமளவுக்கு இலங்கைத் தமிழர்கள் அரசியல் ஞானமற்றவர்கள் அல்லர்.

கடந்த காலங்களில் சுப்பிரமணியசுவாமி இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தில் நீந்தி குளித்து அரசியல் கொண்டாட்டம் போட்டவர். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மகிந்தவிற்கு வாக்களிக்க வேண்டுமென தற்போது பயமுறுத்துகிறார். இந்தியா இலங்கைக்குக் கடந்த வருடம் செய்த மறக்கமுடியாத உதவியினாலேயே தற்போது தமிழர்கள் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிட இலங்கையின் அரசியல் மேடைகளில் இந்தியாவை பற்றியோஇஇந்தியஇதமிழ்நாட்டு தலைவர்களைப் பற்றியோ விமர்சிக்க கூடாதென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவோஇ அந்தநாட்டு அரசாங்க கட்சி தலைவர்களோ நடந்துமுடிந்த மனிதபேரவலத்திற்கு துணைபோகாமல் இருந்திருந்தால் அவர்களைப்பற்றி விமர்சிக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது.

கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு இலங்கை அரசு உதவிசெய்ததாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருக்கிறார். அந்த நன்றின்கடனை மனதில் கொண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதியுபகாரம் செய்வதற்கு இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்த இந்தியா முயற்சிக்கின்றது.

இந்தியா சொல்வதை செவிமடுக்க இலங்கைத் தமிழர்கள் தயாராக இல்லை என்ற செய்தியை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இந்தியாவிற்கு தெளிவாக சொல்லும். இன்று மக்கள் ஆதரவை பெற்ற சகல சிறுபான்மை கட்சிகளும் ஒரே அணியில் நின்று செயற்படுகின்றன. இந்த ஒற்றுமை சரத்பொன்சேகாவை வெற்றிபெறசெய்வதுடன் முடிந்துவிடக் கூடாது.

எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அத்தியாவசியமானதாகும். இந்த நாட்டின் தமிழ்இமுஸ்லீம்இ மலையக மக்களின் அடிப்படைஇ அரசியல் பிரச்சினைகளைத் தமிழ்இ முஸ்லிம் கட்சிகள் உள்வாங்கி ஒரே நிழ்ச்சி நிரலின் கீழ்ச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதையே தமிழ் பேசும் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மலையகத்தில் தற்போது மிகப்பெரிய அரசியல் மாற்றம் தென்பட தொடங்கிவிட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் மிகப்பெரிய சமூக பொருளாதார வாழ்வியல் மாற்றத்தை மலையகத்தில் ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்பதை தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி சரத் பொன்சேகாவிற்கு மலையக மக்கள் தெளிவுபடுத்துவார்கள்.

மலையக மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கவேண்டும் என்பதற்காக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இ ஐக்கிய தேசிய முன்னணியோடும்இ எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறது.

இவற்றையெல்லாம் செயல்வடிவமாக்குவதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மலையக மக்கள் முழுமையாக சரத்பொன்சேசாவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.



அமைச்சர்களாக இருந்தோர் மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய சே வையாற்றவில்லை : பி.திகாம்பரம்

No Image
அரசாங்கத்துடன்

இணைந்து ச யற்படுகின்ற மலையகத்தமிழ் தலைமைத்துவங்கள் மக்கள் நலன் கருதி செயற்படாத காரணத்தினாலேயே மலையகப்பெருந்தோட்டச் சமூகம் மிகமோசமான நிலையில் பின்தங்கியுள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்தியமாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவதுஇ

"இந்த நாட்டில் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களில் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற மலையகத் தலைமைகள் இந்த மக்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்யாமல் வெறுமனே காலத்தைச் செலவழித்துக்கொண்டு சுயநலப்போக்குடன் செயற்படுவதால் தான் இன்று மலையகத்தமிழ் சமூகம் பின்தங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமாகயிருந்தால் என்ன பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமாகவிருந்தாலென்ன தற்போதைய அரசாங்கமாகவிருந்தாலென்ன ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக செயற்பட்டு இந்த மக்களுக்கு உருப்டியான சேவைகளைச் செய்யவில்லை.

இதே பொன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமலிருந்தால் தான் எமது சமூகத்திற்கு விமோசனம் ஏற்படும்.வெற்றிப்பெற்ற அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு மலையகத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றவர்களுக்கு இனிமேல் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்.

இவ்விடயத்தில் மலையக இளைஞர்கள் உட்பட தொழிலாளர்களும் ஏனையவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை.எமக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறுதான் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

கடந்த நான்கு வருடகாலத்தில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தமக்கான மாளிகைகளைக் கட்டுவதிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்வதிலுமே கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ள போதும் இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.எனவே மலையகத்தமிழ் மக்களின் வளமாக வாழ்க்கையைக்கருத்திற்கோண்டே நாம் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்துள்ளோம்.நாம் பணத்திற்காக விலை போக மாட்டோம்.எமது மக்களையும் விற்க மாட்டோம்." எனத் தெரிவித்தார்



தாய்வானிலிருந்து கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை



No Image
எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென தாய்வான் நாட்டிலிருந்து. மூவர் அடங்கிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று காலை 8.15 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை
500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி



புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்துஇ அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும்இ வவுனியாவில் 5 இடங்களும்இ வெலிக்கந்தையில் 3 இடங்களும்இ திருகோணமலையில் 3 இடங்களும்இ மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறைஇ விவசாயத் துறைஇ கணனிசார் துறைஇ மிருகவளர்ப்புஇ தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுஇ இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறைஇ விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசைஇ நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடுஇ சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள்இ எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10இ 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2இ500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2இ500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும்இ 2இ000க்கும் அதிகமான வர்கள் முல்லைத்தீவையும்இ சுமார் 1இ000 பேர் வவுனியாவையும்இ சுமார் 500 பேர் மட்டக்களப்பையும்இ 500க்கும் அதிகமானவ ர்கள் மன்னாரையும்இ சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



விசாரனைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடனடியாக விடுவிப்பு





வழக்குத்தாக்கல் செய்யப்பட வேண்டியவர்களை பிணையில் விடுவிக்கவும் ஏற்பாடு

பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் கைதிகளின் கோவைகளைத் துரிதமாக ஆராய்ந்துஇ அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி 83 மலையக இளைஞர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியிடம் இ.தொ.கா. விடுத்த வேண்டுகோளின் பேரில்இ இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியு ள்ளார்.

கொட்டகலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில்இ சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்க ளின் பெற்றோரும் சமுகந்தந்துஇ தமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந் தனர்.

கைதிகளின் விபரங்களை அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்நிலையில் சிறு சிறு தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பாரிய குற்றச்சாட்டுகளைப் புரிந்தவர்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாத தடைச் சட்டம்இ அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் அறுநூறு இளைஞர்கள் வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக் களம் மேலும் தெரிவித்தது.

ஏற்கனவே 390 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிப்பது உறுதி

அமைச்சர் டளஸ்



வடக்குஇ கிழக்குஇ மலையகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பது உறுதி என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டில் சமாதானத்தையும்இ அமைதியை யும் விரும்பும் சகல இன மக்களும் ஜனாதிபதியை மீண்டும் தெரிவு செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை மகாவலி கேந்திர நிலையத்தில் நடை பெற்றது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்இ

வடக்குஇ கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் பயங்கரவாதம் அற்ற சூழல் தற்போது நிலவுகின்றது. எனவே தமிழ் மக்கள் இம்முறை எந்தவித தயக்கமும் இன்றி ஜனாதிபதிக்கு வாக்களிப்பது உறுதி.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்இ முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்இ மலையகத்தைப் பிரதிநிதித்துவம்படுத்தும் அமைச்சர் தொண்டமான்இ பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் போன்றோர் இன்று ஜனாதிபதியின் வெற்றிக்காக முழு பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றனர்.

அதேபோன்று ஸ்ரீல. சு. கவின் வரலாற்றில் அரசியல் அதி உயர் பீடம் தொடக்கம் சாதாரண மட்டம் வரையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

எனவேஇ தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு கிடைப்பது உறுதியாகும்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. உள்ளூரிலும்இ சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும்இ ஆய்வு மதிப்பீடுகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் மாறுபட்ட விஞ்ஞாபனங்களைஇ வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம். மற்றைய வேட்பாளரைப் போல் இல்லாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தொடர்ச்சியானதாக மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு என்ற அடிப்படையில் வழங்கியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் இரு பிரதான வேட்பாளர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் பாரிய மாற்றம் உள்ளது. 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக ஜனாதிபதியும் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக சரத் பொன்சேகாவும் கூறியுள்ளனர்.

எனினும் அரசியலில் அனுபவமுள்ள ஜனாதிபதி வழங்கக் கூடிய அளவிலான சம்பள உயர்வையே கொடுப்பதாக கூறியுள்ளார்.

பொன்சேகா வழங்க முடியாத அதிகரிப்பையே வழங்குவதாக கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வழங்குவதில்லை.

இந்த நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னைய வேட்பாளர்கள் போன்று இம்முறை சரத் பொன்சேகா இல்லை. சரத்பொன்சேகாவின் செயற்பாடுகள் மூர்க்கத்தனத்துடன் கூடியதான வைராக்கியம்இ கோபம்இ குரோதம்இ மோசமான வார்த்தைப் பிரயோகம் போன்றவற்றை வெளிப்படையாகக் கொண்டது.

அதிகாரத்தை கேட்கும் போதே இது போன்று மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவர் அதிகாரத்துக்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வாறு இருப்பார். எனவே மக்கள் ஒரு போதும் இவரை அனுமதிக்கப் போவதில்லை.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் சீருடையை களைவேன்இ முள்ளுகளை சாப்பிட வைப்பேன்இ பொருளாதார நிபுணர்களை துரத்தியடிப்பேன் என்னும் மோசமான வார்த்தைகளையும் சரத் பொன்சேகா மேடைகளில் பாவித்து வருகின்றார். இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் சரிவராது.

சேறு பூசும் அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்தவர்கள் எதிர்க்கட்சியினர். அவர்கள் இதனை நிறுத்த வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் தற்பொழுது தான் தேசியக் கொடியை தூக்கியுள்ளனர்.

பச்சைஇ நீலம்இ சிவப்பு என்று பல்வேறு வர்ணங்களைக் கொண்ட கட்சிக் கொடிகளை தூக்கியவர்கள் அதனை எறிய வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. சகலரும் ஒன்றிணைந்து 26 ம் திகதி தேசியக் கொடியை தூக்குமாறு கோருகின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கனகரட்ணம் எம்.பி ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்பார்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம்இ ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக மல்லாவிஇ யோகபுரம்இ துணுக்காய்இ ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர்இ வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியுமென கூறியுள்ளார்.

மல்லாவியிலும் யோகபுரத்திலும் மீளக்குடியேறிய மக்களுக்கு இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள் 50இ தையல் மெசின்கள் 50 வழங்கும் வைபவத்திலும் கனகரட்ணம் எம்.பி கலந்து கொண்டார்.

மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனகரட்ணம் எம்.பியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்ப டுகின்றது. கடந்த புதன்கிழமை மாலை இவர் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வட பகுதியில் இணக்கச் சபைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன



வட பகுதியில் இணக்கச் சபைகளை ஆரம்பிக்க நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரதேசத்துக்கு இணக்க சபையை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய மன்றத்தின் ஆணையாளர் அலு வலகம் அனுசரணை வழங்கியுள்ளது.

வட பகுதியில் இதுவரை காலம் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலை காரணமாக அங்கு இணக்க சபைகளை ஆரம்பிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் இங்கே தொடர்க...

18 ஜனவரி, 2010




மலையக மலர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் : கொட்டகலையில் ஜனாதிபதி


"வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயத்தினை போல்இ மலையகத்தை அபிவிருத்தி செய்ய மலையக மலர்ச்சி எனும் வேலைத் திட்டத்தினை உருவாக்குவேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று கொட்டகலை பொது விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம்இ ஜெகதீஸ்வரன்இ மாகாண அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன்இ மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன்இ மாகாணசபை அமைச்சர்கள்இ பிரதேச சபைஇ நகரசபை தலைவர்இ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்இ

"நான் உங்களிடம் வந்து உரையாற்றக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று எனக்குத் தெரியும்இ நீங்கள் பாரிய பொருளாதார சுமைக்கு முகம்கொடுத்து வருகிறீர்கள். மே 19 திகதிக்கு முன் இந்த நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன.

மலையக இளைஞர்கள் வேலைக்குச் செல்லமுடியாது; நிம்மதியாக இருக்க முடியாத நிலை இருந்தது. அதை இன்று நான் இல்லாது செய்துள்ளேன். அதேபோன்றுஇ உங்கள் வாழ்க்கையையும் சுபீட்சமாக்குவேன்.

மலையக மக்கள் இந்நாட்டின் உயிர்நாடிகளாவர். அதனை எவரும் மறுக்கமுடியாது. அதுதான் யதார்த்தம். எனவேஇஅவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக இன்னும் 3இ000 அரச நியமனங்களை வழங்க உள்ளேன்.

இன்று மலையக இளைஞர்கள் பொலிஸில் சேரலாம்; இராணுவத்தில் சேரலாம். எவருக்கும் ஒரே நியாயம் தான். உங்கள் பிள்ளைகள் தேயிலை கொழுந்து பறிப்பவர்களாக இருக்கக்கூடாது. கணினிக் கல்வியைக் கற்று சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை பெற வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்கள் லயத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பதிலாக அவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிகொடுத்து லயத்து முறையினை இல்லாது செய்வேன்.

அத்தோடு அவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது ஏனைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.

வேலையில்லாத இளைஞர்களுக்குத் தரிசுக் காணிகளை வழங்கி புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவேன். நான் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. சொல்வதை செய்வேன்; செய்வதை சொல்வேன். நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். இந்த நாட்டில் கிராம மக்களுக்கு தங்கத்தை கொடுத்து இரும்பையும் தகரத்தையும் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டேன்.

இன்று இலங்கையில் சிறுபான்மை என்று ஒரு சமூகம் இல்லை. எல்லோரும் இலங்கை திருநாட்டின் பிள்ளைகள். ஆகவேஇ நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.

எந்த நேரத்தில் உங்களது சம்பளம் உயர்த்த வேண்டுமோ அந்த நேரத்தில் நான் உங்கள் சம்பளத்தை உயர்த்துவேன். நான் தொழில் அமைச்சராக இருந்த போது உங்கள் உரிமைகள் தொடர்பாக உங்கள் தலைவர்களுடன் பல தடவைகள் பேசியுள்ளேன்.

எனவேஇ என்னை நம்புங்கள் நான் உங்கள் தோழன். நான் உங்களைக் காப்பேன். எனவேஇ வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்துஇ என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்" என்றார்.


நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளியேன் : ஜெனரல் பொன்சேகா



No Image
அரசாங்கம் கூறுவதைப்போல் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.

எனது நாட்டை துண்டாடுவதற்கோ அல்லது அதன் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

"என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரகாரமே பலதரப்பட்ட அரசியல் சக்திகள் எனக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்இ என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன.

இருப்பினும் எனது சேவைக் காலத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "40 வருடகால அரச சேவையில் பணியாற்றிய நான் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பினை எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன்.

இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியின் பிரகாரம் புலிப் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்களே அறிவர்.

ஊழல் மோசடிகளோ அல்லது நிதி தொடர்பிலான மோசடிகளோ இல்லாவிட்டால் தரகுப் பணம் சம்பாதிப்பதிலோ ஈடுபட்டிருந்தால் என்னால் தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்டிருக்க முடியாது.

எனவேஇ எந்தவிதமான ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை என்பதை என்னால் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள முடியும். அரச சேவையில் இருந்த காலப்பகுதியில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள்இ கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முழுமையான ஆதரவு மற்றும் அமைப்புக்கு மத்தியிலேயே நான் அரசியல் பயணத்திற்குள் பிரவேசித்துள்ளேன்.

இப்போது நான் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல்இ எந்தவொரு அரசியல் தலைவர்களுடனும் கூட ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை.

அவர்கள் என்னுடன் இணைந்திருப்பது என்மீதும் எனது கடந்தகால 40 வருட நம்பிக்கைமிக்க சேவையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணத்தினாலுமே ஆகும்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தோல்வியைக் கண்டு கொண்டிருக்கின்ற தற்போதைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் என்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர்.

என்மீது விரல் நீட்டி குற்றம் சுமத்துபவர்கள் என்மீது மட்டுமல்லாது என்னைப்போல் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகவே குற்றம் சுமத்துகின்றனர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இதனால் அரச சேவையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு இலக்காகியுள்ளனர்.

எனவேஇ என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அரச ஊழியர்களின் சேவைøய பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் தூக்கியெறிவது ஜனாதிபதியின் இயல்பான விடயமாகும்.

ஆனாலும் அந்த நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கவில்லை என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரத்தின் சுவரொட்டிகளை ஒட்டியவர் வாரியபொலவில் கொலை

வாரியபொலவில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளார்.இவர் நேற்று இரவு வாரியபொலவில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுவரொடிகளை ஒட்டிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வாரியபொலவைச் சேர்ந்த தம்மிக ஹேரத் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரான வன்முறைகளில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எதிவரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களின் போது வாக்களார்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்இ வாக்கு மோசடிகள் மேற்கொள்ளவும் ஆளுங்கட்சியினர் தமது ஆதரவாளர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதாக சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று வாக்களர்கள் தமது பிரதேசங்களில் உள்ள இந்துஇ பௌத்தஇ கிறிஸ்தவ மதகுருமார்களை அணுகி சுதந்திரமானதும்இ நீதியானதுமான தேர்தல் நடைபெற உதவுமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக வாக்களர்கள் தமது பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்தும்இ வாக்குத் திருட்டுகள் குறித்தும் ஊடகங்களுடன் தொடர்புகொள்ளுமாறும்இ கையடக்க தொலைபேசிகள் ஊடக அவற்றைக் காட்சிப்படுதுவதுடன் புகைப்படங்கள் எடுக்குமாறும் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் வாக்காளர்களைக் கோரியுள்ளது.

ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!


நேற்றையதினம் கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கி ஆகியோர் உரையாற்றியதுடன். சுpங்கப்ப+ரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள்; வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார்.

ஊடகங்களின் தவறுகளும் இன்றுவரை அவை ஒருபக்கசார்பாக நடந்து கொள்வது உட்பட, மக்களுக்கு உண்மையை எடுத்துகூற தயங்குவது குறித்தும் இதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இனியாவது ஊடகங்கள் உண்மையை எழுதவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியோர் வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இளைஞர் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன் அவர்கள் உரையாற்றுகையில், ஆயுதபோராட்டம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது தொடங்கியதோ அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையாகவே அது அழிக்கப்படவில்லை. ஏன்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அவை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்றும் தெரிவித்ததுடன். தமிழ் அமைப்புக்களின் ஜக்கியத்தை எடுத்துக்கூறியதுடன் அதற்கான சூழ்நிலை கடந்த ஆண்டு மே மாதத்துடன் தோன்றியுள்ளதையும் அதற்கான முன்னேற்பாடுகள் அண்மையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒரேமேடையில் தோன்றியுள்ளது மூலம் நல்லதொரு ஜனநாயக மாற்றத்திற்கான தோன்றல் ஏற்பட்டுள்ளது என்றும் டேவிற்சன் அவர்கள் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய யாழ் நோர்த்தன் பிரின்ரஸ் உரிமையாளர் மணியம் அவர்கள் உரையாற்றுகையில், சுந்தரத்தின் முற்போக்கு சிந்தனைகளையும், அவரது நற்பண்புகைளயும் எடுத்து கூறியதுடன், புதியபாதை பத்திரிகை அச்சிடுவதற்கு உதவியவமை பற்றியும் அப்போது உள்ள அச்சமான சூழிநிலையிலும், பத்திரிகை வெளியீட்டுக்கான முயற்சிகளில் சுந்தரம் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்களையும் சுந்தரத்தின் தீர்க்கமான செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் விஞ்ஞானபீட மாணவன் ஜக்கி அவர்கள் உரையாற்றுகையில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதை நினைகூர்ந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் 1985களில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை போன்றவற்றை மிகவும் சுவார்சியமாக எடுத்து கூறி பார்வையாளர்களை சுவார்சியப்படுத்தினார்.

பொதுவாகவே நேற்றைய நினைவுதின கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இவ்வாறக தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாற்று ஜனநாயகத்திற்கான சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக புளொட் உறுப்பினர் ரமேஸ் அவர்களின் நண்றியுரையுடன் நினைவுகூரல் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது.


தொகுப்பு: கண்ணன்.






அக்கரைப்பற்றில் ஐ.தே.க.ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள்மீது கல்வீச்சு



No Image


அம்பாறையிலிருந்து திருக்கோயில் நோக்கி 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்றுஇ அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அக்கரைப்பற்று அரசடிப் குதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அடங்கிய வெள்ளை வேன் ஒன்றை கைப்பற்றிய பொலிஸார் அதிலிருந்த 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அக்கறைப்பற்றுப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகேஇ சந்திரதாஸ கலப்பதிஇ மற்றும் வசந்த பியதிஸ்ஸ எம்.பி. ஆகியோர் தலைமையில் அக்கறைப்பற்று தம்பிலுவில்இ திருக்கோயில்இ பொத்துவில் ஊடாக இந்த வாகனப் பேரணி செல்ல முற்பட்டபோதே இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தாக்குதலை அடுத்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் திருக்கோயில் செல்லுவதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் தயா கமகே தலைமையிலான குழுவினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸாரின் தடையினை அடுத்து அக்கறைபற்று நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் இவர்கள் கூட்டமொன்றினை நடாத்தினர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டது. இந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஐ.தே..க ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கூட்டம் என்பவற்றினால் அக்கறைப்பற்று நகரம் சில மணிநேரம் பதற்றத்திற்குள்ளாகி இருந்தது. இங்கு கடைகளும் மூடப்பட்டதுடன் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது

தேர்தலின் பின் மீண்டும் இந்தியா செல்வோம் : மாவை சேனாதிராஜா
No Image

"ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்க எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சு நடத்தவுள்ளோம்" என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : "கடந்தவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியது. முக்கியமாக இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்து பேசினோம்.

அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் இந்திய உயரதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினோம்.

நாம் கூறிய விடயங்களை ஆர்வமாகவும் அக்கறையுடனும் செவிமடுத்த இந்திய தரப்பினர் அவற்றை உள்வாங்கிக் கொண்டனர். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்படத் தயார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேவேளைஇ மோசமான காலநிலை காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்க முடியவில்லை. நாங்கள் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிவிட்டது. அதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் வெளிநாடு சென்றுவிட்டார்.

எனவே மீண்டும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளோம். அதன்போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புலிகளின் வங்கிக் கணக்குகள் கு றித்து கெஹெலியவே தெரிவித்தார்:அநுர

No Image


சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்குள்ள சொத்து விபரங்களை கே.பி. தெரிவித்ததாக அரசாங்கமே தகவல்களை வெளியிட்டுள்ளது.

எனவேஇ அச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று ஜே. வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர் கே.பி. க்கு சிறப்புரிமைகளை வழங்கி ஏன் அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதுஇ கே.பி. வெளியிட்டதாகக் கூறி வெளியான தகவல்கள் தவறானவை என தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்இ

"நாமல் ராஜபக்ஷ புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் எமில் காந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தவறில்லை என்ற அரசின் மனப்பாங்கு கே.பி.யின் விடயம் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதிலும் தவறில்லை என்ற போக்கை அரசு கொண்டிருக்கலாம்.

இதுவல்ல முக்கியம். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் 14 கப்பல்கள் இருப்பதாகவும் கே.பி. தெரிவித்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவ்வாறான தகவல்களை நாம் வழங்கவில்லை. எனவேஇ மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு. அதற்காகவே கேள்விகளை தொடுக்கின்றோம்.

600 வங்கிக் கணக்குகளுக்கு 14 கப்பல்களுக்கு என்ன நடந்தது? கே.பி. எங்கே? அவருக்கு சிறப்புரிமைகளை வழங்கி அரசாங்கம் பாதுகாக்கின்றது. இது ஏன்? எதற்காக?

புலிகளின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வதற்காகவா? வங்கியில் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது? இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

நாமல் புகைப்பட விவகாரம்

நான் கிராமத்தில் பிறந்தவன். எனவேஇ எவராவது என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினால் தடை போட மாட்டேன் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இவர் இந்நாட்டு ஜனாதிபதியின் மூத்த மகன். இளைஞர்களுக்கான நாளைஇ நீலப் படையணி போன்றவற்றில் பதவி வகிப்பவர்.

இவ்வாறான ஒருவர்இ பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுதலைப் புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் தலைவர்களுடன்இ ஊர்ஜிதப்படுத்தப்பட்ட எமில் காந்தனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதானது பாரதூரமான செயலாகும்.

எனவேஇ நாமல் ராஜபக்ஷஇ எமில் காந்தனை ஏன் சந்தித்தார். இருவருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்ன? இதற்கான அனுமதியை யார் வழங்கினார்கள்? என்ற விபரங்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

எமது படையினர் உயிர்களை தியாகம் செய்துஇ அங்கவீனர்களாகி பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்தனர். அதனை காட்டிக்கொடுக்கும் விதத்தில் எமில் காந்தனை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
எனது வெற்றி உறுதி என்கிறார் ஜெனரல் சரத்பொன்சேகா
No Image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பணத்தினையும் கூட இழக்க நேரிடும் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் இன்று 17 ஆம் திகதி இடம் பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கிம் இ மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச்செயலாளர் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இதொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் சதாசிவம் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லச்சாமிஇ அர்ச்சுன ரணதுங்கஇ ஜெயலத் ஜெயவர்தனஇ ராமலிங்கம் சந்திரசேகரன்இ சச்சிதானந்தன்இ மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் இகே.கே.பியதாச உட்பட பலர்கலந்து கொண்டார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ந்து பேசுகையில்இ

எமது வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடம் பெற்ற தபால் மூல வாக்களிப்பில் எனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளனர். 10 வீதத்தை மர்ததிரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பணத்தினையும் இழக்க நேரிடும்.எனவே இன்று இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிகள் என்னை ஆதரிக்க முன்வந்துள்ளன.

நான் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நாட்டில் சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தினை நிலை நிறுத்துவேன். அத்துடன் என்னால் வழங்கப்பட்ட சகல வாக்குறுதிளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது போல் சம்பளவுயர்வினை வழங்குவேன். அரச சேவையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி கௌரவத்துக்குரியதொன்றாக அத்துடன் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்தினைப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

தனியார் பயணிகள் சேவையை நடத்துகின்றவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மானிய முறைஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளேன். அத்துடன் குறைந்த வருமானத்தினைப்பெறுகின்றவர்களுக்கும் உரிய நிவாரணங்களைப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்று இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தினை ஏற்படுத்துவேன்.

ஆகவே அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் ஒரே குடையின் கீழ் அணித்திரளுவோம். இந்த நாட்டில் வாழும் தோட்டத்தொழிலாளர் சமூகம் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலையை எனது வெற்றியின் மூலம் நிலை நிறுத்துவேன்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 67 சதவீதமான மக்கள் ஆதரவு

பொன்சேக்காவின் தோல்வி உறுதி - அமைச்சர் மைத்திரிபால


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 67 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று முன்னணியில் திகழ்வதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான மக்களின் ஆதரவு குறித்து மூன்றாவது தடவையாக எடுக்கப்ப ட்டிருக்கும் கணக்கெடுப்பின் பெறுபேறே இதனை சுட்டிக்காட்டு கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையையும் வங்குரோத்து அரசியல் பிரசாரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள நாட்டு மக்கள் என்றுமில்லாதவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்துக்கு அணிதிரண்டு வருகிறார்கள். எமது கூட்டங்களுக்கு வருகைதரும் இலட்சக் கணக்கான மக்களை பார்க்கையில் இந்த நாட்டின்

தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் என்பதனை அவர்கள் உறுதிசெய்துவிட்டா ர்கள் என்பது மேலும் ஊர்ஜிதமாகியி ருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால கூறினார்.

கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதியாகியுள்ளது. வீதியில் எங்கு பார்த்தாலும் 90 சதவீதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகங்களும் நீலக்கொடிகளும் வெற்றிலைச் சின்னங்களுமே காணப்படு கின்றன.

நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சரத் பொன்சேகாவுக்கும் எதிர்க்கட்சியினரின் வங்குரோத்து அரசியல் பிரசாரம் நன்கு புரிந்துவிட்டது.

தான் தேர்தலில் தோல்வியடையப் போகின்றேன் என்பது பொன்சேகாவுக்கு நன்கு விளங்கிவிட்டது.

இயலாமையை தோல்வியின் வேதனையை பொன்சேக்காவின் நடவடிக்கைகள்இ முகபாவம் மற்றும் பிரசாரங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்ள முடிகிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மைத்திரிபால இது தொடர்பாக மேலும் கூறுகையில்இ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் ஒருபோதும் வெற்றி காண முடியாதென அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். தோல்வி உறுதியென்பது நிச்சயமானதன் பின்னரே மக்களுக்கு வேடிக்கை காண்பிப்பதற்காக அரசியல் அனுபவமில்லாத இந்த பொன்சேக்காவை அறிமுகம் செய்துள்ளனர். பொன்சேக்காவின் மனசாட்சிக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.

சரத் பொன்சேக்கா இராணுவத்தில் பதவியிலிருந்த காலப்பகுதியிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தார். அவரது ஒப்பந்தப்படி புலிகள் படையினருக்கு எத்தனை அவதூறு செய்திருந்தாலும் அதனை படையினர் கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.

பொன்சேக்கா திறமையான படை வீரரென்றால் அந்த நேரமே யுத்தத்துக்கு முடிவு கண்டிருக்கலாமே? ஏன் அவரால் அதனை செய்ய முடியவில்லை. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு வந்த பின்பே நாட்டில் பல தசாப்த காலமாக நிலவி வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்போதுஇ பொன்சேக்கா தானே மோதல்களை தீர்த்து வைத்ததாக பெருமை தேடிக்கொள்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரின் வங்குரோத்து அரசியல் நிலையினை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். போலிப் பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைப்பது வெறும் கனவு மாத்திரமே.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரமேயுள்ளன. அதற்கிடையில் எமது ஜனாதிபதிக்கான ஆதரவினை இன்னும் பல மடங்கு பலப்படுத்துவோம். ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயமெனவும் அவர் கூறினார்.

மாகாண சபை தேர்தல்களுக்கு விநியோகிக்கப்பட்ட
தற்காலிக அடையாள அட்டைகளை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முடியும்

மாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்

மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால்இ பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.

இந்நிலையில்இ கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள் ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள்இ காலாவதியாகாத கடவுச் சீட்டுஇ காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம்இ ஓய்வூதிய அடையாள அட்டைஇ முதியோர் அடையாள அட்டைஇ ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டைஇ தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன்

2வது ஒப்பந்தத்தை ஒழிக்கும் பொறுப்பு மக்களுடையது - ஜனாதிபதி

(குருநாகலிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்இ வாரியபொல தினகரன் நிருபர்)

தாய்நாட்டுக்கெதிரான முதலாவது ஒப்பந்தத்தை நான் நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து இல்லாதொழித்தேன். இரண்டாவது ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுடையதெனவும் அதனை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிறைவேற்றுவரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வன்முறைக்கும் விரோத அரசியலுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லையென தெரிவித்த ஜனாதிபதிஇ பயங்கரவாதத்திலிருந்து மீட்டு ஒன்றிணைந்துள்ள நாட்டைப் பாதுகாத்து ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று குருநாகல் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பாஇ எஸ். பி. நாவின்னஇ சாலிந்த திசாநாயக்கஇ பாட்டலி சம்பிக்கை ரணவக்கஇ முன்னாள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட கலைஞர்கள்இ கட்சித் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

மதுரங்குழி பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளது டன் ஐயர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள் ளனர். மீண்டும் வன்முறை யுகம் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.

இதனை முடிவுக்குக் கொண்டுவரவும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முடிவு கட்டவும் எதிர்வரும் 26ம் திகதி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டை மீட்டு ஐக்கியப்படு த்துவதற்காக மக்கள் இந்த நாட்டைப் பாரம்கொடுத்தார்கள். அதனை நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

தனி நிர்வாக அதிகாரத்துடன் அடையாள அட்டையிலிருந்து சகலதையும் தமக்கென தனியாக வைத்திருந்த பயங்கரவாதியி டமிருந்து நாட்டை மீட்டு தற்போது ஒரு கொடியின் கீழ் அனைத்தையும் கொண்டுவர முடிந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு அடிபணிந்து முதுகெலும்பில்லாமல் எம் தலைவர்கள் செயற்பட்ட யுகத்துக்கும் முடிவு காணப் பட்டுள்ளது.

நாம் யுத்தத்தை மாத்திரம் முன்னெடுக்க வில்லை. நாட்டில் அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அத்துடன் அரச துறையை மேம்படுத்தும் வகையில் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது. நாம் இந்த நாட்டை ஆசிய பிராந்தியத்திலேயே பெறுமதிமிக்க நாடாக மாற்ற பின்புலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். வடக்கு கிழக்கு உட்பட சகல பிரதேசங்களையும் அபிவிரு த்தியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எம்மைப் பற்றி பல அவதூறுகள்இ சேறு பூசுதல்கள் இடம்பெறுகின்றன. எம்முடனுள்ள விமல் வீரவன்சஇ ஜோன்சன் பெர்னாண்டோ போன்றவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எந்தவித சவால்களையும் ஏற்க நாம் தயார்.

வைராக்கியமும் குரோதமும் நிறைந்த அரசியலுக்கு இந்த நாட்டில் இனி இடமில்லை. நாமும் நாட்டு மக்களும் அதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

பணத்திற்கு விலைபோகும் அரசியல்வாதிகள் எம்மிடமில்லை. 30 மில்லியன் ரூபாவுக்கு முஸம்மிலை விலைபேசியுள்ள விடயம் அம்பலமாகி யுள்ளது.



முஸம்மிலுக்கு ரூ.3கோடி வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை

ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்



சரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மூன்று கோடி ரூபா பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்இ இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலக த்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மில் எம்.பி.யின் ஆதரவை பெற்றுக்கொள்வ தற்கான இடைத்தரகராக செயற்பட்ட மயோன் முஸ்தபா எம்.பி. முஸம்மில் எம். பி.யுடன் பேரம் பேசுவதை அதில் கேட்கக் கூடியதாக இருந்தது.

அதேபோன்றுஇ கடந்த 14ம் திகதி இராஜகிரியவிலுள்ள ஐ. தே. க. அலுவலகம் ஒன்றில் வைத்து ஐ. தே. க. முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம முஸம்மில் எம்.பி.யுடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

மயோன் முஸ்தபா ஹாபிஸ் நமர் அஹமட் (துஆ தலைவர்) மற்றும் சரத் என்று அழைக்கப்படும் ஐ. தே. க.வின் மற்றுமொரு முக்கியஸ்தர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையை முஸம்மில் எம்.பி. மிகவும் இரகசியமான முறையில் தனது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிப்பதிவு இயந்திரம் மூலம் பதிவுசெய்துள்ளார். இந்த உரையாடலையும் இங்கு அவர் ஒலிபரப்பிக் காண்பித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும்இ தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராகவும்இ சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான அறிவித்தலை முஸம்மில் எம்.பி. ஊடாக வெளியிடுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான செய்தியாளர் மாநாட்டை நடத்தும் இடம் தொடர்பான முரண்பாடுகள் வந்ததையடுத்து அதனை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஐ. தே. க. முக்கியஸ்தர் மலிக் சமரவிக்ரம அந்த இடத்திலிருந்தவாறே ரவி கருணாநாயக்க எம்.பி.யுடன் தொலைபேசி மூலம் பேசுவதையும்இ மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்த ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையையும் அந்த ஒலி நடாவிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது.

ஒலிபரப்பி காண்பிக்கப்பட்ட உரையாட ல்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு இந்த செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. தகவல் தருகையில் :-

மிகவும் பொறுப்புடனும்இ ஆதாரபூர்வ மாகவும் இந்த தகவல்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஒளிஇ ஒலி நாடாக்களையும் நாங்கள் வெளியிடுகின்றோம்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு தனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முஸம்மில் என்னிடம் தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள் திட்டமிட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் எனது ஆலோசனைக்கமைய நாட்டுக்காக முஸம்மில் எம்.பி. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் காட்சிகளையும் பேச்சுக்களையும் ஒளிஇ ஒலிப்பதிவுகளை செய்துள்ளார்.

இவற்றில் உண்மையில்லை என்று கூறும் எவரும் இதனை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையானதும்இ தகுந்த ஆதாரங்களும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் இதனை முன்வைக்கவு ள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதற்கான சகல சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

3 கோடி ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் ஒரு தொகைப் பணத்தையே முற்பணமாக கொடுத்துள்ளனர். இதற்காக வெள்ளவத்தையிலுள்ள சபயார் ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. 105ம் இலக்க அறை முஸம்மில் எம்.பி.க்காகவும்இ 102ம் இலக்க அறை அவரது மெய்பாது காவலர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபாஇ தனது பெயர்இ அடையான அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை வழங்கி இந்த இரு அறைகளை பதிவு செய்துள்ளமை ஹோட்டல் பதிவு மூலம் தெளிவாக உறுதியாகின்றது.

எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கும் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். சரத் பொன்சேகா தான் ஊழல் அற்றவர் என்றும் தன்னுடன் இருப்பவர்களும் நேர்மையானவர்கள் என்றும் கூறித் திரிகின்றார்.

இலஞ்சம் கொடுத்து எம்.பி.க்களை வாங்குபவர்களிடமிருந்து எவ்வாறு நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்குத் தேவையானதை இந்த நாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் பணங்கள் மூலம் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவேஇ மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

முஸம்மில் எம். பி.

சில ஊடகங்கள் கூறுவது போன்று பணத்தைப் பெறும் நோக்கம் இருந்தால் அந்த காட்சிகளையும்இ பேச்சுவார்த்தைகளை யும் ஒளிஇ ஒலிப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை என்று முஸம்மில் எம்.பி. தெரிவித்தார்.

இது போன்ற இலஞ்சம் கொடுக்கும் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

எமது திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டி ஏற்பட்டது. இதற்காக பொன்சேகாவுக்கு ஆதரவாக சில பொய்களை சொல்ல நேர்ந்ததாக முஸம்மில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு;

‘கொமான்டோ படையினர் வேண்டுமா? அல்லது என்னிடம் பாதுகாப்பு ஆட்கள் உள்ளனர். எது வேண்டும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்டுள்ளார்.

மயோன் முஸ்தபாவுடனான ஒலி நாடா உரையிலும் இதனை கேட்கக்கூடி யதாக இருந்தது.

கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த முஸம்மில்இ உங்களைப் பற்றி தலைவரிடம் சொல்லியுள்ளேன். இன்னும் சில முக்கியஸ்தர்கள் வரவுள்ளனர். சகலருக்கும் பணம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாஇ ரணில்இ ஜே. வி. பி. மற்றும் முக்கியஸ்தருக்கு இந்த விடயங்கள் தொடர்பாக தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

17 ஜனவரி, 2010

தமிழ்க் கூடட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் துப்பாக்கிச்சூட்டில் காயம்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுபிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் பொறுப்பாளர் கேணல் ராம் கைதாகவில்லை

-இராணுவப் பேச்சாளர்- புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் ராம் இதுவரை கைதாகவில்லை என இராணுப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கேணல் ராம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஜெனரல் சரத்பொன்சேகா தரப்பினர் வெளியிட்டுவரும் பிரச்சாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மறுப்பறிக்கையும் விடுத்துள்ளார். கேணல் ராம் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் எனவும், இதனால் தேர்தலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று கூறியுள்ளது. குறித்த புலி பொறுப்பாளர் கிழக்கு காட்டுப் பகுதியில் மறைந்திருக்கக் கூடுமென இராணுவத்தினர் சந்தேகித்துள்ளனர்.

மாத்தளை நகரசபை உறுப்பினரின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு-

மாத்தளை நகரசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின்மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விடுப்பதற்காக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை பொலீசார் ஆரம்பித்துள்ளனர். இதனிடையே கேகாலை மாவனல்ல பகுதியில் நேற்றுப்பிற்பகல் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் அமைதியின்னை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கற்களும் தடிகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது தமது வீட்டுக் கூரைக்கு சேதமேற்பட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல்வாதியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளர்.

ஆளும்கட்சி அதிகளவில் அரச சொத்து துஸ்பிரயோகம்-

பாக்கியசோதி சரவணமுத்து- ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகளவில் அரசாங்க சொத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். அரச ஊடகங்கள் மிகவும் மோசமான முறையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசஅதிகாரிகள், கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஆகியன அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது சொத்துக்கள் தனிப்பட்ட அரசியல்கட்சிகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது எனவும், பொதுமக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17வது திருத்தச் சட்டமூலம் அமுல்படுத்தப்படும் வரையில் சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்துவதில் சிக்கல்நிலை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாண்டிக்குளம் பஸ் விபத்தில் இருவர் பலி, 13பேர் காயம்-

வவுனியா தாண்டிக்குளத்தை அண்மித்துள்ள கொக்குவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த பஸ் விபத்து இன்றுஅதிகாலை 1மணியளவில் இடம்பெற்றதாக வவுனியா பொலீசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியைவிட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் குறித்த பஸ்சின் சாரதியும், பயணியொருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்போது மேலும் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
தேசிய சுதந்திர முன்னணியின் குற்றச்சாட்டை அமெரிக்காஇ நோர்வே தூதரங்கள் மறுப்பு

No Image
ஜனாதிபதி தேர்த லில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்குஇ தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸாமிலுக்கு கொடுப்பதற்காக நோர்வேயும் அமெரிக்காவும் நிதி வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன.

மற்றொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதை தாம் விரும்பவில்லை நோர்வே தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில்இ தமது நாடு குறித்த நிதியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவும் தம்மீதான இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இலங்கையின் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் ஜனநாயகம் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்இ வெற்றிபெற்றவருடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 566 முன்னாள் போராளிகள் விடுதலை

No Image
அரசாங்கப் பா து காப்புப் படையினரிடம் சரணடைந்துஇ புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் 566 போ் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைஇ அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்ததாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

புனருத்தாபன நிலையங்களில் விடுதலைப் புலிகளின் மனநிலை விருத்தி செய்யும் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




தாய்லாந்து ஐ.டீ.சி சிறையில் உள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்


தா No Image ய்லாந்து பா ங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

மேற்படி கைதிகள் ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும்இ இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம்இ தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம்இ ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும்இ மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில்இ 15ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண்இ பெண்இ சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர்.

அவ்வாறு உரையாடியுள்ள போதிலும்இ உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணா விரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.

கேணல் ராம் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை:இராணுவ பேச்சாளர்


தமிழீழ விடுதலை No Image ப்புலிகளின் தளபதிகளில் ஒருவ ரான கேணல் ராம்இ அரசாங்க த்தி னால் விடுவிக்க ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது.

தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில்இ இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ளஇ இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரஇ கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐ.நா தலைமையகத்தை டுபாய்க்கு மாற்ற நடவடிக்கை

News Photo
2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து டுபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா அதிகாரிகளை அழைத்துள்ள டுபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.

பூகோள அமைப்பில் டுபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம்இ உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழிஇ விமான வழிஇ சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உலக சமாதானத்திற்கும்இ பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஐ.நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் ஐ.நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக ஐ.நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்காஇ ஆசியாஇ ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் "யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி" துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!

நேற்றையதினம் கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக நேற்றையதினம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401 டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது.

பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கியா ஆகியோர் உரையாற்றியதுடன். சுpங்கப்ப+ரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள் வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார்.


ஊடகங்களின் தவறுகளும் இன்றுவரை அவை ஒருபக்கசார்பாக நடந்து கொள்வது உட்பட, மக்களுக்கு உண்மையை எடுத்துகூற தயங்குவது குறித்தும் இதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இனியாவது ஊடகங்கள் உண்மையை எழுதவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியோர் வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இளைஞர் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன் அவர்கள் உரையாற்றுகையில், ஆயுதபோராட்டம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது தொடங்கியதோ அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையாகவே அது அழிக்கப்படவில்லை. ஏன்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அவை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்றும் தெரிவித்ததுடன். தமிழ் அமைப்புக்களின் ஜக்கியத்தை எடுத்துக்கூறியதுடன் அதற்கான சூழ்நிலை கடந்த ஆண்டு மே மாதத்துடன் தோன்றியுள்ளதையும் அதற்கான முன்னேற்பாடுகள் அண்மையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒரேமேடையில் தோன்றியுள்ளது மூலம் நல்லதொரு ஜனநாயக மாற்றத்திற்கான தோன்றல் ஏற்பட்டுள்ளது என்றும் டேவிற்சன் அவர்கள் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய யாழ் நோர்த்தன் பிரின்ரஸ் உரிமையாளர் மணியம் அவர்கள் உரையாற்றுகையில், சுந்தரத்தின் முற்போக்கு சிந்தனைகளையும், அவரது நற்பண்புகைளயும் எடுத்து கூறியதுடன், புதியபாதை பத்திரிகை அச்சிடுவதற்கு உதவியவமை பற்றியும் அப்போது உள்ள அச்சமான சூழிநிலையிலும், பத்திரிகை வெளியீட்டுக்கான முயற்சிகளில் சுந்தரம் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்களையும் சுந்தரத்தின் தீர்க்கமான செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மருத்துவபீட மாணவன் ஜக்கியசீலன் அவர்கள் உரையாற்றுகையில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதை நினைகூர்ந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் 1985களில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை போன்றவற்றை மிகவும் சுவார்சியமான எடுத்து கூறி பார்வையாளர்களை சுவார்சியப்படுத்தினார்.

பொதுவாகவே நேற்றைய நினைவுதின கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இவ்வாறக தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாற்று ஜனநாயகத்திற்கான சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக புளொட் உறுப்பினர் ரமேஸ் அவர்களின் நண்றியுரையுடன் நினைவுகூரல் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது..

தொகுப்பு: கண்ணன்.
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் தீர்வுக்கு கூட்டமைப்பும் தயாரில்லை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு நிற்கின்றது. இதில் எந்த அணி சரியானது என்பதிலும் பார்க்க இவர்கள் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்குத் தார்மீக அடிப்படையில் தகுதி உள்ளவர்களா என்பது பிரதானமான கேள்வி.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒருவேளை இவர்கள் உரிமை கோரலாம். அன்று நடந்ததைத் தேர்தல் என்று கூறுவது மிகப் பெரிய பகிடி. அணியொன்றின் பிரதான வேட்பாளர் தனது வாக்கை அளிப்பதற்கு இயலாதவாறு வன்முறையாளர்களால் தடுக்கப்பட்டார். வாக்களிப்பு நிலையங்களில் புலிகளின் காட்டாட்சியே நடந்தது. இப்படியான தேர்தலில் கிடைத்த வெற்றியை மக்களின் தீர்ப்பு எனக் கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

எனவேஇ அந்தத் தேர்தல் வெற்றியை ஒருபுறத்தில் தள்ளிவிட்டு இவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற பின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியிலும் இவர்கள் ஈடுபடவில்லை. புலிகள் காட்டிய பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணித்தார்கள். இந்தப் பயணத்தின் விளைவாகத் தமிழ் மக்களுக்கு இவர்கள் விளைவித்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல. உடைமை அழிவுகளும் உயிரிழப்புகளும் இடம் பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் இவர்களின் பிழையான கொள்கையினால் ஏற்பட்ட விளைவுகள்.

இத்தனைக்கும் தார்மீகப் பொறுப்பேற்று இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கின்றார்கள். வந்தவர்கள் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டமொன்றை முன்வைத்துச் செயற்படுவதற்குத் தயாராக முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை. கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் வெறுங்கை தான். தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டம் எதுவுமே இல்லாமல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறுவதும் தேர்தலில் இம்மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென வழிகாட்டுவதும் நகைப்புக்கிடமானவை.

சரத் பொன்சேகா கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் கையளித்ததாகப் பத்திரிகைகளில் வெளியாகிய ஆவணத்தில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளே அவை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அந்த ஆவணத்தில் எதுவும் இல்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் பொன்சேகாவுக்கு இல்லை என்பதே இதன் அர்த்தம். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்பாடாக இருப்பது தான் புதுமை.


ஹேலீஸின் முதலாவது காட்சியகம் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் தனது பல தசாப்தகால பழமையான உறவுக ளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ஹேலீஸ் குழுமம் ‘ஹேலீஸ் உலகம்’ எனும் தொனிப்பொருளில் அதன் முதலாவது காட்சியகத்தை தொடங்கியுள்ளது.

இலங்கையில் ஒரே கூரையின் கீழ் பல்வேறு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவதில் முன்னணி வகிக்கும் ஹேலீஸ் அதன் கூட்டாண்மை இலட்சினையின் கீழ் புதிய காட்சியகத்தை டிசம்பர் மாதம் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் தொடங்கி வைத்தது. ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இதேபோன்ற காட்சியகங்கள் பின்னர் கொழும்பிலும் திறந்துவைக்கப்படும் என்று ஹேலீஸ் குழுமம் அறிவித்துள்ளது.

‘ஹேலீஸ் அதன் உற்பத்திகள் மற்றும் சேவைகள் ஊடாக ஒரே இடத்தில் இருந்து பெருந்திரளான மக்களுக்கு தனது குழுமத்தின் பிரதிநித்துவத்தை வழங்குவது என்பது ஹேலீஸ் மேற்கொண்டுள்ள வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் பாரிய சவால் மிக்க ஒரு செயலாகும்” என ஹேலீஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்தப் பணியை மேற்கொள்ளளநாம் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் யுத்தத்திற்குப் பிந்திய மறுசீரமைப்பில் ஹேலீஸின் பங்களிப்பை வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்தை எமது முதலாவது தெரிவாக நாம் எடுத்துள்ளதோடு வட பகுதியுடனான வரலாற்றுத் தொடர்புகளை மீளக்கட்டியெழு ப்பவும் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடபகுதியில் விவசாய சமூகத்தினர் மத்தியில் ஹேலீஸின் பெயர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். 1960 களின் ஆரம்பம் முதல் குடாநாட்டு விவசாயிகளுக்கு தேவையான விவசாய உள்ணுடுகளையும் ஆலோசனைச் சேவைகளையும் ஹேலீஸ் வழங்கி வருகின்றது. ‘துரதிஸ்டவசமாக எமது குழுமத்தின் பல புதிய உற்பத்திகளும் சேவைகளும் கடந்த 25 வருடங்களாக வட பிராந்தியத்தை சென்றடைய முடியாத நிலை காணப்பட்டது. இயலுமான வரைக்கும் விரைவாக இந்த நிலையை மாற்றியமைக்க நாம் எண்ணியுள்ளோம்” என மொஹான் பண்டிதகே மேலும் தெரிவித்தார்.

இலக்கம் 47 ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஹேலீஸ் வர்த்தக காட்சியமான ‘ஹேலீஸ் உலகம்’ சுமார் 2000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு மாடிக் கட்டிடமாகும். முதலாவது மாடியில் தும்புப் பொருட்கள் முதல் றப்பர் தரைமெத்தைகள் மற்றும் உறைகள்இ குஷன்கள்இமெத்தைகள்இ வீட்டுப்பாவனைக்கான றப்பர் கையுறைகள்இ காபன் செறிவு கொண்ட முகக் கவசங்கள் வாசனை நீக்கிப் பொருட்கள்இ தனிநபர் ஆரோக்கியப் பொருட்கள் மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் மற்றும் கெமராக்கள்இ பலிம்கள்இ விவசாய உள்ணுடுகள்இ பெறுமதிக் கூட்பட்ட விவசாய உற்பத்திகள்இ விவசாய உபகரணங்கள் மற்றும் மின்பிறப்பாக்கிகள் என பல்வேறு உற்பத்திப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விற்பனைக் கூடத்தின் மூலம் போக்குவரத்துஇ சரக்குச்சேவை என்பன தொடர்பான போக்குவரத்துச் சேவைகள்இ அவைபற்றிய தகவல்கள் என்பனவற்றையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்

நாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர் தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனநாயக முறையில் தங்கள் தலைவரைத் தெரிவு செய்வத ற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முக்கிய வேட்பாளர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

என்றாலும்இ பணத்தை முதன்மைப்படுத்தி மக்கள் சக்தியைக் கொச்சைப் படுத்தும் செயல்களில் பொன்சேகா தலைமையிலான எதிரணியினர் செயற்பட்டு வருவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

ஜனநாயக விழுமியங்களுக்குள் தங்களது கொள்கைகளை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்று செயற்படுவதே தார்மீகம். நிறைவேற்ற முடி யாத வாக்குறுதிகளை முன்வைப்பதும்இ நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்வைப் பதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய முயற்சிகளில் தோற் றுப் போன எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மற்றொரு முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக கோடிக் கணக்கில் பணம் கொடு த்து முக்கியஸ்தர்களைப் பிடிக்கும் படுமோசமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்நாட்டில் பயங்கரவாதம் முற்றாக முறியடிக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்இ ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் கைங்கரியத்தில் எதிரணியினர் இறங்கி இரு ப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முஸம்மில் என்பவரை பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கக் கூறி 300 இலட்சம் (30 மில்லியன்) ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சபையர் ஹோட் டலில் 205வது அறையில் இந்தப் பணப் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கி றது. ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சை வேட்பாளர் மயோன் முஸ்தபா வும்இ அரச தரப்பிலிருந்து பொன்சேகா தரப்புக்குத் தாவிய துஆ கட்சி யின் தலைவர் ஹாபீஸ் நமர் அஹமட்டும் இந்த பரிமாற்றத்தில் ஈடு பட்டுள்ளனர். பத்தறமுல்லையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் முஹ மட் முஸம்மில் வீடியோ ஆதாரங்களுடன் இதனை வெளிப்படுத்தினார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு 300 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறதென்றால்!? நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை.

இதனை ஒரு சாதாரண விடயமாக எடைபோட்டுவிடமுடியாது. வெளி நாட்டுச் சக்திகளும்இ தேசத்தை அழிக்க முயல்பவர்களும் இதன் பின் னணியில் இருக்கிறார்களென்பது பெரும் தொகைப் பணப்பரிமாற்றத் தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

நாட்டு மக்கள் இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இலட்சக் கணக்கான ரூபா ய்கள் வழங்கப்படும்போது வெளிநாட்டு தூதரக அதிகாரியொருவரும் இருந்ததாக முஸம்மில் கூறுகிறார். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்ப டும் தூதரகம் இதனை மறுத்துள்ளது.

என்றாலும்இ நாட்டை அழிக்க முய லும் வெளிநாட்டு சக்திகள் எதிரணியினரின் வடிவத்தில் கால் ஊன்ற முற்படுகிறார்கள் என்பதற்கு நல்லதொரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.

மக்களின் ஜனநாயகக் குரல்களை நசித்து பணத்தின் மூலம் சகலதையும் நிறைவேற்ற முடியுமென அன்னத்தைச் சின்னமாகக் கொண்டவர்கள் நினைப்பது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்புடை யதல்ல. ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானதாகவே இதனைக் கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்தால் ஊழல் மோசடிகளை ஒழித்து விடுவோமென தேர்தல் வாக்குறுதி


புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு


படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம்இ பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும்இ வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும்இ புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பின ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ரூ. 3 கோடி முஸம்மிலுக்கு வழங்கிய விவகாரம்:
பொன்சேகாவின் ஊழலை மறைக்கும் முயற்சி அம்பலம்;
இன்றும் பல திடுக்கிடும் தகவல்கள்

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்க வும்இ அவருக்கு ஆதரவு வழங்குவதற் குமாக மூன்று கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ள விடயம் பொய்யானது என எவரேனும் தெரி வித்தால் அவை அனைத்தும் ஒலிஃ ஒளி நாடாக்களுடன் நிரூபிக்க முடி யும் என தேசிய சுதந்திர முன்னணி யின் பேச்சாளர் நேற்று தெரிவித் தார்.

தேசிய சுதந்திர முன்னணி பாரா ளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு மூன்று கோடி ரூபாவை வழங்கிய விடயம் பற்றி மேலும் புதிய தகவல்கள் இன்றைய செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவி க்கப்படும் என்றும் அந்தப் பேச்சா ளர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழ ல்கள் தொடர்பாக ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய் யானவை என தெரிவிக்க வேண்டும் என்றும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என் றும் கூறி மொஹமட் முஸம்மிலு க்கு கட்டுக்கட்டாக பணத்தை வழங் கியுள்ளனர்.

இந்தப் பணக் கொடுக்கல் வாங்க ல்கள்இ நடந்த சம்பாஷணைகள் அடங்கிய ஒலிஃஒளி நாடாக்களையும் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச ஊடகங்களுக்கு காண்பித்தார்.

அரசாங்க தரப்பு எம்.பிக்க மூன்று கோடி ரூபா பணத்திற்கு விலை பேசும் தேசத்துரோக செயல்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத் தும் நோக்குடன் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்சவின் அறி வுறுத்தலின் படி மொஹமட் முஸ ம்மில் நடவடிக்கையை மேற்கொண் டிருந்தார்.

இதன்படி வெள்ளவத்தை சபயார் ஹோட்டலில் அறையொன்றில் முதலாவதாக 10 இலட்சம் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மி லின் ஆதரவை பெற்றுக்கொள்வத ற்கான இடைத் தரகராக மயோன் முஸ்தபா எம். பியே இருந்துள்ள மையும் அம்பலமாகியுள்ளது.

300 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு முடிவானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கஇ மங்கள சமரவீரஇ ரவி கருணாநாயக்கஇ மலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தமொன்றையும் மயோன் முஸ்தபா ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதில் சரத் பொன்சேகாவுடன் பேசு மாறும் ரணில் மற்றும் ரவி கருணா நாயக்க ஆகியோர் முஸம்மிலிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளவத்தை சபயார் ஹோட்டல் அறையில் முற்பணமாக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா வுடன் தொடர்புடைய ஒலிநாடா வும் ஜே. என். பி.யினர் வசமுள் ளது. இந்த ஒலி நாடாவில் மயோன் முஸ்தபா மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஒருவரும் இருந்ததாகவும் மொஹமட் முஸம்மில் தெரிவித் தார்
மேலும் இங்கே தொடர்க...