21 அக்டோபர், 2009

பேங்கொக்கில் இலங்கையர் மூவர் கைது
கடனட்டை மோசடி :
அகதிகள் விவகாரம் குறித்து ஆஸி. - இந்தோடு
னேஷியா இணக்கப்பா




அகதிகள் விவகாரங்களை இணைந்து கையாள்வதென, இந்தோனேஷிய மற்றும் அவுஸ்திரேலிய தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் மற்றும், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலியோ பாபம்பாங் யுதோயோனோ ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை இந்தோனேஷிய ஜனாதிபதி பேச்சாளர் டினோ பெட்டி ட்ஜலால் தெரிவித்துள்ளார்.

இதனை ஒரு விளம்பரமாக பிரசித்தப்படுத்தி முன்னெடுக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தோனேஷியக் கடற்படையினர், குடிவரவுத் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த வார இறுதியில் இந்தோனேஷியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட 78 அரசியல் தஞ்சம் கோரியவர்களையும் தற்காலிகமாகப் பொறுப்பேற்க இந்தோனேஷியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தோனிஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 255 இலங்கையர்களையும், அரசில் அந்தஸ்த்து கோருபவர்களாக அங்கீகரிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உரிமை பேரவையிடம்


கடனட்டை மோசடி தொடர்பில் பேங்கொக்கில் மூன்று இலங்கையர்கள் கடந்த திங்கட்கிழமை தாய். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவப்பிரியன் சிவபாக்கியராஜா, அழகப்பன் பாலேந்திரன் மற்றும் வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேங்கொக்கின் சுக்ஹம்விட் சோய் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 104 இலத்திரனியல் அட்டைகளும், காந்தபுலன் உணரி(magnetic card-strip reader)ஒன்றும், இரண்டு (lap-top)மடி கணினிகளும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, அவர்கள் தாய்லாந்தைத் தளமாக பயன்படுத்தி, சர்வதேச கடனட்டை மோசடிகளில் ஈடுபட்டுவரும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச வங்கி கணக்குகளை கொண்டிருக்கும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் கடனட்டை தகவல்களை பெற்று, அவற்றை போலி கடனட்டைகளுக்கு பிரதி செய்து இவர்கள், மோசடிகளில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை: தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்; மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் அதிரடி அறிவிப்பு

நகரி, அக். 21-

இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது. இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது.

இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் ஒரு இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.

அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.

சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற் கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.

எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் - கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் தற்போது மேற்கு வங்காளம், ஒரிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பலத்துடன் உள்ளோம். தென்மாநிலங்களில் எங்கள் அமைப்பை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்தது எப்படி? பசில் ராஜபக்ஷே இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவுக்கு விளக்கம்!


இலங்கை கடற்பகுதியில் போடப்பட்டிருந்த ஆறு அடுக்கு பாதுகாப்பை உணராத பிரபாகரன், தப்பிச் செல்லும் போது தான், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், 30 ஆண்டுகாலமாக சிங்கள ராணுவத்திடம் போரிட்டு வெற்றி கண்ட அவர், எப்படி ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார் என, இன்னும் சிலர் நம்ப மறுக்கின்றனர்.

அவர் இறப்பதற்கு முன் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றி பசில் ராஜபக்ஷே, தமிழக எம்.பி.இக்கள் குழுவினரிடம் கூறியதாவது: மக்களை கேடயமாக முன் நிறுத்தி தான் புலிகள் இந்த போரை நடத்தினர். மக்கள் வெளியேறாதபடி அவர்களின் அடையாள அட்டையை புலிகள் பறித்துக் கொண்டுவிட்டனர். விடுதலைப் புலிகள் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வந்தது.

புலிகளைச் சுற்றிலும் பலம் வாய்ந்த ராணுவ வளையம் இறுகியது. புலிகளுக்கு ஆயுதம் வருவதற்கும் வழியில்லாமல் போனது. தப்பிப்பதற்கும் வழியில்லை. மக்களும் குண்டு அடிபட்டு உயிருக்கு போராடி பரிதவித்த நேரம். பெரிதாக எதிர்பார்த்திருந்த இந்தியாவில் இருந்து போரை நிறுத்துவதற்கான வழி இனி வரப் போவதில்லை என உறுதியானது. சண்டை போட வைத்திருந்த ஆயுதத்தையும் படிப்படியாக இழந்துவிட்டனர். பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என பிரபாகரன் முடிவு செய்து, நடேசன் மூலமாக பேச்சுவார்த்தைக்கு தூது அனுப்பினார். பிரபாகரன் இறப்பதற்கு முதல் நாள் போர் உச்சக்கட்ட நிலையை அடைந்திருந்தது.

திடீரென அன்று காலை 12 மணிக்கு நடேசன், பசில் ராஜபக்ஷேவை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து பேச விரும்புகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம். விரைவில் ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அப்போது புலிகளிடமிருந்து வரும் தகவல் நம்பகமானதா அல்லது வழக்கமான திசை திருப்பும் தந்திரமா என யூகிக்க முடியாதவாறு, “சரி ஏற்பாடு செய்வோம்’ என, ராஜபக்ஷேவுடன் கலந்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு நார்வே தூதரும் போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அப்போது தான், புலிகள் இறங்கி வந்திருப்பதாக ராணுவம் உணர்ந்தது.

இதற்கிடையே புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் மெல்ல மெல்ல, ராணுவ பாதுகாப்பு முகாமிற்கு வர தொடங்கினர். புலிகளும் பொது மக்கள் செல்வதை அனுமதித்தினர். அதற்காக ஒரு சிறிய பாதை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பொது மக்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.

இரவு 9 மணிக்கு பொது மக்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்த பாதையில், புலிகள் இரண்டு வேன்களில் வந்து திடீரென தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில் திட்டமிட்டபடி பின்புறமாக பிரபாகரன் முல்லைத்தீவு கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, கடல் பகுதியில் ஆறு அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை சற்றும் உணராத பிரபாகரன், ராணுவ தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.

ஆனால், பிரபாகரனை நோக்கி தாக்கியது ராணுவத்திற்கும் தெரியாது.மறுநாள் காலையில் தாக்குதல் நடந்த இடத்தில் கிடந்த பிரேதத்தை பார்த்த போது தான் பிரபாகரன் உடல் கிடந்தது ராணுவத்திற்கே தெரிந்தது. இவ்வாறு பசில் ராஜபக்ஷே கூறினார்.

கண்ணி வெடிகளை அகற்ற தாமதம்: இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்இ 60 நாட்களில் வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்பது விதி. ஆனால்இ இலங்கை அரசு அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. போர் நடந்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.

மேலும், விடுதலைப் புலிகள், தமது ஆயுதங்களை பூமிக்கு அடியிலேயே பதுக்கி வைத்துள்ளதாக ராணுவ தரப்பில் நம்பப்படுகிறது. அவற்றை முழுவதுமாக அகற்றும் பணியில் இந்தியா, இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். முற்றிலுமாக அகற்றப்பட்டதாக சான்றிதழ் கொடுத்தால் தான், முகாம்களில் உள்ளவர்களை குடியமர்த்த முடியும். அவசர அவசரமாக கண்ணி வெடிகளை மட்டும் அகற்றிவிட்டு தமிழர்களை குடியமர்த்தினால், ஏற்கனவே விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை ஏந்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் தான், காலதாமதமாவதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்படுகிறது.

திருமாவை கிண்டலடித்த ராஜபக்ஷே தமிழக எம்.பி.க்கள் குழுவுடன் இலங்கைக்கு சென்றிருந்த திருமாவளவனை ராஜபக்ஷே கிண்டலடித்தார். இலங்கை சென்றிருந்த தமிழ் எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெற்றிருந்தார். ஏற்கனவே புலித்தலைவர் பிரபாகரனை சந்தித்தவர்கள் பட்டியலில் திருமாவளவன் இருந்ததால், அவர் மீது ராஜபக்ஷே தனிக்கவனம் செலுத்தினார். தமிழக எம்.பி.க்கள் குழுவை வரவேற்ற ராஜபக்ஷே, திருமாவளவனை மட்டும் கட்டித் தழுவினார். அத்துடன் நீங்கள் பிரபாகரனோடு தொடர்ந்து இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள். நல்ல வேளையாக தப்பித்துக்கொண்டீர்கள் என கிண்டலடித்தார் ராஜபக்ஷே.

இதைக்கேட்ட உடனிருந்த எம்.பி.இக்கள், என்னமோ நடக்கப்போகிறது என அச்சமடைந்தனர். ஆனால், திருமாவளவன், ராஜபக்ஷேவின் கேலி பேச்சுக்கு பதிலடி கொடுக்காமல் சிரித்துக் கொண்டே அமைதி காத்தது மற்ற எம்.பி.இக்களுக்கு வியப்பாக இருந்தது.

அடையாள அட்டை இல்லாததால் பெரும் பிரச்னை இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் முகாம்களில், அடையாள அட்டை இல்லாதவர்கள் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். இலங்கையில் குடியுரிமை பெற்றவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகள், ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிக்க பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி வந்தனர். அப்போது, போர் முனையிலிருந்து தப்பிச் சென்றுவிடாதபடி தமிழர்களின் அடையாள அட்டையை விடுதலைப் புலிகள் பறித்து வைத்திருந்தனர்.

தற்போது, முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள பல தமிழர்களுக்கு அடையாள அட்டை கிடையாது. அதற்காக அவர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு புகைப்படம் எடுத்து, சேகரிக்கப்படும் முகவரியை அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அடையாள அட்டை நகலோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர். தவறான தகவலை கூறும் தமிழர்கள், விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ என சிங்கள ராணுவத்தினர் பிடித்துச் சென்று தனியாக அடைத்து வைக்கின்றனர். அவ்வாறு 12 ஆயிரம் பேரை பிடித்து தனியாக அடைத்து வைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவத்தால் தான் முகாமில் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...

20 அக்டோபர், 2009

கெக்கிராவயில் மினி சூறாவளி : 40 வீடுகள் பலத்த சேதம்



அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சூறாவளியால் பல வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொரகொல்லாவ, ஹோராப்பொல பகுதிகளிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 40 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சேத விபரங்களைக் கண்டறிய கிராம அதிகாரிகள், மற்றும் சமூக சேவைகள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சூறாவளியால் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் வீழ்ந்துள்ளதால், மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...
ராஜரட்னம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை : இலங்கை மத்திய வங்கி





கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

"பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு 52 வயதான ராஜ்ராஜரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் 'டீ ஆர் ஓ' எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

எனினும் அவர் இந்தக் கழகத்துக்கு நிதியாடலை மேற்கொள்ளும் போது, அது இலங்கையிலோ அல்லது அமெரிக்காவிலோ தடை செய்யப்பட்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பி. கே. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியே, நிதி மோசடி தொடர்பிலான புலானாய்வுகளை மேற்கொள்ளும் பிரதான புலனாய்வு பிரிவாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் ராஜ் ராஜரட்னம் எந்த குற்றச் செயலுடனும் தொடர்புடையவர் அல்லர் என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னரான கட்டுமானப் பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு நிதி வழங்கியுள்ளார்.

எனினும் அந்த அமைப்பு இலங்கையிலும் அமெரிக்காவிலும் 2007ஆம் அண்டு நவம்பருக்கு பின்னரே தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதற்கு அவர் நிதி வழங்கவில்லை என விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ராஜ் ராஜரட்னத்தின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கையின் பங்குகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான தேவை இல்லை எனவும் பங்கு பரிமாற்று ஆணையகத்தின் பணிப்பாளர் சன்னா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப சந்தேகத்துக்கு இடமானமுறையில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னத்தின் கைதைத் தொடர்ந்து இலங்கையின் பங்கு சந்தை நேற்று 3.1 சதவீத வீழ்ச்சியடைந்தது.

உலகின் 559ஆவது கோடீஸ்வரராகத் திகழும் அவருக்கு, விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்காக கடந்த மாதம் இலங்கையின் நீதி அமைச்சு நன்றி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
20.10.09வடக்கைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு : பொலிஸ் மா அதிபர்



யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர், பொலிஸ் சேவையில் கடமையாற்றுவதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்ததாக அரச இணணயத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

"யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.

வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படும்" என்றார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார ஆகியோர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...
.2010.09இலங்கை அரசு தனது உறுதியை மீறியுள்ளது : மனித உரிமைகள் கண்காணிப்பகம்


ஒரு லட்சம் இடம்பெயர்ந்தவர்களை மாத்திரமே இந்த ஆண்டில் மீள் குடியேற்றும் நோக்கம் இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தமது உறுதியளிப்பை மீறி உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 80 சதவீதமான இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் தற்போது ஒரு லட்சம் பேரை மாத்திரம் குடியேற்றுவது நியாயமற்றது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் நிறைவடைந்ததில் இருந்து இதுவரையில் 27,000 பேரை மாத்திரமே அரசாங்கம் விடுவித்துள்ளது. தற்போது பொது மக்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டிய காலம் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையிலேனும் அரசாங்கத்தின் உறுதியளிப்புகள் மீறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி பொது மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த மே மாதம் 7ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளத்தில் 80 சதவீதமான மக்கள் இந்த வருடத்தின் இறுதிக்குள் குடியமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் மே மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் ஊடாக மீள் குடியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.

ஜூலை மாதம் 16ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த வருட இறுதிக்குள் 70 – 80 சதவீதமான மக்களை குடியமர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும் இந்த வருட இறுதியில் ஒரு லட்சம் பேரை மீளக் குடியமர்த்துவதாக அமைச்சர் சரத் அமுனுகம கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி ஸ்தான்புலில் இடம்பெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஒக்டோபர் 16ஆம் திகதி மீள் குடியேற்றத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் 100000 மக்கள் மீளக் குடியமர்த்துவதே எமது திட்டம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அண்மைய ஊகிப்பு அடிப்படையில் முகாம்களில் உள்ள 37 சதவீதமான மக்களே இந்த ஆண்டின் இறுதியில் குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது" என பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

20.10.9தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். குடாவின் துரித அபிவிருத்தியில் 11 அமைச்சர்கள் பங்கேற்பு : அரசு ஏற்பாடு


யாழ். மாவட்ட மீள்குடியமர்வு நவம்பர் நடுப்பகுதியளவில் முடிவுறும் : அரச தரப்பு



முகாம்களில் உள்ள யாழ். மாவட்ட மக்களை மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நவம்பர் மாத நடுப்பகுதியளவில் முற்றுப் பெற்றுவிடும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வந்திருந்த 2 லட்சத்து 82 ஆயிரம் பேரில் இதுவரையில் 55 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையோர் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

முகாம்களில் உள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாளாந்தம் 2 ஆயிரம் பேரை அங்கு அனுப்பி வைப்பதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரான பசில் ராஜபக்ஷவின் தலைமையில்,
அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்றும் அரச தரப்பில்



யாழ். மாவட்டத்தைத் துரிதகெதியில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வடக்கின் வசந்தம் திட்டத் தலைவரான பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் 11 அமைச்சர்களை நேரடியாக அங்கு அனுப்பிப் பிரதேச செயலாளர் மட்டத்தி்ல் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர்களுடனும் இந்த அமைச்சர்கள் இணைந்து பணியாற்றவுள்ளார்கள்.

இதற்கான முதலாவது, ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மகிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திசாநாயக்கா, மகிந்த அமரசேகர, ரோகித அபேவர்தன, ஹுசைன் பைலா, லசந்த அழகியவர்ண, வடிவேல் சுரேஷ், பிரேம்லால் ஜயசேகர, ஜயரட்ண ஹேரத், ஜகத் புஸ்பகுமார, அர்ஜுன ரணதுங்க ஆகிய 11 அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து யாழ். மாவட்டத்தின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு பணிகள் என்வற்றை அவரவருக்கென ஒதுக்கப்பட்ட பிரதேச செயலாளர் மட்டத்தில் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களில் மகிந்தானந்த அலுத்கமகே, ஹுசைன் பைலா, வடிவேல் சுரேஷ், ஜயரட்ண ஹேரத் ஆகிய 4 அமைச்சர்களும் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகவும், ஏனையோர் தலா ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குப் பொறுப்பாகவும் இருந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
20.10.புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை

செய்ய பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கவனத்தில் எடுக்குமாறும், புகலிடக் கோரிக் கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கை க்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரிட்டனின் கொள்கை, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது என்று பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் நீதிமன்னத்திற்கு அறிவித்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர் பெலிங் கியு??.சி இந்த அறிவித்தலை விடுத்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவித்தது. இலங்கைத் தமிழர் ஒருவர், பிரிட்டிஷ் எல்லை பாதுகாப்பு நிறுவனத்தினால் தாம் 2006ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்து தாக்கல் செய்த மேன்முறையீட்டின் மீது தீர்ப்பு வழங்கிய மன்செஸ்டர் மேல் நீதிமன்ற நீதியரசர் மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டார். திரு. பி“ என்று மட்டும் பிரஸ்தாப இலங்கையரின் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் பெலிங் கூறியதாவது: முதலில், மறுபரிசீலனைக்கான ஒரு காரணம் மட்டும் போதாது, யுத்தத்தின் பின்னர் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், அலுவலகம் மறுமதிப்பீடு மேற்கொண்டு வருகிறது என்றும் இது முடியும் வரை புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் அமுல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எல்லை பாதுகாப்பு நிலைய அதிகாரி அன்ரூ பிலிப் சோன்டேர்ஸ் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நடைமுறையில், சில தனிப்பட்டவர்கள் இனம்காணப்பட்ட போதிலும், கடைசியாக ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஒருவர் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் தற்போது வரையும் தருப்பி அனுப்ப திட்டமிடப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.பி தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கிய நீதியரசர் பெலிங் கியூ.சி கொள்கை மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால் தற்öபோதைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்றும் தெரிவித்தார்.

சட்ட விரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்புமாறு பிரிட்டிஷ் வலதுசாரி குழுக்களிடமிருந்து ஆழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் உள்துறை அலுவலகம் எடுத்தள்ள முடிவை அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் சட்ட ஆதரவு சபை பேச்சாளர் பாரர்ட்டியுள்ளார்.

எனினும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த முடிவை பகிரங்கப்படுத்தாதமை குறித்த தமது பெயரை வெளியிட விரம்பாத பிரஸ்தாப பேச்சாளர் கண்டனம் தெரிவித்தார். இதனைப் பகிரங்கப்படுத்தினால் இலங்கையிலிருந்து மேலும் அகதிகள் படையெடுக்கலாமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என்று இந்த பேச்சாளர் பிபிசிக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிரிட்டிஷ் அதிகாரிகள் இரட்டை பேச்சு பேசிவருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய புகலிடம் கோருவோர், அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயலும் அதேவேளை இலங்கை அதிகாரிகள் மனித உர்மைகளை மீறுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுவதாக தெரிவித்தனர்.

இலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தம் காரணமாக புதிதாக வரும் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு பல மேற்கு நாடுகளும் குறிப்பாக அவுஸ்திரேலியாவும் முயற்சி செய்யும் இவ்வேளையில் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு இந்த அறிக்கையை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர் ஸ்தானிகராலயம் கடந்த ஜுலை மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் சுமுகநிலை திரும்பாததால் அந்நாட்டின் புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாமென சகல அரசாங்கங்களிடமும் கேரியிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு வந்து கொண்டிருந்த 260 அகதிகளை கைது செய்ய உதவுமாறு கடந்த வாரம் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் இந்தோனேசிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்கு மன்னப்புக் கோர மீண்டும் மறுத்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையர்கள் என்று கூறப்படம் 76 சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் சென்ற கப்பல் ஒன்று கனடாவின் பசிபிக் கரையோரத்தில் வைத்து பிடி பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...
20.10.09இலங்கை பற்றிய முக்கிய விசாரணை அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியீடு



இலங்கை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய வட்டாரங்களை ஆதாரம் காட்டி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பெருமளவிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான தீர்வைச் சலுகைகளை அது இழந்துவிடும் என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 25 வருட கால யுத்தத்தின் போது, இலங்கை மனித உரிமை மீறல்களிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்த விசாரணைகளின் முடிவை நேற்று வெளியிட்டுள் ளது. இலங்கை அதன் பொறுப்புக்களிலிருந்து மீறிவிட்டது என்று இந்த விசாரணை முடிவு தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த வருட நடுப்பகுதியில் இருந்து புதுப்பிக்கப்பட இருந்த மேலதிக தீர்வைச் சலுகைகளை ரத்துச் செய்வதற்கான சட்ட முறைமையைத் தயாரிக்கும் முயற்சியை தற்போது ஆரம்பிக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று ஆணைக்குழுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் வன்செயல், சித்திரவதை, வயது குறைந்த சிறுவர்களைப் பயன்படுத்தியமை உட்பட தொழிற்சட்ட மீறல்கள் ஆகியன இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் அறிக்கையில் காட்டப்பட்டுள்ளன

. இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையைப் பெறுவதற்கான அடிப்படை மனித உரிமை நிபந்தனைகளையேனும் நிறைவேற்றவில்லை என்று ஆதாரங்களிலிருந்து மிகத்தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை போன்ற மிக வறிய நாடுகளுக்கு இந்தத் தீர்வைச் சலுகை மூலம் சில சந்தர்ப்பங்களில் அறவே தீர்வை அறவிடப்படாததையும் இவ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வர்த்தகத் தீர்வைச் சலுகையைப் புதுப்பிப்பதற்கு இலங்கை, 27 சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களில் குறிப்பிடப்பட்டவற்றை மதித்து நடந்துகாட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குத் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வந்துள்ளது. இந்த வர்த்தகச் சலுகை நிறுத்தப்படுவதால் இலங்கையின் புடைவைக் கைத்தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். இதன் விளைவாக, பெருந்தொகையானோர் வேலையிழக்கவும் நேரிடும்.

2008ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் மிகப்பெரும் ஏற்றுமதிச் சந்தையாக விளங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மொத்த ஏற்றுமதிகளில் 34 சதவீதத்தை இலங்கையே மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, அமெரிக்கா 24 சதவீத ஏற்றுமதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான புடைவை ஏற்றுமதிகளிலிருந்து இலங்கை 3.47 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்தது வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு அதிக அளவிலான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தந்ததும் ஆடை ஏற்றுமதியே ஆகும். இதனையடுத்து, தேயிலை ஏற்றுமதி மூலம் 3 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை பெற்றுக்கொண்டது.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையை ஆணைக்குழு ஆராய்ந்து, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகையை தற்காலிகமாக நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளுக்கு அறிவிப்பது பற்றி நவம்பர் மாத முடிவில் தீர்மானிக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் அங்கத்துவ நாடுகள் மத்தியில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என்று ஆணைக்குழு அதிகாரி ஒரு வர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...